இந்திய பங்குசந்தையும் சரி, ரூபாய் மதிப்பு சரி சர்வதேச முதலீட்டு சந்தையின் தாக்கத்தை அதிகம் கொண்டு உள்ளது, அதிலும் அமெரிக்க முதலீட்டு சந்தையின் தாக்கம் அதிகமாக இந்திய சந்தை கொண்டு உள்ளது. இந்த நிலையில் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் எதிர்பார்த்து காத்திருந்து அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு நேற்று இரவு வெளியானதில் இருந்து இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அமெரிக்காவில் பணவீக்க பாதிப்புகள் அதிகமாக இருப்பது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருவதும் தலைவலியாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் எப்போது வட்டி விகிதத்தை குறைக்கும் என தெரியாமல் இருந்த நிலையில் இந்த வாரம் துவங்கி நாணய கொள்கை கூட்டம் துவங்கியது.

இதில் அனைவரும் எதிர்பார்த்தப்படியே நவம்பர் 1 ஆம் தேதி பெடரல் ரிசர்வ் 2023 ஆம் ஆண்டு முடியும் வரையில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 5.25 - 5.50 சதவீதம் என்ற 22 வருட உச்ச அளவை தொடர்ந்து தக்க வைக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 2வது முறையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் பணவீக்க அளவீட்டை 2 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரும் முயற்சியில் தொடர்ந்து செயல்படும் என அறிவித்துள்ளது.
இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தை, இந்திய ரூபாய் மதிப்பு, தங்கம் விலை என அனைத்திலும் எதிரொலித்துள்ளது. இதனால் இன்று இந்திய முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் சிறப்பான ஆள் நீ என்பது போல சிறப்பான நாளாக அமைந்துள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 64,202.64 புள்ளிகளை எட்டியுள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் 63,591 புள்ளிகளை எட்டியுள்ள வேளையில், தற்போது 446.10 புள்ளிகள் உயர்ந்து 64,037.43 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 133.15 புள்ளிகள் உயர்ந்து 19,122.30 புள்ளிகளை எட்டியுள்ளது. அதிகப்படியாக 19,175.25 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 83.44 வரையில் சரிந்த நிலையில், இன்றி 83.22 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்றை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 83.29 வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெடரல் ரிசர்வ்-ன் இரு நாள் நாணய கொள்கை கூட்டம் துவங்கிய கடந்த இரண்டு நாட்களில் 20 டாலருக்கும் அதிகமாக சரிந்துள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2003 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், இன்று 1984 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications