இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் செப்டம்பர் மாதம் 10.2 சதவீதம் வருடாந்திர அடிப்படையில் வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் - நவம்பர் மாதங்கள் இந்தியாவில் விழாக்காலம் என்பதால் அடுத்த 2 மாதங்களும் வரி வசூல் உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வரி வசூலில் செப்டம்பர் மாதம் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய 3 பெரிய மாநிலகங்களை வளர்ச்சி அளவீட்டில் முந்தியுள்ளது. தமிழ்நாட்டின் வரி வசூல் 21 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தெலுங்கானா 33 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தாலும் அதன் மொத்த வரி வசூல் 5,226 கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டின் மொத்த வரி வசூல் 10,481 கோடி ரூபாய்.

இந்த செப்டம்பர் மாதம் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1,62,712 கோடி ரூபாய், இதில் சிஜிஎஸ்டி 29,818 கோடி ரூபாய், எஸ்ஜிஎஸ்டி 37,657 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 83,623 கோடி ரூபாய் இதில் பொருட்களின் இறக்குமதியில் வசூலான 41,145 கோடி ரூபாயும் அடங்கும். மேலும் செஸ் 11,613 கோடி ரூபாய் இதில் பொருட்களின் இறக்குமதியில் வசூலான 881 கோடி ரூபாயும் அடங்கும்.
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டி-க்கு 33,736 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி-க்கு 27,578 கோடி ரூபாயும் மத்திய நிதியமைச்சகம் செட்டில் செய்துள்ளது. இந்த நிதி பிரிப்புக்கு பின்பு செப்டம்பர் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் CGSTக்கு 63,555 கோடி ரூபாயும், SGSTக்கு 65,235 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
2023 செப்டம்பர் மாதம் உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் அளவீடுகளை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 14% அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.60 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது இது 4வது முறையாகும். மேலும் செப்டம்பர் மாதம் மாநில அடிப்படையிலான ஜிஎஸ்டி வரி வசூல் அளவுகள்
- மகாராஷ்டிரா - ரூ.25,137 கோடி - 17% வளர்ச்சி
- கர்நாடகா - ரூ.11,693 கோடி - 20% வளர்ச்சி
- தமிழ்நாடு - ரூ.10,481 கோடி - 21% வளர்ச்சி
- குஜராத் - ரூ.10,129 கோடி - 12% வளர்ச்சி
- ஹரியானா - ரூ.8,009 கோடி - 8% வளர்ச்சி
- உத்தரப்பிரதேசம் - ரூ.7,844 கோடி - 12% வளர்ச்சி
- தெலுங்கானா - ரூ.5,226 கோடி - 33% வளர்ச்சி
- மேற்கு வங்காளம் - ரூ.4,940 கோடி - 3% வளர்ச்சி
- டெல்லி - ரூ.4,849 கோடி - 2% வளர்ச்சி
- ஒடிசா - ரூ.4,249 கோடி - 13% வளர்ச்சி
- ராஜஸ்தான் - ரூ.3,869 கோடி - 17% வளர்ச்சி
- ஆந்திரப் பிரதேசம் - ரூ.3,658 கோடி - 17% வளர்ச்சி
- மத்திய பிரதேசம் - ரூ.3,118 கோடி - 15% வளர்ச்சி
- சத்தீஸ்கர் - ரூ.2,684 கோடி - 18% வளர்ச்சி
- ஜார்கண்ட் - ரூ.2,623 கோடி - 7% வளர்ச்சி
- கேரளா - ரூ.2,505 கோடி - 12% வளர்ச்சி
- பஞ்சாப் - ரூ.1,866 கோடி - 9% வளர்ச்சி
- பீகார் - ரூ.1,397 கோடி - -5% வளர்ச்சி
- உத்தரகாண்ட் - ரூ.1,392 கோடி - 7% வளர்ச்சி
- அசாம் - ரூ.1,175 கோடி - 2% வளர்ச்சி
- ஹிமாச்சல பிரதேசம் - ரூ.784 கோடி - 10% வளர்ச்சி
- ஜம்மு காஷ்மீர் - ரூ.563 கோடி - 32% வளர்ச்சி
- கோவா - ரூ.497 கோடி - 16% வளர்ச்சி
- தாத்ரா மற்றும் டாமன் & டையூ - ரூ.350 கோடி - 12% வளர்ச்சி
- சிக்கிம் - ரூ.315 கோடி - 11% வளர்ச்சி
- சண்டிகர் - ரூ.219 கோடி - 6% வளர்ச்சி
- புதுச்சேரி - ரூ.197 கோடி - 5% வளர்ச்சி
- மைய அதிகார வரம்பு - ரூ.196 கோடி - 8% வளர்ச்சி
- மேகாலயா - ரூ.165 கோடி - 2% வளர்ச்சி
- அருணாச்சல பிரதேசம் - ரூ.81 கோடி - 27% வளர்ச்சி
- திரிபுரா - ரூ.73 கோடி - 13% வளர்ச்சி
- மணிப்பூர் - ரூ.56 கோடி - 47% வளர்ச்சி
- நாகாலாந்து - ரூ.52 கோடி - 5% வளர்ச்சி
- லடாக் - ரூ.35 கோடி - 81% வளர்ச்சி
- மிசோரம் - ரூ.27 கோடி - 14% வளர்ச்சி
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் - ரூ.23 கோடி - 30% வீழ்ச்சி
- லட்சத்தீவு - ரூ.2 கோடி - 45% வீழ்ச்சி
- பிற பகுதிகள் - ரூ.207 கோடி - 2% வளர்ச்சி
வீட்டுக்குக் காப்பீடு அவசியமா..? மத்திய அரசின் Bharat Griha Raksha பாலிசி பலன் என்ன..?
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications