சென்னை: தங்கம் விலையை பொறுத்தவரை பல்வேறு காரணிகளால் ஏற்ற இறக்கங்களை காணும். சர்வதேச சந்தை நிலவரம், அரசியல் சூழல், பொருளாதார நிலை, பெரிய நாடுகளின் மத்திய வங்கிகள் வெளியிடும் அறிவிப்பு என்பன உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். சில்லறை வணிகத்தில் தங்கம் விலை ஏறுவதற்கு சர்வதேச சந்தை நிலவரமும் காரணமாக அமைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் ஏற்றம் கண்டு, 5,810 ரூபாய் ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,338 ஆகவும் உள்ளது.

MCX எனப்படும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் தொடங்கிய போது 10 கிராம் தங்கத்தின் மதிப்பு 62,211 ரூபாய் என இருந்தது. இதுவே நாள் வர்த்தகத்தில் 62,195 ரூபாய் என குறைந்தது. அதே போல மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வெள்ளியின் விலை வர்த்தகம் தொடங்கிய போது ஒரு கிலோ 71,381 ரூபாய் என இருந்தது நாள் வர்த்தகத்தில் 71,334 ரூபாய் குறைந்தது.
ஏப்ரல் 5ஆம் தேதியுடன் முதிர்வடையும் Gold Fututesஇல் 10 கிராமின் 62,237 ரூபாய் என உயர்ந்தது. இது முந்தையதை விடை 70 ரூபாய் உயர்வு. அதே போல மார்ச் 5ஆம் தேதியுடன் முதிர்வடையும் Silver futuresஇல் ஒரு கிலோவின் மதிப்பு 140 ரூபாய் அதிகரித்து 71,395 ரூபாய் என வர்த்தகமானது.
HDFC செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் கமாடிட்டி மற்றும் கரன்சி பிரிவு தலைவரான அனுஜ் குப்தா " நேற்று தங்கம் விலை 0.26% என உயர்ந்தது முடியும் போது 10 கிராமின் விலை 62,167 என இருந்தது. அதே போல வெள்ளி ஒரு கிலோவின் விலை 71,255 என முடிவு பெற்றது" என கூறினார்.
சர்வதேச சந்தைகளை பொறுத்தவரை தங்கத்தின் விலை ஒரு அவுனஸ் 2,021.99 அமெரிக்க டாலர்கள் என இருந்தது. அதே போல வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 23.14 அமெரிக்க டாலர்கள் என வர்த்தகமானது. MOFSL கமாட்டிட்டி மற்றும் கரன்சி ஆய்வாளரான மானவ் மோடி, அமெரிக்க வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு அதிகரிப்பது குறித்த கவலைகள் நிலவுவதால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், உக்ரைன் - ரஷ்யா இடையிலான சண்டை ஆகியவற்றின் காரணமாக அண்மை காலமாக தங்கத்தின் விலை உயர்கிறது, ஆனால் அமெரிக்க வங்கிகளின் வட்டி உயர்வு அறிவிப்புக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர், அதை பொறுத்து விலை மாறும் என தெரிவித்தார்.

கோடக் செக்யூரிட்டிஸ் ஆய்வு அறிக்கையின் படி , மத்திய வங்கிகளின் வலுவான தேவை காரணமாக தங்கத்தின் தேவையும் உயர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மத்திய வங்கி ஐந்தாண்டு கடன் விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்து 3.95% என அறிவித்துள்ளது. கடன் விகிதத்தில் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , கூடுதலாக 10 புள்ளிகளை சீனா குறைத்துள்ளது.
சீனாவில் பொருளாதார மீட்சி என்பது மிகவும் மந்தமாக இருக்கிறது. எனவே சீன மத்திய இந்த அளவுக்கு கடன் விகிதத்தை குறைத்துள்ளது என்கின்றனர் நிபுணர்கள். சீனாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மக்களின் நுகர்வு நிலை பழைய நிலைக்கு திரும்பியுள்ளது எனினும் பொருளாதாரம் மீளவில்லை. எனவே பொருளாதார நிச்சயமற்ற சூழலால் முதலீட்டாளர்கள் மிக கவனமாக உள்ளனர்.
Article written by:Devika
More From GoodReturns

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?



Click it and Unblock the Notifications