இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின், உயர்மட்ட நிர்வாக குழுவில் தொடர்ந்து பிரச்சனை வெடித்து வருகிறது.
ஒருபக்கம் டாடா சன்ஸ் நிர்வாகம் ஆர்பிஐ விதிமுறைகளுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான பணிகளைச் செய்ய துவங்க முடிவு செய்திருக்கும் வேளையில், டாடா டிரஸ்ட் அமைப்பில் அடுத்தடுத்து இதற்கு முட்டுக்கட்டை போடும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் டாடா ஸ்டீல் மற்றும் டாடா ப்ளே ஆகிய இரு முக்கிய நிறுவனங்களில் மிகப்பெரிய வர்த்தக விற்பனை திட்டம் கையில் எடுக்கப்பட்டு வருகிறது. டாடா குழுமத்தின் நிறுவனங்களில் பல வர்த்தக சீரமைப்பு வர்த்தகம் நடந்து வருகிறது.
டாடா ஸ்டீல் மாஸ்டர் பிளான்
டாடா ஸ்டீல் அதிரடியாக 2 வர்த்தக பிரிவை APL Apollo Tubes நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டு, அந்த நிறுவனத்தில் 52.38 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.
டாடா ஸ்டீல் தனது நிர்வாகம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தில் தனது ஸ்டீல் டியூப் மற்றும் பைப் வர்த்தகத்தையும், Tata Steel Colors நிறுவனத்தையும் மொத்தமாகவும், முழுமையாகவும் 28,000 கோடி ரூபாய்க்கு APL Apollo Tubes நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உள்ளது.
இதன் மூலம் இரு வர்த்தக பிரிவைச் சேர்ந்த அனைத்து தொழிற்சாலை, வர்த்தகம், மார்கெட்டிங் டீம், ஊழியர்கள் என அனைவரும் APL Apollo Tubes நிறுவனத்திற்கு மாற உள்ளது.
அடுத்தாக டாடா ஸ்டீல் நிறுவனம் ஏபிஎல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனத்தில் சுமார் 26.38 சதவீத பங்குகளை 15,510.6 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது, இதோடு கூடுதலாக 26 சதவீத பங்குகளை ஓப்பன் ஆஃபர் முறையில் வாங்கும் திட்டத்தையும் முன் வைத்துள்ளது.
இதன் மூலம் டாடா ஸ்டீல் 2 வர்த்தக பிரிவை விற்பனை செய்தாலும், ஸ்டீல் டியூப் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் APL Apollo Tubes நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கான 52.38 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.
இந்த மெகா ஒப்பந்தம் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என திட்டமிடும் APL Apollo Tubes நிறுவனத்திற்கும் சரி, டவுன்ஸ்ட்ரீம் வர்த்தகத்தைப் பெரியளவில் மேம்படுத்த வேண்டும், அதிக வருமானத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற வேண்டும் என இப்பிரிவு வர்த்தகத்தை வலிமைப்படுத்த வேண்டும் என திட்டம் போடும் மாபெரும் டாடா ஸ்டீல் சாம்ராஜ்ஜியமான டாடா ஸ்டீல்-க்கும் சரி ஜாக்பாட்.
இன்று பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல் பெரும் பகுதி பங்குகளை ஏபிஎல் நிறுவனத்தில் கைப்பற்றப்போவதாக வெளியான செய்தி மூலம் இதன் பங்குகள் 19.27 சதவீதம் சரிந்து 1,715 ரூபாய்க்கு சரிந்துள்ளது.
டாடா ப்ளே
டாடா குழுமத்தில் இயங்கும் நாட்டின் முக்கியமான DTH ஆப்ரேட்டரான டாடா ப்ளே, தனது பிராட்பேன்ட் வர்த்தகத்தை ACT என அழைக்கப்படும் Atria Convergence Technologies நிறுவனத்திற்கு விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சுமார் 6.5 லட்சம் பிராண்ட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கொண்ட டாடா ப்ளே இந்த வர்த்தகத்திற்கு 1500 கோடி ரூபாய் கேட்கிறது.
ஆனால் ACT 800 கோடி ரூபாய் வரையில் அளிக்கத் தயார் என அறிவித்துள்ளது. இதனால் மதிப்பீட்டில் பெரும் குழப்பம் நிலவுகிறது. டாடா ப்ளே பிராண்ட்பேன்ட் பிரிவு 2026ஆம் நிதியாண்டில் 78 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
டாடா சன்ஸ் நிர்வாகம்
டாடா சன்ஸ் நிர்வாகத்தில் என்.சந்திரசேகரனுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க நடத்தப்பட்ட ஆலோசனையில், டாடா டிர்ஸ்ட் வைக்கப்பட்ட மிக முக்கியமாகக் கேள்வி நஷ்டம் ஏற்படுத்தும் வர்த்தகங்கள் குறித்துத் தான். இந்த நிலையில் டாடா குழுமம் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications

