இந்தியாவையும் அவங்க வளர்ச்சியையும் பாருங்க..!! அமெரிக்க மத்திய வங்கியை விளாசிய அதிபர் டிரம்ப்..!!

இந்தியாவின் வளர்ச்சியையும் , ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கொள்கைகளையும் சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி இருப்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது. இந்தியாவை பார்த்து கற்று கொள்ளுங்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். அவர் இப்படி கூற காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

இந்தியாவின் 7 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்தையும், அதன் குறைந்த வட்டி விகித கொள்கையையும் சுட்டிக்காட்டி, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் அதிக வட்டி விகிதக் கொள்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவிலும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 15 முதல் 20 சதவீதம் வரை எட்டக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவையும் அவங்க வளர்ச்சியையும் பாருங்க..!! அமெரிக்க மத்திய வங்கியை விளாசிய அதிபர் டிரம்ப்..!!

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நீங்கள் இந்தியாவை பார்த்தால், அங்கு குறைந்த வட்டி விகிதங்கள் உள்ளன, மேலும் அவர்களுக்கு 7 சதவீத ஜிடிபி வளர்ச்சி உள்ளது. நமக்கு 14%, 15%, ஏன் 20% ஜிடிபி கூட கிடைத்திருக்கும். நீங்கள் சிறப்பாகச் செயல்படும்போது ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என கூறியுள்ளார்.

Also Read

டிரம்ப் தொடர்ச்சியாக அமெரிக்க மத்திய வங்கியின் நிதி கொள்கையை விமர்சனம் செய்து வருகிறார். நம் நாட்டில் மிகவும் அரசியல்மயமாக்கப்பட்ட ஃபெடரல் ரிசர்வ் உள்ளது. நாம் நல்ல பொருளாதார புள்ளிவிவரங்களை அறிவிக்கும்போதெல்லாம், அவர்கள் வட்டி விகிதங்களை உயர்த்துகிறார்கள் என சாடியுள்ளார்.

பொருளாதார எண்கள் வலுவாக இருக்கும்போது, நாட்டின் கடன் தகுதி மேம்படுவதாக அர்த்தம், எனவே வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும், உயர்த்த கூடாது ஆனால் இங்கே அப்படியே நேர்மாறாக நடக்கிறது என டிரம்ப் கூறியுள்ளார். வட்டி விகிதத்தில் ஏற்படும் ஒவ்வொரு ஒரு சதவீத மாற்றமும் 650 பில்லியன் டாலர் மதிப்புக்கு இணையானது என்றும், வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் தேசிய கடனை மிக வேகமாக அடைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Recommended For You

வரலாற்று ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இல்லாத காலங்களில்கூட அமெரிக்கா உலகின் மிக குறைந்த வட்டி விகிதங்களை கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். இறக்குமதி வரிகள் அதிகரித்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான புதிய தொழிற்சாலைகள் அமெரிக்காவில் நிறுவப்பட்டு வருவதாகவும், ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித கொள்கைகளுக்கு மத்தியிலும் அமெரிக்கா தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.அடுத்த மாதம் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என சொல்லப்படும் நிலையில் டிரம்ப் இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+