இன்னும் இன்னுமா..! தங்கம் விலை அடுத்து இந்த 3 விஷயங்களால்தான் உயரும்..!

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் தங்கத்தின் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர். ஆனால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. டிரம்ப் பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததை அடுத்து தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. தற்போது தங்கத்தின் விலை புதிய உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில், இனி வரும் காலத்திலும் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்ற கணிப்பு மக்களை கதிகலங்க வைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்க கருவூல பத்திரங்கள்,அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க பணவீக்கம் ஆகிய மூன்றும் தங்கம் விலை மேலும் உயருவதற்கு முக்கிய காரணமாக அமையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்னும் இன்னுமா..! தங்கம் விலை அடுத்து இந்த 3 விஷயங்களால்தான் உயரும்..!

அமெரிக்க கருவூல பத்திரங்கள்
அமெரிக்க கருவூல பத்திரங்கள் ஒருவரின் பணத்தை முதலீடு செய்வதற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படுகின்றன. மேலும் எல்லாவற்றிக்கும் மேலாக அமெரிக்க கருவூல பத்திரங்கள் அமெரிக்க அரசாங்கத்தின இறையாண்மை அதிகாரத்தால் ஆதரிக்கப்படுகின்றன. இருப்பினும் ஒரே ஒரு நிகழ்வு, அமெரிக்க கருவூல பத்திரங்கள் மீதான நம்பிக்கையை சிதைத்து விட்டது.

அந்த நிகழ்வு டிரம்பின் வரி விதிப்பு சம்பவம். ஏப்ரல் 9 முதல் வரி விதிப்புகளை அமல்படுத்துவதில் டிரம் பிடிவாதமாக இருந்தார். அதற்கு முந்தைய நாள் அமெரிக்க கருவூல பத்திர சந்தையில் பெரிய அடி விழுந்தது. அன்றைய தினம் அமெரிக்க கருவூல பத்திரங்களில் பெரும் விற்பனை அழுத்தம் இருந்தது. இதனால் பத்திர விலைகள் குறைந்து, வருமானம் கடுமையாக உயர்ந்தது, அன்றைய தினம் 10 ஆண்டு கால அமெரிக்க கருவூல பத்திர வருமானம் 4.5 சதவீதத்தை நோக்கிய உயர்ந்தது, இது ஆறு வார உச்சமாகும்.

இருப்பினும், சீனாவை தவிர்த்து பிற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தயைடுத்து அமெரிக்க கருவூல பத்திர சந்தை நிதானமானது. ஏப்ரல் 8ம் தேதியன்று அமெரிக்க கருவூல பத்திர சந்தையில் விழுந்த பெரிய அடி, பாதுகாப்பான பாரம்பரிய முதலீட்டு புகலிடம் என்ற அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.

இப்போது அமெரிக்க கருவூல பத்திரங்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக தெரிகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை தங்கம் பக்கம் திருப்பி வருகின்றனர்.

அமெரிக்க டாலர்
பங்குகள் முதல் பத்திரங்கள் வரை முதலீட்டாளர்கள் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்று வருகின்றனர். இதன் விளைவாக, உலக நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பை அளவிடும் டாலர் இன்டெக்ஸ் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 109 என்ற அளவிலிருந்து 100க்கு கீழே சரிந்துள்ளது. இது 3 ஆண்டுகளில் இல்லாத குறைவாகும்.

பொதுவாக டாலர் மதிப்பு வீழ்ச்சி கண்டால் தங்கத்தின் விலை அதிகரிக்கும். தற்போது வர்த்தக போர் அமெரிக்கா-சீனா உறவை மையமாகக் கொண்டுள்ளது. இருநாடுகளும் ஒன்றுக்கொன்று கடுமையான வரிகளை விதித்துள்ள நிலையில், சீனா ஒரு படி மேலே சென்றுள்ளது. சீனாவின் மத்திய வங்கி பெரிய கடன் வழங்குநர்கள் டாலர் கொள்முதலை குறைக்க சொன்னதாக கூறப்படுகிறது.

தங்கத்தின் பாதுகாப்பான புகலிட நிலை டாலரின் பலவீனத்தால் பயனடைகிறது. அமெரிக்க டாலரில் ஏற்படும் எந்தவொரு வீழ்ச்சியும் டாலர் அல்லாத சொத்துக்களுடன் ஒப்பிடும்போது தங்கத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.

அமெரிக்க பணவீக்கம்
அமெரிக்காவில் பணவீக்கம் தற்போது குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அங்கு எதிர்பார்த்ததை விட பணவீக்கம் குறைவாக இருந்தது. இது அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான நம்பிக்கையை தட்டி எழுப்பியது. இதுதவிர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வட்டியை குறைக்கும்படி அந்நாட்டு மைய வங்கியின் தலைவர் பவலை வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் தரவுகளை சார்ந்து மட்டுமே வட்டி விகிதத்தை குறைப்பது முடிவு எடுக்க முடியும் என்று திட்டவட்டமாக பவல் தெரிவித்து விட்டார். 2025ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் அமெரிக்க பெடரல் வங்கி 0.50-1 சதவீதம் வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தங்க இடிஎஃப்
உலக நாடுகளின் மத்திய வங்கிகள், தனிநபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஷாப்பிங் பட்டியலில் எப்போதும் தங்கம் இடம் பிடித்து இருக்கும். இது தங்க இடிஎஃப்-களை இயக்கும் பெரிய நிதி நிறுவனங்களையும் விட்டு விடாது. தங்கத்தின் விலையை நெருக்கமாக கண்காணிக்கும் தங்க இடிஎஃப்-களும் தங்கம் கொள்முதல் செய்வதில் விருப்பமாக இருக்கும்.

கடந்த வாரம், உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் காலாண்டில் தங்க இடிஎஃப்கள் அதிகபட்ச முதலீட்டை ஈர்தததாக தெரிவித்து இருந்தது.

சீனாவும்,அமெரிக்காவும் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள். வர்த்தக போர் தீவிரமடைந்தால் உலகளாவிய மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இது முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனம் செலுத்த வழிவகுக்கும்.

பாஜகவின் புதிய தலைவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. கோடியில் புரளும் நயினார் நாகேந்திரன்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+