சாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. மீண்டும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? வாங்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளாக தடுமாற்றத்தில் காணப்பட்டது. காலை நேர அமர்வில் ஏற்றத்திலும், பிற்பகலில் சரிவிலும் காணப்பட்டது. இதே முந்தைய அமர்வில் தங்கம் விலையானது தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்ட நிலையில், முடிவில் ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் இன்று சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுக்கும் விதமாக சற்று சரிவிலேயே காணப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே முதலீட்டாளர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தொடர்ந்து தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்தது. இது குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது. எனினும் கடந்த இரண்டு தினங்களாக சற்று ஏற்றத்தினை கண்ட நிலையில், நல்ல வாய்ப்பினை மிஸ் பண்ணிவிட்டோமோ என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக இன்று மீண்டும் சரிவினை காண ஆரம்பித்துள்ளது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தற்போது எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் வெள்ளியின் விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்ன? நீண்டகால நோக்கில் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? குறிப்பாக இன்று எப்படி இருக்கும்? முக்கிய லெவல்கள் என்னென்ன? என பலவற்றையும் தற்போது பார்க்கலாம் வாருங்கள்.

Comex தங்கம் விலை நிலவரம்

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாகவே சரிவினைக் கண்டு வந்தது. இதற்கிடையில் தினசரி கேண்டில் பேட்டர்னில் புல்லிங் எங்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது. எனினும் தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 6.35 டாலர்கள் குறைந்து, 1710.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு இன்று தொடக்கத்தில் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

Comex வெள்ளி விலை நிலவரம்

Comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும், கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், கடந்த அமர்வில் பலமான ஏற்றத்தினை கண்டது. எனினும் இன்று நல்ல சரிவில் காணப்படுகிறது. இது தற்போது 1.44% சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.378 டாலர்கள் குறைந்து, 25.805 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 102 ரூபாய் குறைந்து 44,755 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய சந்தையில் தங்கத்தின் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்கலாம். இதே நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்க நல்ல இடமாக பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை நிலவரம்

MCX வெள்ளி விலை நிலவரம்

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 657 ரூபாய் குறைந்து, 66,823 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் டவுன் ஆகி சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இது நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்க நல்ல இடமாக பார்க்கப்பட்டாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 4,215 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 33,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வருட தொடக்கம் முதல் கொண்டே தங்கம் விலையானது சற்று குறைந்து வந்த நிலையில், இது தங்க ஆர்வலர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு தங்கம் விலையானது சவரனுக்கு 34,000 ரூபாய்க்கும் கீழாகவே காணப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், இன்று கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து 4,598 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து, 36,784 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் கடந்த 10 தினங்களில் 5 நாட்கள் ஏற்றம் கண்ட நிலையில்,5 நாட்கள் சரிவினைக் கண்டுள்ளது

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 0.30 பைசா அதிகரித்து 71.40 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு இன்று 300 ரூபாய் அதிகரித்து 71,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த 10 தினங்களில் ஏழு நாட்கள் ஏற்றத்திலும், 3 நாட்கள் சரிவிலும் காணப்படுகிறது.

பங்கு சந்தைகள் ஏற்றம்

பங்கு சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருக்கும் முதலீடுகளை எடுத்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இது அதிகரித்து வரும் பத்திர சந்தை, கொரோனா தடுப்பூசிகள் பற்றிய சாதகமான செய்திகளுக்கு மத்தியில் சந்தையானது ஏற்றம் கண்டு வருகின்றது.

ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள்

ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள்

தங்க வர்த்தகர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகை பற்றிய முக்கிய அறிவிப்புகளுக்காக காத்துக் கொண்டுள்ளனர். அதோடு அதிகரித்து வரும் பத்திர லாபமானது வட்டியில்லா முதலீட்டில் ஆர்வத்தினை குறைத்துள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக டாலரின் மதிப்பும் வலுவடைந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது.

தங்கம் Vs பணவீக்கம்

தங்கம் Vs பணவீக்கம்

ஒரு புறம் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற பயமும் இருந்து வருகின்றது. ஆக பணவீக்கத்திற்கு சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் எப்போதும் இருக்கும். ஆக இன்று தங்கம் விலை குறைந்தாலும், முதலீட்டு தேவையால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம். எனினும் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்பு, டாலர் மதிப்பு அதிக ஏற்றத்தினை தடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

தங்க வர்த்தகர்கள் நாளை நடக்கவிருக்கும் ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்டத்தில், பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் பொருட்டு முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்று கண்கானித்து வருகின்றனர். அதோடு அடுத்த வாரம் நடக்கவுள்ள அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கூட்டத்தினையும் கண்கானித்து வருகின்றனர்.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

தங்கத்தின் விலையானது மீண்டும் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல்கள் 1700 - 1684 டாலர்களாகும். இதே சந்தையானது ஏற்றத்திற்கு திரும்பினால் 1734 - 1750 டாலர்கள் என்பது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாகும். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் 25.88 - 25.55 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 26.50 - 26.80 டாலர்களாகும்.

இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் 44,660 - 44440 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 45,055 - 45,220 ரூபாயாகும். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் விலை 66,800 - 66,200
ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 68,100 - 68,800 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாக காணப்பட்டாலும், காரணிகள் பலவும் தங்கத்திற்கு எதிராக காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் தங்கத்தினை வாங்குவது சற்று ரிஸ்கான விஷயமே. அப்படியே வாங்கினாலும் கண்டிப்பாக ஸ்டாப் லாஸ் என்பதை போட வேண்டும். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். வெள்ளியிலும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

why are gold and silver prices down today, is it right time to buy gold?

Gold price update.. why are gold and silver prices down today, is it right time to buy gold?
Story first published: Wednesday, March 10, 2021, 13:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X