ஒரே ஒரு அறிவிப்பு.. மொத்த உலக நிதி சந்தையுமே தலைகீழாக மாறிவிட்டது. கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றத்தால் தத்தளித்து கொண்டிருந்த முதலீட்டாளர்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொடுத்த அந்த ஒற்றை அறிவிப்பு மிகப்பெரிய நிம்மதியை தந்துள்ளது. அதே வேளையில், தங்கம் விலையில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் உடனான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை மளமளவென உயர்ந்து 3 வார உச்சத்தை தொட்டுள்ளது. விலை குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு இது பேரிடியாக இருந்தாலும், பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுபவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை சரிவு, டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் என பல காரணங்கள் இருந்தாலும், இந்த போர் நிறுத்தம் நீடிக்குமா அல்லது இது வெறும் ஆரம்பம் தானா என்ற கேள்வி தான் இப்போது எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று உயர்ந்துள்ள இந்த விலை உயர்வு, வரும் நாட்களில் எப்படி இருக்கும்? நகை வாங்க இதுதான் சரியான நேரமா? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
பலவீனமான டாலர் மத்தியில் தங்கம் விலையானது இன்று மூன்று வார உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், தங்கம் விலையானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
போர் பதற்றம் குறைந்தால் தங்கம் விலை குறையத்தானே வேண்டும். ஆனால் இன்று ஏன் அதிகரித்துள்ளது என்ற குழப்பமும் பலரிடையே காணப்படுகிறது. இது நகை பிரியர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக போர் நிறுத்த அறிவிப்புகள் வரும்போது பங்குச் சந்தைகள் எகிறும். இதனால் முதலீட்டாளர்கள் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டை குறைத்து, பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் அதிகரிப்பார்கள். ஆனால் இங்கு தலைகீழாக நடந்து கொண்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் போர் நிறுத்த அறிவிப்பின் மத்தியில் டாலரானது பலவீனமடைந்து உள்ளது. டாலர் வீழ்ச்சி அடைந்தால் மற்ற நாட்டு கரன்சிகள் வலுவடையும். இதனால் தங்கம் வாங்குவது மலிவானதாக தோன்றலாம். இதனால் தான் தங்கத்தின் தேவையும் உயர்ந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டதால், கச்சா எண்ணெய் வர்த்தகம் சீராகும் என்ற நம்பிக்கையில் அதன் விலை சுமார் 15% வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவும் மறைமுகமாக தங்கத்தின் முதலீடுகளை அதிகரிக்க தூண்டியுள்ளது.
இருப்பினும் இந்த போர் நிறுத்தம் வெறும் 2 வார காலத்திற்கு மட்டுமே என்பதால், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பெரிய முதலீட்டாளர்கள் இன்னும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாகவே கருதுகின்றனர். ஆக நீண்ட கால அடிப்படையில் தங்கம் இன்னும் ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம். ஒரு வேளை போர் ஒப்பந்தம் வெற்றிகரமாக போடப்பட்டு, போர் நிறுத்தப்பட்டால் அது தங்கம் விலை குறைய வழிவகுக்கலாம். மாறாக போர் மீண்டும் தொடங்கினால் தங்கம் விலை மேலும் விஸ்வரூபம் எடுக்கலாம். ஆக தற்போதைக்கு அவசரப்பட்டு தங்கத்தில் முதலீடுகளை கொட்டுவதை தவிர்ப்பது நல்லது.
நகை வாங்க நினைப்பவர்கள் இந்த 2 வார கால அமெரிக்கா - ஈரான் பேச்சு வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். அவசரமாக வாங்க வேண்டுமானால் இந்த சூழலில் வாங்கலாம். இல்லையேல் காத்திருந்து வாங்குவது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications

