திரும்ப வந்துட்டேனு சொல்லு: மீண்டும் Nvidia தலைவரானார் ஜென்சன்... எல்லாம் டிரம்ப் செய்த வேலை..!!

ஏஐ சிப்களின் தாய் நிறுவனமாக கருதப்படும் என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி பறிக்கப்பட்ட 10 நாட்களிலேயே அவர் மீண்டும் அந்த பதவியிலேயே அமர வைக்கப்பட்டது எப்படி, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சீன பெண் உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண் உடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல நிறுவனத்திலேயே ஒரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்தார் என சொல்லப்பட்டது. ஜென்சனும் தான் செய்த தவறை ஒப்பு கொண்டார். இதனை அடுத்து என்விடியா நிறுவன பொறுப்புகளில் இருந்து அவர் வெளியேறினார். ஜென்சன் தான் என்விடியாவின் அடையாளம் , அவரே வெளியேறியதால் நிறுவன பங்குகள் தாறுமாறாக சரிவை கண்டன.

திரும்ப வந்துட்டேனு சொல்லு: மீண்டும் Nvidia தலைவரானார் ஜென்சன்... எல்லாம் டிரம்ப் செய்த வேலை..!!

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜென்சன் ஹுவாங்குடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்திய நிறுவன இயக்குநர்கள் குழு அவரை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்துள்ளது. ஜென்சனை மீண்டும் நியமிக்கும் பரிசீலனை எதுவும் இல்லை என இயக்குநர் குழு சில நாட்களுக்கு முன்பு வரை கூறி வந்த நிலையில், அவரை மீண்டும் நியமிக்க முக்கிய நபர் ஒருவர் காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

அவர் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப், இவர் தொடக்கம் முதலே ஜென்சனுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தார். இதற்காக என்விடியா இயக்குநர் குழுவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூறினார். மேலும், ஹுவாங் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அவர் மீண்டும் வருவதில் எந்த தவறும் இல்லை என்றும் தாம் நம்புவதாக டிரம்ப் பேட்டிகளில் கூட கூறினார்.

Also Read

இது தேசிய பாதுகாப்பு விவகாரமாக பார்க்கப்பட்ட நிலையில் அதிபரே இதில் எங்களுக்கு பிரச்சினை ஜென்சன் மீது தங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என என்விடியா இயக்குநர்கள் குழுவுக்கு நம்பிக்கை தந்தாராம். ஜென்சன் அமெரிக்காவின் பொக்கிஷம் அவர் என்விடியாவிற்கு திரும்புவது தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என தெரிவிதாராம்.

டிரம்பை பொறுத்தவரை சீனா மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்திய ஜென்சனை தங்கள் நாட்டிற்கு ஈர்க்க முயற்சித்ததாக சந்தேகித்துள்ளார். அவர் சென்றால் சிப் போட்டியில் அமெரிக்கா தனது முதல் இடத்தை இழந்து விடும் என்ற அச்சமும் எழுந்து ஜென்சனை மீண்டும் தலைவர் பதவியில் அமர வைத்திருக்கிறார்.

Recommended For You

என்விடியா உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனம். இது அமெரிக்க பொருளாதாரத்தில் கணிசமான பங்கினை கொண்டுள்ளது. ஜென்சன் பதவி விலகிய பின் இந்நிறுவன பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் பலரும் தங்களின் முத்லீடுகளை திரும்ப பெறுவதாக நெருக்கடி தந்தனர். அது மட்டுமில்லாமல் ஊழியர்கள் சுமார் 1 லட்சம் பேர் ஜென்சன் தான் எங்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என கூறி மாபெரும் கையெழுத்து இயக்கமே நடத்தினர்.

அதே வேளையில் டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக நிறுவன இயக்குநர் குழுவிடம் பேசி வந்துள்ளனர். இது எல்லாம் மீண்டும் ஜென்சனை என்விடியா தலைவராக அமர வைத்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்த உடனே என்விடியா பங்குகள் 31% உயர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+