தங்கம் கிராமுக்கு 4,500 ரூபாய் தொடலாம்..! ஏன்..?

சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 4,252 ரூபாய் வீதம், இன்று 42,520 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. இது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய விலை ஏற்றம் என்கிறார்கள் பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தை அனலிஸ்டுகள்.

கடந்த ஒரு மாத காலத்தில் மிகக் குறைந்த விலை என்றால்.. அது டிசம்பர் 11, 2019 தான். அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 39,170 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்று 42,520 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆக சுமார் ஒரு மாத காலத்தில் தங்கம் விலை 3,350 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது.

தொடரும்

தொடரும்

தங்கத்தின், இந்த அசுரத் தனமான விலை ஏற்றம், கிராமுக்கு 4,500 ரூபாய் வரை தொடர அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். ஏன் தங்கத்தின் விலை அதிகரிக்கும்..? அதற்கான காரணங்கள் என்ன என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். முதலில் சர்வதேச காரணிகளில் இருந்து தொடங்குவோம்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

பொதுவாக கச்சா எண்ணெய் விலை கூடினால், தங்கத்தின் விலை கூடும். தங்கத்துக்கும், கச்சா எண்ணெய்க்கும் எப்போதுமே ஒரு பாசிட்டிவ் correlation இருந்து வருகிறது. அது இப்போதும் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 11, 2019 அன்று, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 63.72 டாலருக்கு வர்த்தகமானது. இன்று அதே ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 68.50 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க ஈரான் பிரச்சனை

அமெரிக்க ஈரான் பிரச்சனை

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரின் போது தங்கத்தின் விலை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்ததை மறந்து இருக்கமாட்டீர்கள். அதே தான் இப்போது அமெரிக்கா - ஈரான் பிரச்சனையிலும் நடந்து வருகிறது. அதோடு ஈரான் ஒரு எண்ணெய் வளம் கொண்ட நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தங்கத்தின் விலை அதிகரிக்கத் தான் செய்யும்.

அமெரிக்க சந்தை சரிவு

அமெரிக்க சந்தை சரிவு

அமெரிக்க ஈரான் போரால் என்ன பிரச்சனை...? அமெரிக்க சந்தை கடந்த ஜனவரி 03, 2020 அன்று -0.79 % இறக்கத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
ஜனவரி 06, 2020 இன்றைய வர்த்தகத்தில், லண்டனின் எஃப் எஸ் இ -1.05%,பிரான்ஸின் சி ஏ சி -1.27%, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -1.68% சரிந்து இருக்கின்றன. ஐரோப்பிய சந்தைகளைத் தொடர்ந்து ஆசியச் சந்தைகளிலும் ரத்தம் பயங்கரமாகத் தெறித்து இருக்கிறது.

 

 

 

 

தொடர்ச்சி

தொடர்ச்சி

இது தான் சர்வதேச பிரச்சனைகளினால் ஏற்படும் மோசமான விளைவுகள். பங்குச் சந்தை சரிவுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் நிற்கவில்லை. ஆசியாவிலும் பலமாக எதிரொலித்தது. நேற்று இந்தியாவின் சென்செக்ஸ் சுமார் 785 புள்ளிகளும், நிஃப்டி சுமார் 230 புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசியச் சந்தைகள்

ஆசியச் சந்தைகள்

சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ச் நிஃப்டி -1.63%
ஜப்பானின் நிக்கி -1.91%
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் -0.62%
ஹாங்காங்கின் ஹேங்செங் -0.79%
தைவான் நாட்டின் தைவான் வெயிட்டெட் -1.30%
தென் கொரியாவின் கோஸ்பி -0.98%
தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் -1.66%
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் -1.04%
சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -0.01%
என எல்லா ஆசிய சந்தைகளும், நேற்று இறக்கம் கண்டு தான் வர்த்தகமாயின. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் நஷ்டம் என்றால்... யார் பணத்தை முதலீடு செய்வார்கள்.

அதிகரிக்கும் முதலீடு

அதிகரிக்கும் முதலீடு

உலகம் முழுக்க ஒரு நிலையற்ற பொருளாதார சூழல் நிலவிக் கொண்டு இருக்கிறது. இந்த பயத்தினால், பங்குச் சந்தையில் வர்த்தகர்கள் & முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல், பாதுகாப்பான தங்கத்தில் தங்கள் பணத்தைப் போட்டு தஞ்சம் அடைந்து கொண்டிருக்கிறார்களாம். எனவே தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. சுருக்கமாக, தங்கத்தின் மீது பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு பாசிட்டிவ் செண்டிமெண்ட் நிலவுவதாகவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.

மத்திய வங்கிகள்

மத்திய வங்கிகள்

பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என்கிற எண்ணம், தனியாருக்கு மட்டுமல்ல, அரசு வங்கிகள் மற்றும் அமைப்புகளுக்கும் உண்டு. தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, ஆர்பிஐ போன்ற, பல நாட்டு மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்கிறார்களாம். சமீபத்திய உலக தங்க கவுன்சிலின் அறிக்கைப் படி கடந்த 2019-ம் ஆண்டில் தங்கத்தை வாங்கிக் குவித்து இருக்கிறார்களாம்.

பயம்

பயம்

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் உலகின் பல நாட்டு மத்திய வங்கிகள் 224 டன் தங்கத்தை வாங்கிக் குவித்து இருக்கிறார்களாம். ஆக உலக நாடுகளின் மத்திய வங்கிகளுக்கே உலக பொருளாதாரத்தின் மீது இருக்கும் ஒரு வித பயத்தை இது காட்டுவதாகவே இருக்கிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

பொதுவாக, அமெரிக்க டாலரில் தான் நாம் தங்கத்தை இறக்குமதி செய்வோம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். கடந்த ஜூலை 31, 2019 அன்று ஒரு டாலர் = 68.79 ரூபாயாக இருந்தது, இப்போது ஜனவரி 06, 2020 அன்று ஒரு டாலர் = 71.94 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. நமக்கு நஷ்டம். தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

உதாரணம் 1

உதாரணம் 1

கடந்த ஜூலை 31, 2019 அன்று, ஒரு டாலர் = 68.79 ரூபாய். 100 கிராம் தங்கத்தை 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 1000 டாலர் =68,790 (68.79*1000) கொடுத்து வாங்குவோம். அதாவது 68,790 ரூபாய் கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 687 ரூபாய்.

உதாரணம் 2

உதாரணம் 2

ஜனவரி 06, 2020 அன்று, ஒரு டாலர் = 71.94 ரூபாய். அதே 100 கிராம் தங்கத்தை 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 1000 டாலர் = 71,940 (71.94*1000) கொடுத்து வாங்குவோம். அதாவது 71,940 ரூபாய் கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 719 ரூபாய். ஆக 6 மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை (719 - 687) 32 ரூபாய் அதிகரித்து விட்டது. இதற்கு முழு முதல் காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு தான்.

விலை போக்கு

விலை போக்கு

முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதாகச் சொல்லி இருந்தோம். அது விலை ஏற்றம் காணும் என்கிற சென்டிமெண்டையும் தங்க ஃப்யூச்சர்களில் பார்க்க முடிகிறது.
பிப்ரவரி 2020 தங்க ஃப்யூச்சர் 40,577 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
ஏப்ரல் 2020 தங்க ஃப்யூச்சர் 40,772 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
அக்டோபர் 2020 தங்க ஃப்யூச்சர் 40,882 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
டிசம்பர் 2020 தங்க ஃப்யூச்சர் 41,073 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. எனவே இதுவும் விலை ஏற்றத்தைத் உறுதி செய்யும் விதத்தில் தான் காட்டுகிறது.

தங்க விலை அதிகரிக்கலாம்

தங்க விலை அதிகரிக்கலாம்

எனவே கூடிய விரைவில் இது போன்ற உலக பொருளாதார காரணிகளாலும், குறிப்பாக அமெரிக்கா - ஈரானுக்கு மத்தியில் நிலவும் போர் சூழலாலும், தங்கத்தின் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம். போகிற போக்கைப் பார்த்தால், ஒரு வருட சம்பளத்தைக் கொடுத்தால் தான் 10 பவுன் தங்கத்தை வாங்கி திருமணம் செய்ய முடியும் போலிருக்கிறதே..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+