இன்றைய தங்கம் விலை நிலவரம்.. இன்றும் குறையுமா? இப்போது வாங்கி வைக்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த மூன்று அமர்வுகளிலும் சற்று சரிவினைக் கண்டு இருந்த நிலையில், இன்றும் நேற்றைய முடிவு விலைக்கு கீழ் தான் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக விலை குறையலாம் வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

இது அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவடைந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் குறித்தான நம்பிக்கை உணர்வும் தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு
 

டாலரின் மதிப்பு

கடந்த வாரத்தில் டாலரின் மதிப்பானது ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் அது தங்கத்தினை மிகவும் விலை உயர்ந்த ஆபரணமாகவும் மாற்றியுள்ளது. எனினும் அவ்வப்போது டாலரின் மாற்றத்தினால், தங்கம் விலையானது சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது.

ஆசிய சந்தைகள் ஏற்றம்

ஆசிய சந்தைகள் ஏற்றம்

கொரோனா வைரஸூக்கான தடுப்பூசியானது விரைவில் நடைமுறைக்கு வரலாம் என்ற நம்பிக்கையினால், ஆசிய பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று தங்கம் விலையானது குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது தங்கம் விலையில் எதிர்மறையாக தாக்கத்தினை உண்டாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒப்புதல்

பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒப்புதல்

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு, அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பின்னர் தொற்றில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். இம்முறையில் பிளாஸ்மாவை செலுத்தும் போது உடலில் நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகரித்து கொரோனா தொற்றிலிருந்து மீள இது வழிவகுக்கும் என்றூம் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
 

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையானது சர்வதே சந்தையில் 0.78% அதிகரித்துள்ளது. தற்போது 0.201 டாலர்கள் அதிகரித்து 26.808 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று சந்தை தினங்களாக வெள்ளி விலையானது சரிந்து வந்த நிலையில், இன்று சற்று தொடக்கத்தில் ஏற்றம் கண்டு இருந்தாலும், விலை பெரியளவில் மாற்றம் இல்லாமல் தான் வர்த்தகமாகி வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா வழக்குகள்

அதிகரிக்கும் கொரோனா வழக்குகள்

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் இன்று வரையில் குறைந்ததாக தெரியவில்லை. இந்தியாவில் மட்டும் 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையானது 57,542 ஆக அதிகரித்துள்ளது. இதே உலகம் முழுக்க 2 கோடி 38 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையானது 8 லட்சத்து 16 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. தற்போது 10 கிராமுக்கு 159 ரூபாய் குறைந்து, 51,412 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த நான்கு சந்தை தினங்களாகவே வீழ்ச்சி கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்ப்பித்துள்ளது.

கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளி விலை

கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் எதிரொலியாக, சற்று ஏற்றத்துடன் தான் தொடங்கியுள்ளது. இது தற்போது கிலோவுக்கு 453 ரூபாய் குறைந்து, 66,022 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு சந்தை தினங்களாகவே சரிவில் இருந்த வெள்ளி விலையானது, மீண்டும் இன்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

இனி தங்கம் விலை என்னவாகும்?

இனி தங்கம் விலை என்னவாகும்?

பொதுவாக தங்கத்திற்கு சாதமான விஷயங்கள் என்பது அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்தால், சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம் காண தொடங்கலாம். அப்போது தங்கத்தில் உள்ள முதலீடு குறையலாம். இதன் காரணமாக தங்கம் விலை குறையலாம். இல்லையேல் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டால், விலை குறையலாம். சமீபத்திய தடுப்பூசி குறித்தான அறிவிப்புகள் நம்பிக்கையை கொடுத்து இருந்தாலும், கொரோனாவை முற்றிலும் குணமாக்க கூடிய மருந்துகள் என்பது இதுவரையில் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆக வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் தங்கத்தினை வாங்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் வாங்கலாம்

சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் வாங்கலாம்

ஆக நிபுணர்கள் கூறுவது போல் சரியான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்றும் கருதப்படுகிறது. ஆன சில நிபுணர்களின் கணிப்பு படி தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக எப்போதெல்லாம் சான்ஸ் கிடைக்கின்றதோ? அப்போதெல்லாம் தங்கத்தினை வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Today Gold and silver prices updates, can we buy today?

Gold price update... Gold and silver prices are increase in world market amid rising coronavirus cases
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X