பொருளாதாரம் சார்ந்த இன்றைய உலகில் ஒருவர் செயல் (Active) மற்றும் செயலற்ற (Passive) வருமானம் ஆகிய 2 வழிமுறைகள் வாயிலாகவும் வருவாய் ஈட்டுவது நிகழ் காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செலவுகள் மிகுந்த இன்றைய காலத்தில் ஒருவர் ஒரு வருமானத்தை மட்டும் வைத்துக்கொண்டு காலத்தை தள்ளுவது மலையை கயிறு இழுப்பது போன்றது. இந்த சூழலில் எதிர்பாராத செலவுகள் வந்து விட்டால் குடும்ப தலைவரின் பாடு திண்டாட்டம் தான். ஆகையால் ஒருவர் பல வழிகளில் வருமானம் பெறுவது மிகவும் அவசியம். அதற்கு செயல் மற்றும் செயலற்ற ஆகிய இரண்டு வழிமுறைகளில் வருமானம் ஈட்ட வேண்டும்.

மாத சம்பளம் வாங்குவது, கமிஷன், சுயதொழில் வருமானம் போன்ற நாம் நேரடியாக ஒரு செயலில் ஈடுபட்டு ஈட்டும் வருமானம்தான் செயல் வருமானம். அதேசமயம் வாடகை வருமானம், ராயல்டி மற்றும் பங்குகள் வாயிலாக கிடைக்கும் டிவிடெண்ட் போன்ற நாம் வேலை செய்யாமல் கிடைக்கும் வருமானம் செயலற்ற வருமானமாகும். செயல் மற்றும் செயலற்ற வருமானம் ஆகிய 2 வழிமுறைகளிலும் வருமானம் ஈட்டினால், எதிர்காலத்தில் எந்தவொரு பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் எளிதாக சமாளித்து விடலாம்.
செயல் வருமானத்தின் நன்மைகள்
நிதி ஸ்திரத்தன்மை: வேலை அல்லது சுயதொழில் வாயிலாக கிடைக்கும் வருமானம் நம்மிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் தேவைக்கு உடனடியாக பணமும் கிடைக்கும். அன்றாட செலவுகளை சமாளிக்கவும், நமது நிதி நிலவரத்தை பேணுவதற்கும் செயல் வருமானம் அவசியம்.
சம்பாதிக்கும் திறன்: செயல் வருமான வேலையில் ஈடுபடுவது உங்கள் திறமைகளை மேம்படுத்தும், உங்கள் தொழிலை மேம்படுத்தும் மற்றும் காலப்போக்கில் உங்கள் சம்பாதிக்கும் திறனை அதிகரிக்கும்.
சேமிப்பு மற்றும் முதலீடு: செயல் வருமானம் வாயிலான வருமானம் உங்களை சேமிக்கவும் முதலீடு செய்யவும் தூண்டும். சேமிப்பு உங்களுக்கு பாதுகாப்பாகவும், முதலீடு உங்கள் செல்வத்தை காலப்போக்கில் வளர்ச்சி அடையவும் செய்யும்.
செயலற்ற வருமானத்தின் நன்மைகள்
நேர சுதந்திரம்: செயலற்ற வருமானம் ஈட்ட தினசரி குறைந்த நேரம் ஈடுபட்டாலே போதும். இதனால் உங்களது பொன்னான நேரத்தை குடும்பத்துடன் செலவிட அல்லது புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செல்வம் பெருகும்: செயலற்ற வருமானம் காலப்போக்கில் வளர்ச்சி காணும் திறனை கொண்டது. குறிப்பாக நீண்ட கால செல்வ குவிப்புக்கு பெரிய பங்களிப்பை அளிக்கும்.
பொருளாதார மாற்றங்களுக்கு எதிரான ஹெட்ஜிங்: செயலற்ற வருமான ஆதாரங்கள் பன்முகப்படுத்தப்பட்டால் பொருளாதார வீழ்ச்சிகள் அல்லது வேலை இழப்பு போன்ற இடர்பாடுகளை கட்டுப்படுத்த முயற்சியாக இருக்கும்.
2 வகை வருமானங்களை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை: செயலில் உள்ள வருமானம் உடனடி ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. அதேசமயம் நிலையற்ற வருமானம் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் மீள்தன்மையின் அடுக்கை கொடுக்கும்.
செல்வத்தை பெருக்குதல் மற்றும் நிதி சுதந்திரம்: செயல் மற்றும் செயலற்ற வருவாய் ஆதாரங்கள் வாயிலான வருவாய் நமது செல்வத்தை கட்டியெழுப்புவதை வேகப்படுத்துகிறது மற்றும் நிதி சுதந்திரத்திற்கு அழைத்து செல்லும்.
தகவமைப்பு: செயல் மற்றும் செயலற்ற வருமானங்களை கொண்டிருப்பது உங்கள் நிதி நிலைமையை மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றுகிறது.
இடர் மேலாண்மை: செயல் மற்றும் செயலற்ற வருவாய் ஆதாரங்கள் வாயிலாக வருமானம் ஈட்டுவது இடர்களை நிர்வகிக்க உதவும். எதிர்பாராத சூழ்நிலையில் ஒரு வருமானம் தடைப்பட்டால் மற்றொரு வருமானம் கைகொடுக்கும். உதாரணமாக, வேலை இழப்பு காரணமாக செயல் வருமானம் வாயிலான வருவாய் நின்று விட்டால், செயலற்ற வருமானம் ஆதாரம் வாயிலான தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் இதனால் செயல் மற்றும் செயலற்ற வருமானங்கள் வாயிலாக வருவாய் ஈட்டுவது உங்கள் நிகழ் காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications