எரிசக்தி என்பது ஒரு நாட்டின் பொருளாதார இயந்திரத்தை இயக்கும் எரிபொருள். இன்று உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும், இந்த எரிசக்தி போர் களத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட போட்டியிட்டு வருகின்றன. சவுதி அரேபியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் பிரம்மாண்டமான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மூலம் உலக சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
இந்த ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய டாப் 10 எரிசக்தி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா எங்கே நிற்கிறது? இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இந்த வல்லரசுகளுடன் இணையும் அளவுக்கு வளர்ந்துள்ளதா? அல்லது நாம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும்? எரிசக்தி இறக்குமதியில் முன்னணியில் இருக்கும் இந்தியா, தன்னிறைவு நோக்கி நகரும் வேகம் என்ன? உலகின் டாப் 10 எரிசக்தி வரைபடத்தில் இந்தியாவின் தற்போதைய நிலையை பார்க்கலாம் வாருங்கள்.

உலகளாவிய எரிசக்தி சந்தையை சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ, அமெரிக்காவின் எக்ஸான்மொபில், செவ்ரான், பிரிட்டனின் ஷெல் மற்றும் பிரான்ஸின் டோட்டல் எனர்ஜிஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் சந்தை பங்குகளையும் கொண்டுள்ளன.
மேற்கண்ட இந்த நிறுவனங்கள் அனைத்தும் அப்ஸ்ட்ரீம் (எண்ணெய் ஆய்வு மற்றும் உற்பத்தி) மற்றும் டவுன் ஸ்ட்ரீம் (சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல்) என அனைத்து நிலைகளிலும் வலுவாக உள்ளன. இதனிடையே தான் உலக அளவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கையிருப்பு மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளில் பெரும்பாலானவை இந்த நிறுவனங்களின் வசமே உள்ளது.
சந்தை மூலதன அடிப்படையில் டாப் 10 நிறுவனங்களில் சவுதி அராம்கோ 160.66 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் எக்ஸான் மொபில் மற்றும் செவ்ரான் முறையே 57.64 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 34.83 லட்சம் கோடி ரூபாயுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சீனாவின் பெட்ரோ சீனா 29.58 லட்சம் கோடி ரூபாயுடன் 4வது இடத்திலும், இங்கிலாந்தின் ஷெல் நிறுவனம் 22.18 லட்சம் கோடி ரூபாயுடன் 5வது இடத்திலும் உள்ளது.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
அடுத்தடுத்த இடங்களாக சீனாவின் CNOOC 15.72 லட்சம் கோடி ரூபாயுடனும், பிரான்ஸின் டோட்டல் எனர்ஜிஸ் 15.67 லட்சம் கோடி ரூபாயுடனும், அமெரிக்காவின் கோனோகோ பிலிப்ஸ் 13.15 லட்சம் கோடி ரூபாயுடனும், கனடாவின் என்பிரிட்ஜ் 10.82 லட்சம் கோடி ரூபாயுடனும், பிரேசிலின் பெட்ரோபிராஸ் 10.76 லட்சம் கோடி ரூபாயுடன் 10 வது இடத்திலும் உள்ளன.
இதன் மூலம் சவுதி அராம்கோ தான் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான உள்ளதை அறிய முடிகிறது. அதை தாண்டி டாப் 10 இடங்களில் அமெரிக்க நிறுவனங்கள் 10ல் 3 இடம் பெற்றுள்ளன. சீனா நிறுவனங்கள் இரண்டும், மற்ற நிறுவனங்கள் பிற நாடுகளுடையதாகவும் உள்ளன.
இந்திய நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் இல்லை. இருப்பினும் டாப் 100 பட்டியலில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சர்வதேச அளவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. உலகின் டாப் 100 நிறுவனங்களில் இந்தியா சார்பில் மூன்று நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி 49வது இடத்திலும், அதன் சந்தை மதிப்பு 3.38 லட்சம் கோடி ரூபாயாகும். அதையடுத்து இந்தியன் ஆயில் நிறுவனம் 2.27 லட்சம் கோடி ரூபாயுடனும், ஆயில் இந்தியா 1.40 லட்சம் கோடி ரூபாயுடனும் 63வது இடத்தை பிடித்துள்ளது.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
இந்தியாவின் எரிசக்தி துறை கடந்த தசாப்தங்களில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும், உலகளாவிய டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடிப்பதில் இந்தியா இன்னும் ஒரு சவாலான நிலையில் உள்ளது.
இந்தியா தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. ரிலையன்ஸ் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் முதலீடு செய்வதன் மூலம், எதிர்காலத்தில் எரிசக்தி உலகின் புதிய சக்தியாக உருவாகும் முயற்சியில் உள்ளது.


Click it and Unblock the Notifications