என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டதில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இதன் மூலம் டிரம்ப் பல கோடி ரூபாய் லாபமும் பார்த்திருக்கிறார்.
என்விடியா நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜென்சன் ஹூவாங் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக புகார் எழுந்தது. முதலில் சீன பெண் உளவாளியாக சந்தேகிக்கப்படும் பெண் உடன் உறவில் இருந்ததாக புகார் வந்தது. பின்னர் அலுவலக பெண்கள் சிலருடனும் உறவில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மை தான் என ஜென்சன் ஒப்பு கொண்டதால் என்விடியா தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்டோர் அழுத்தம் தந்து ஜென்சனை மீண்டும் நிறுவன தலைவராக நியமிக்க வைத்துள்ளனர். ஜென்சன் ஹுவாங் மீண்டும் என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, திங்கட்கிழமை அன்று பங்குச்சந்தையில் என்விடியா பங்குகள் தாறுமாறாக உயர்ந்தன.
ஒரே நாளில் என்விடியா பங்கு மதிப்பு 30% உயர்வு கண்டது. இந்த ஏற்றத்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு 15 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 139 கோடியாகும். அதாவது டிரம்ப் கணிசமான பங்குகளை என்விடியாவில் வாங்கி வைத்துள்ளார்.
டிரம்ப் சுமார் 3.7 லட்சம் என்விடியா பங்குகளை வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப் ஒவ்வொரு முறையும் அதிகபட்ச எண்ணிக்கையிலான பங்குகளை வாங்கியதாகவும், குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பங்குகளை விற்றதாகவும் கணக்கிட்டால், அவரது பங்குகளின் அதிகபட்ச மதிப்பு மற்றும் அதன் மூலம் கிடைத்த லாபம் 15 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் எப்போதுமே S&P 500 குறியீட்டில் உள்ள பங்குகளில் அதிக வெயிட்டேஜ் கொண்ட நிறுவனங்களில் அதிக முதலீடு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் என்விடியா அந்த குறியீட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஏற்கனவே டிரம்ப் தனது அதிபர் பதவியை பயன்படுத்தி பங்குச்சந்தை சார்ந்த மோசடிகளில் ஈடுபடுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஈரான் போர், வர்த்தக வரிகள் என குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிடும் முன்னரே அதனால் எந்த பங்குகளில் தாக்கம் ஏற்படும் என்பதை கணித்து அவர் வர்த்தகம் செய்து லாபம் பார்க்கிறார் என ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் ஜென்சன் பதவியேற்பு, என்விடியா பங்கு மதிப்பு உயர்வு ஆகிய சர்ச்சையும் இதில் சிக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

