மும்பை பங்குச்சந்தை வரலாற்று உச்சத்தில் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் எந்த நிறுவனம் அதிகப்படியான வருமானத்தைக் கொடுத்துள்ளது என்பது தான் தற்போது அனைவருக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
ஒரு பக்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தடுத்த புதிய வர்த்தகம் மற்றும் பங்கு விற்பனை திட்டம் எதிர்பார்ப்புகள் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. மறுபுறம் அதானி ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வந்த நிலையில் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட 3 FPI கணக்குகள் முடக்கப்பட்ட காரணத்தால் சரிவைச் சந்தித்தாலும் மீண்டும் உயரத் துவங்கியது.
இவ்விரு நிறுவனங்கள் ஓரம்கட்டிவிட்டு டாடா குழுமம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு ஏகப்பட்ட லாபத்தை அளித்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
சென்செக்ஸ் குறியீடு 60,000 புள்ளிகளை எட்டி வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது மட்டும் அல்லாமல், மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதாவது 246 நாட்களில் 10000 புள்ளிகளை உயர்ந்துள்ளது என்ற சாதனையும் படைத்துள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 18,000 புள்ளிகளையும் தொட்டு உள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
இந்தச் சிறப்பான வளர்ச்சியில் நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்கள் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அளவிலான வருமானத்தை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக முதல் கொரோனா அலையில் இருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் மோசமான சரிவைச் சந்தித்த வேளையில் குறைந்த காலகட்டத்தில் மீண்டு வந்துள்ளது.
டாடா குழுமம்
இந்தியாவில் வருவாய் அளவீட்டில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் டாடா குழுமம் தான் மிகப்பெரிய வருமானம் ஈட்டிய (wealth-creator) நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஜனவரி 2021 முதல் டாடா குழுமத்தின் 28 பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சுமார் 40 சதவீத வருமானத்தைக் கொடுத்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா குழுமத்தைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பு 2021ல் மட்டும் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களுக்கு 28 சதவீதம் வருமானத்தைப் பெற்றுள்ளனர்.
டாப் 5 நிறுவனங்கள்
டாடா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமங்கள் முதல் மற்றும் 2வது இடத்தைப் பிடித்துள்ளது நிலையில், பஜாஜ், அதானி, அதித்யா பிர்லா, எல் அண்ட் டி ஆகியவை டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது. இந்த வருடம் அதிகப்படியான வர்த்தகங்களைக் கொண்ட குழுமங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
சென்செக்ஸ் 26% வளர்ச்சி
மேலும் டாடா குழுமத்தில் மொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 85 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேவேளையில் ஹீரோ, இந்தியாபுல்ஸ், பியூச்சர் குரூப் நிறுவனங்கள் கடந்த வருடத்தை விடவும் சரிவைச் சந்தித்துள்ளது. மேலும் சென்செக்ஸ் இந்த ஆண்டு மட்டும் சுமார் 26 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications