Gold price: தங்கம் விலையானது சவரனுக்கு 1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ? சாமானியர்கள் இனி கனவில் தான் வாங்க முடியுமா என்ற பல கேள்விகள் இருந்து வருகின்றன. இன்று குறையுமா, நாளை குறையுமா அல்லது இப்படியே ஏற்றத்தில் சென்று விடுமா? ஒவ்வொரு நாளும் தங்கத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் எப்படி மாறும். சாமானியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாகவும் உள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் அசாதாரண மாற்றங்கள், உள்நாட்டு தேவையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்த போகிறது, இது தங்கம் வாங்குவதற்கு சரியான நேரமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ஆசிய சந்தையில் சரிவை சந்தித்து வரும் பியூச்சர் தங்கம் விலையானது, தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவில் காணப்படுகிறது. பணவீக்க அச்சத்தின் மத்தியில், வட்டி விகிதம் என்னவாகுமோ என்ற குழப்பமும் இருந்து வருகிறது. இதற்கிடையில் ஈரானுக்கு அடுத்தடுத்து எச்சரிக்கைகளை வாரி குவித்து வரும் டொனால்டு டிரம்ப். மறுபுறம் எதற்கும் அஞ்சாத ஈரான். யாருக்கு விட்டாலும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நிரந்தர தடை விதிப்போம் என ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மிரட்டல் விடுத்துள்ளது. இது மேற்கொண்டு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானுக்கு 48 மணி கெடு விதித்த டிரம்ப், அது நரகத்தை பார்க்கும் என பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தை பார்த்து செல்வதா அல்லது டாலரின் பின்னால் செல்வதா என்ற குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே ஸ்பாட் தங்கம் விலையானது 0.5% குறைந்து, 4,627.91 டாலராக காணப்பட்டது. அமெரிக்க பியூச்சர் சந்தையில் தங்கம் விலையானது 0.7% குறைந்து, 4,652.20 டாலராகவும் காணப்படுகிறது.
ஹார்முஸ் பாதையை திறக்காவிடில் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இன்று மாலை 8 மணி நேரம் வரை தான் காலக்கெடு என்று 48 மணி நேர கெடுவையும் விதித்துள்ளார். இது மத்திய கிழக்கில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. இப்பிரச்சனைகளுக்கு மத்தியில் ஏற்கனவே சர்வதேச எரிபொருள் வர்த்தகமானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு பிரச்சனைகள் அதிகரித்தால், கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏற்றம் காணும். இது எரிபொருள் விலையை அதிகரிக்க வழிவகுக்கும். இது பணவீக்கத்தையும் தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதைக்கு வட்டி விகித குறைப்பு இருக்காது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் 45 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள ஈரான், அதற்கு பதிலாக நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதற்கிடையில் டிரம்பின் காலக்கெடுவும் இன்று முடிவடைய உள்ள நிலையில். பதற்றம் மேலும் தொற்றி கொண்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது பணவீக்கம் குறையாது என்பதையே காட்டுகிறது. இதனால் வட்டி விகிதமும் குறையாது. இதனால் தங்கத்தின் விலை குறையவே அதிக வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக இருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த தரவானது கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது. இது வட்டி விகிதம் குறைக்க வழிவகுக்குமா அல்லது அதிகரிக்க வழிவகுக்குமா என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும்.
எப்படி இருப்பினும் டாலர் மதிப்பானது 100 -தாண்டியுள்ள நிலையில், அது தங்கம் விலையில் இன்று சரிவை காண வழிவகுத்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் சற்று குறைந்து 10 கிராமுக்கு 1,49,625 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது. வெள்ளி விலையானது 1600 ரூபாய்க்கு அருகில் குறைந்து, 2,31,800 ரூபாயாகவும் காணப்பட்டது. இந்த சரிவானது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் அழுத்தத்தில் இருக்கலாம் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் போர் நிறுத்த ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை, பணவீக்க தரவுகள், வட்டி விகித நடவடிக்கை என அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. அவசியம் தேவை என்பவர்கள் மட்டும், ஆபரண தங்கத்தை வாங்கலாம். மற்றவர்கள் டிஜிட்டல் தங்கத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications

