சில பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் சமீப காலமாக பங்குச் சந்தையில் ஏற்பட்ட வலுவான ஏற்றத்தாலும்,டிவிடெண்ட் காரணமாகவும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதில் டிவிடெண்ட் செலுத்துதல், சந்தை மூலதனம், பங்கு விலைகள் மற்றும் நீண்ட கால வருமானம் ஆகியவை அடங்கும். இது முதலீட்டாளர்களுக்கு எது அதிக மதிப்பை வழங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
4 வங்கிகளின் சந்தை மதிப்பை பார்த்தால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மதிப்பு அதிகமாக உள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - ரூ.7,21,644.78 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.1,26,364.91 கோடி, பேங்க் ஆஃப் பரோடா ரூ.1,22,535.43 கோடி, கனரா வங்கி - ரூ.1,01,291.96 கோடி. இதனால், ஸ்டேட் பேங்க் ஆஃப் வங்கி அரசாங்க பங்குச் சந்தை வங்கிகளில் (PSB) மிகப் பெரிய சந்தை மதிப்புடைய வங்கியாக இருக்கிறது.

எஸ்பிஐ 2025ஆம் ஆண்டில் ஒரு பங்கிற்கு ரூ.15.90 ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு பங்கிற்கு ரூ.2.90 ஈவுத்தொகையை வழங்கியது. பேங்க் ஆஃப் பரோடா வங்கி ரூ.8.35 ஈவுத்தொகையையும், கனரா வங்கி பங்குதாரர்களுக்கு ரூ.4 ஈவுத்தொகையை வழங்கியது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி ஆகியவற்றின் பங்கு விலைகள் முறையே ரூ.808.60, ரூ.109.95, ரூ.236.95 மற்றும் ரூ.111.67 ஆகும்.
எஸ்பிஐ வங்கி: BSE பகுப்பாய்வுகளின்படி, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI பங்குகள் சமீப காலத்தில் சிறிது சரிவை சந்தித்துள்ளன. ஆனால், நீண்டகாலத்தில் பார்த்தால், இந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு மிகச்சிறந்த வருமானத்தை வழங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பங்குகளின் விலை 0.41% சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 0.79%, கடந்த ஒரு ஆண்டில் 5.61% இழப்பை சந்தித்துள்ளது. இதில் லாபத்தை பார்த்தால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 37.39%, கடந்த 3 ஆண்டுகளில் 65.61%, கடந்த 5 ஆண்டுகளில் 313.24% லாபம், கடந்த 10 ஆண்டுகளில் 198.89% லாபம் பெற்றுள்ளன.
எஸ்பிஐ பங்குகள் குறுகிய காலத்தில் சிறிய விலை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும், நீண்டகால முதலீட்டாளர்கள் அதில் இருந்து மிக அதிக வருமானம் பெற்றுள்ளனர். வளர்ச்சியை மட்டுமே பார்த்து ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது. ஆனால், நீண்ட கால நம்பிக்கை மற்றும் ஒழுங்கான பங்குகள் நல்ல லாபம் தரும் என்பது இது போன்ற விவரங்கள் மூலம் தெளிவாகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி : பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) பங்குகள் சில காலப்பகுதிகளில் சரிவை சந்தித்தாலும், கடந்த 2 முதல் 5 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக பார்க்கும் போது, இழப்பு கூட ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பங்கு விலை 0.72% குறைந்தது. கடந்த ஒரு மாதத்தில் 0.23% குறைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 7.79% குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 24.10% இழப்பை பஞ்சாப் வங்கி சந்தித்துள்ளது. லாபத்தை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளில் + 82.08%, கடந்த 3 ஆண்டுகளில் + 255% லாபம், கடந்த 5 ஆண்டுகளில் + 213.98% லாபம் பெற்றுள்ளன. பஞ்சாய் நேஷனல் வங்கியின் பங்கு அதிக நீண்டகால முதலீட்டில் (10 ஆண்டுகள்) நல்ல ரிட்டர்ன் தரவில்லை. ஆனால், கடந்த 2 முதல் 5 ஆண்டுகளில் விலை மிக வேகமாக வளர்ந்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி : பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்குகள் கடந்த சில மாதங்களில் சில சரிவுகளை சந்தித்தாலும், நீண்டகால முதலீட்டில் மிகப்பெரிய வளர்ச்சியை காட்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இதன் பங்குகள் +2.09% உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 5.11% இழப்பையும், கடந்த ஓராண்டில் 9.13% இழப்பையும் சந்தித்துள்ளது. அதுவே, இரண்டு ஆண்டுகளில் +32.24% வளர்ச்சி அடைந்துள்ளது. 3 ஆண்டுகளில் +140.67% வளர்ச்சியடைந்துள்ளது. 5 ஆண்டுகளில் +539.12% மிகப்பெரிய லாபமும், 10 ஆண்டுகளில் +53.87% வளர்ச்சியும் அடைந்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்கு சமீபமாக (1 முதல் 12 மாதங்கள்) சில சரிவுகளை சந்தித்துள்ளது. ஆனால், நீண்டகால முதலீட்டாளர்கள் இந்த பங்கில் இருந்து பல மடங்கு வருமானம் பெற்றுள்ளனர். குறிப்பாக 5 ஆண்டுகளில் 500% க்கும் மேல் வளர்ச்சி என்பது முக்கியமானது. Bank of Baroda பங்கு குறுகிய காலத்தில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்தாலும், நம்பிக்கையுடன் நீண்ட காலம் காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல தேர்வு ஆக இருக்கக்கூடும்.
கனரா வங்கி : கனரா வங்கியின் பங்குகள் தற்போது சிறிய அளவில் சரிந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் அதிரடியாக வளர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் பங்குகள் 2.14% சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 4.48%, கடந்த ஓராண்டில் 1.97% சரிவை சந்தித்துள்ளது. அதேபோல், 2 ஆண்டுகளில் 68.35% லாபமும், 3 ஆண்டுகளில் 157.78% லாபமும், 5 ஆண்டுகளில் 434.91% லாபமும், 10 ஆண்டுகளில் 96.54% லாபமும் பெற்றுள்ளது. கனரா வங்கியின் பங்குகள் சமீபத்தில் சற்று சரிந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் நான்கு மடங்குக்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. இது, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த லாபம் தரும் பங்காக மாறியிருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications