விரைவில் ஐபிஓவில் களம் இறங்கும் டாடா நிறுவனம்.. விறுவிறுவென ஏறிய டாடா இன்வெஸ்மென்ட் பங்கு விலை..

உப்பு முதல் சாப்ட்வேர் வரை பல்வேறு வணிகங்களில் கொடி கட்டி பறக்கும் டாடா குழுமத்துக்கு சொந்தமான ஒரு முதலீட்டு நிறுவனம் டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட். இந்நிறுவனம் டாடா குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிதி நிறுவனங்களின் பங்குகளை வைத்துள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த ஏதாவது ஒரு நிறுவனம் ஐபிஓவில் களமிறங்க போகிறது என்ற தகவல் வெளிவந்தால் உடனே டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்கு மீது அனைவரது பார்வையும் திரும்பும். தற்போது டாடா குழுமத்தின் நிதி சேவை நிறுவனமான டாடா கேபிட்டல் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களம் இறங்க போவதாக தகவல் வெளியானது.

நீண்ட காலமாக மிகவும் எதிா்பார்க்கப்பட்ட டாடா கேபிட்டல் ஐபிஓவுக்கு அதன் வாரிய ஒப்புதலை பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்கு விலை 10 சதவீதம் வரை அதிகரித்தது. வர்த்தகத்தின் இறுதியில் இந்நிறுவன பங்கின் விலை 7.28 சதவீதம் உயர்ந்து ரூ.6,168.80ல் முடிவுற்றது. டாடா கேபிட்டல் ஐபிஓ மூலம் டாடா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மறைமுகமாக ஆதாயம் என்று அடையும் என்று கருதப்படுவதே இதற்கு காரணம்.

விரைவில் ஐபிஓவில் களம் இறங்கும் டாடா நிறுவனம்.. விறுவிறுவென ஏறிய டாடா இன்வெஸ்மென்ட் பங்கு விலை..

2022 செப்டம்பரில் இந்திய ரிசர்வ் வங்கி, டாடா கேபிட்டல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை வங்கி அல்லாத நிதி நிறுவனமாக வகைப்படுத்தியது. இந்த மதிப்பீட்டை அடைய கடுமையான விதிமுறை இணக்கம் தேவைப்படும். மேலும், 3 ஆண்டுகளுக்குள் கட்டாயம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பருக்குள் டாடா கேபிட்டல் நிறுவனம் ஐபிஓவை வெற்றிகரமாக நிறைவு செய்து பங்குச் சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட வேண்டும். தற்போது, அதன் ஒரு பகுதியாக டாடா கேபிட்டல் ஐபிஓவுக்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

டாடா கேபிட்டல் ஐபிஓவின் ஒரு பகுதியாக 23 கோடி புதிய பங்குகளை வெளியிடும் என தகவல். தற்போதுள்ள சில பங்குதாரர்கள் ஏல முறை பங்கு விற்பனை வாயிலாக தங்கள் பங்குகளை விற்பனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கேபிட்டல் நிறுவனத்தின் ஐபிஓ நடைபெற்றால், கடந்த 20 ஆண்டுகளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் இரண்டாவது டாடா குழும நிறுவனமாக அது இருக்கும். இதற்கு முன் 2023 நவம்பரில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் வெற்றிகரமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ, டாடா கேபிட்டல் நிறுவனத்தில் 93 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+