இந்தியாவை சீண்டும் அமெரிக்கா..!! வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா நட்பு நாடு பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர் என ஒரு புறம் கூறுவார், ஆனால் மறுபுறம் இந்தியாவுக்கு எதிரான வேலைகளையே செய்வார். அந்த வகையில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, டிரம்ப் இந்தியா மீது அதிக வரிகளை விதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில் மானியங்கள் மற்றும் அதிகப்படியான உற்பத்தி திறன் தொடர்பான விவகாரத்தில், சீனா, இந்தியா உட்பட 16 நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தயாராகி வருவதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இந்த வாரமே வெளியாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவை சீண்டும் அமெரிக்கா..!! வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதா?

இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் என மொத்தம் 16 நாடுகளின் அரசாங்க மானியங்கள் குறித்து அமெரிக்கா ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு கூடுதலாக இறக்குமதி வரி விதிக்கப்படலாம் என அந்த செய்தி கூறுகிறது.

இந்த புதிய வரிகள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தக மோதல்களை உண்டாக்கும், இதனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஜவுளி, தோல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், உணவு பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் திருப்பூர், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Also Read

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தொழில்களை ஊக்குவிக்க அரசுகள் மானியம் வழங்குகின்றன. இதனால் இந்த நாடுகளின் நிறுவனங்கள் மலிவான விலையில் அதிகப்படியான பொருட்களை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்க்கின்றன. இதனால் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு நியாயமற்ற போட்டி உருவாகி அவர்கள் பின்னடைவை சந்திப்பதாக டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

Recommended For You

இத்தகைய அரசாங்க நிதி உதவிகள் ஆதரவுகள் அதிகப்படியான தொழில் உற்பத்தி திறனுக்கு வழிவகுத்து, உலகச் சந்தைகளை சீர்குலைப்பதாக அமெரிக்கா கூறுகிறது. ஏற்கனவே இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. இதில் கூடுதல் வரி என்பது நிச்சயம் கடந்த காலங்களை போல இந்தியா அமெரிக்கா உறவில் சிக்கலை ஏற்படுத்தும், இந்த ஒப்பந்தம் இறுதியாவை தாமதப்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இந்தியா, சீனா, வியட்நாமில் ஆலைகள் அதிகம், அரசின் மானியங்கள், நிதி உதவிகள் அதிகம் என்பதால் மற்ற நாடுகளை விட இந்த நாடுகளுக்கு வரியின் அளவு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இறுதி முடிவு டிரம்பின் கையில் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே போல இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பு ஏற்றுமதியாளர்கள் பலரும் கோடிக்கணக்கில் இழக்க நேரிட்டது, அதே போன்ற ஒரு சூழல் மீண்டும் வர கூடாது என்பதே ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+