சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இந்த வாரமும் குறையுமா.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு ஆறுதல் கொடுக்க கூடிய முதலீடுகளில் ஒன்று தங்கம் தான். ஏனெனில் உலகமே சரிவினை நோக்கி சென்று கொண்டிருக்க, தங்கம் விலை மட்டும் வரலாறு காண ஏற்றத்தினை கண்டது.

எனினும் கடந்த மாத உச்சத்தில் இருந்து தங்கம் விலையானது 10 கிராமுக்கு, சுமார் 5,500 ரூபாய் வீழ்ச்சியினை கண்டுள்ளது.

இதே போல் வெள்ளியின் விலையும் கடந்த மாதத்தில் கிட்டதட்ட 78,000 ரூபாயினை தொட்டது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமர் 67,481 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது, ஆக வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

எதிர்பார்ப்பு என்ன?
 

எதிர்பார்ப்பு என்ன?

தங்கம் விலையானது இவ்வளவு குறைந்து இருந்தாலும், இனி வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும். விலை குறையுமா? அதிகரிக்குமா? வாங்கலாமா? வேண்டாமா? ஏதேனும் முக்கிய டேட்டாக்கள் உள்ளனவா? என்னென்னா டேட்டாக்கள் உள்ளன. அதனால் தங்கம் விலையில் என்ன மாற்றம் வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

செப்டம்பர் 7 அன்று என்ன டேட்டா?

செப்டம்பர் 7 அன்று என்ன டேட்டா?

செப்டம்பர் மதியம் 2.30 மணிக்கு ஐரோப்பியன் இரண்டாவது காலாண்டு ஜிடிபி விகிதம் வெளியாக உள்ளது.

அன்றே ஜப்பானின் ஜிடிபி விகிதம் வெளியாகவுள்ளது. இது அதிகாலையில் தானே வரப்போகிறது, எனினும் இதன் எதிரொலி சர்வதேச பங்கு சந்தைகளில் எதிரொலிக்கலாம். இந்த விகிதங்களானது நேர்மறையாக வந்தால் பரவாயில்லை. ஆனால் கொரோனாவால் என்ன வருமோ என்ற எதிர்பார்ப்புகள் அதிகம் வருகிறது.

பங்கு சந்தை வர்த்தகம்

பங்கு சந்தை வர்த்தகம்

இதன் காரணமாக பங்கு சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படலாம். ஆக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக தங்கத்தின் பக்கம் மாற வாய்ப்புள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

பொதுவாக எந்த நாட்டு பங்கு சந்தையாக இருந்தாலும், அந்த நாட்டு தரவுகள் சாதகமாக இருப்பின் ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம். ஆக அதுபோன்ற சமயங்களில் காத்திருந்து முதலீடு செய்வது நல்லது.

வேலையின்மை குறித்தான டேட்டா
 

வேலையின்மை குறித்தான டேட்டா

வியாழக்கிழமையன்று வரவிருக்கும் வேலையின்மை குறித்தான டேட்டா, பெரும் அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம். அதோடு ஐரோப்பாவின் மானிட்டரி கூட்டம் நடக்க உள்ள நிலையில், பொருளாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு வட்டி விகிதமே அல்லது வேறு ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வரலாம். அதோடு டெபாசிட் குறித்தான வட்டி விகிதம் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த கூட்டம் வியாழக்கிழமையன்று மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்வுகள்

முக்கிய நிகழ்வுகள்

திங்கள் கிழமையன்று அமெரிக்காவின் லேபர் டே என்பதால் பெரியளவில் மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இதே செவ்வாய்கிழமையன்று இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றி பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. எனினும் இதனால் உடனடி முன்னேற்றம் என்பது இதில் சாத்தியமில்லை.

சீனாவின் வர்த்தகம் தொடர்பான டேட்டா

சீனாவின் வர்த்தகம் தொடர்பான டேட்டா

சீனாவின் வர்த்தகம் தொடர்பான குறியீடு திங்கட்கிழமையன்று வெளியாகவுள்ளது. இது சீனாவின் ஏற்றுமதி குறித்து வெளியாக உள்ள நிலையில், இது நேர்மறையான தாக்கத்தினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சாதரணமாகவே திங்கட்கிழமையன்று முக்கிய டேட்டாக்கள் எதுவும் வெளியாகாது. எனினும் சீனாவின் முன்னேற்றம் ஆசிய நாடுகளின் பங்கு சந்தையில் எதிரொலிக்கலாம்.

வர்த்தக போருக்கு சுமூக தீர்வு

வர்த்தக போருக்கு சுமூக தீர்வு

சர்வதேச அளவில் பல உலக நாடுகள் சரிவினைக் கண்டு வந்தாலும், அது அவ்வளவாக சீனாவினை பாதிக்கவில்லை என்றே கூறலாம். எனினும் அமெரிக்கா சீனா வர்த்தகம் குறித்தான பதற்றம் மட்டுமே அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனினும் அமெரிக்காவின் தேர்தலுக்கு முன்பு இதற்கு சுமூக தீர்வு காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை என்னவாகும்?

தங்கம் விலை என்னவாகும்?

ஆக இதெல்லாம் நடப்பு வாரத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய தரவுகளாக உள்ளன. இவற்றினால் பொருளாதாரத்திற்கு சாதகமான தரவாக இருப்பின், அது நிச்சயம் டாலருக்கு சாதகமாக இருக்கும். இதன் காரணமாக தங்கம் விலையானது குறையலாம். எனினும் இந்த தரவு வெளியாகும் நேரத்தில் அதனை கவனித்து அதற்கேற்றவாறு வர்த்தகம் செய்ய வேண்டும். இந்த டேட்டாக்கள் எதிர்மறையாக வந்தால் தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம். ஒரு வேளை பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தால் விலை குறையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top things to watch this week; how to trade gold price in this week?

This week many of data’s will be released. So wait and watch to trade gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X