மீண்டும் வரலாற்று உச்சத்தினை எட்டிய தங்கம் விலை.. இனி என்னவாகுமோ?

தங்கம் விலையானது இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தினை உடைத்து புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. இது இன்று 10 கிராமுக்கு 56,245 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இது கடந்த கடந்த ஆகஸ்ட் 2020ல் 56,161 ரூபாயாக உச்சத்தினை எட்டியிருந்தது.

இதே டாலரில் அவுன்ஸுக்கு 1906 டாலரினை எட்டியது. இது தொடர்ந்து 4வது வாரமாக லாபத்தில் முடிவடைந்தது.

கடந்த நவம்பர் மாதத்தில் தங்கம் விலையானது 50,000 ரூபாயில் இருந்து உச்சத்தினை எட்டியது. இது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இது தொடர்ந்து விலை அதிகரித்து வருகின்றது.

பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளது?

பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளது?

தொடர்ந்து பணவீக்க அழுத்தம் இருந்து வரும் நிலையில், அமெரிக்காவில் தொடர்ந்து வட்டி விகிதத்தினை மெதுவாக அதிகரிக்க வழிவகுக்கலாம். அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக சரிவினைக் கண்டுள்ளது. இது பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளதற்கான சிறந்த அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தையும் ஆதரவு

பத்திர சந்தையும் ஆதரவு

கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் விலை பணவீக்கமானது 6.5% ஆக இருந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் டாலரின் மதிப்பானது 114 என்ற லெவலில் காணப்பட்டது. தற்போது 102 என்ற லெவலில் காணப்படுகின்றது. அமெரிக்காவின் பத்திர சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், அதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் நிலையில், இது பணவீக்கத்திற்கு எதிரான தங்கத்தை வாங்கி வைக்க தூண்டியுள்ளது.

அடுத்த முக்கிய லெவல்

அடுத்த முக்கிய லெவல்

எனினும் தற்போது மெதுவாகி வரும் பணவீக்கத்தின் மத்தியில் இது, வட்டி அதிகரிப்பினை மெதுவாக்கலாம். வரவிருக்கும் கூட்டத்தில் 2 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது அவுன்ஸூக்கு1884 டாலருக்கு மேலாக முடிவடைந்தால், அடுத்ததாக 1920 டாலர்களை எட்டலாம்.

நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்

நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்

எப்படியிருப்பினும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனலாம். பணவீக்கம் என்பது குறையத் தொடங்கியிருந்தாலும், பிப்ரவரியில் வட்டி அதிகரிப்பு என்பது நிச்சயம் இருக்கலாம்.

அரசியல் பிரச்சனை

அரசியல் பிரச்சனை

அதோடு மேற்கத்திய நாடுகளில் ரெசசன் அச்சம் இருந்து வரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை, சீனா - தாய்வான் பிரச்சனை என பல அரசியல் பதற்றங்களும் இருந்து வருகின்றது. ஆக இதுவும் தங்கத்தினை வாங்கி ஹோல்ட் செய்ய ஊக்குவிக்கலாம்.

 தேவை அதிகரிக்கலாம்.

தேவை அதிகரிக்கலாம்.

மத்திய வங்கியானது கடந்த நவம்பர் மாதத்தில் 50 டன் தங்கத்தினை வாங்கியுள்ளதாக எம் கே குளோபல் சுட்டிக் காட்டியுள்ளது. இது மேற்கொண்டு வாங்கி வைக்கலாம். இதனால் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம். எனினும் மத்திய வங்கிகளின் நடவடிக்கை, முக்கிய கொள்கைகள் மாற்றம், பணவீக்க அச்சம் உள்ளிட்ட பலவும் தங்கம் விலையில் முக்கிய வகிக்கலாம். எப்படியிருப்பினும் தற்போது தங்கம் விலையானது தற்போதைக்கு ஏற்றம் காணத் தயாராக உள்ளது எனலாம்.

ஆபரண தங்கம்

ஆபரண தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், ஆபரண தங்கம் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்க முதலீட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+