தங்கம் விலை இன்றும் சரிவு.. சாமானியர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..!

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் வாரத்தின் தொடக்க நாளான இன்றே சற்று சரிவில் தான் காணப்படுகின்றது.

இதுவே முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆறுதலை கொடுத்துள்ளது.எனினும் ஆபரண தங்க ஆர்வலர்கள் மத்தியில் இது பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வருகின்றது. இதனால் உணர்வுபூர்வமாக இன்னும் சரியலாமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது, தங்கம் விலையில் முக்கிய பங்காற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக டாலரின் போக்கே தங்கம் விலையில் எதிரொலிக்கலாம். முந்தைய வர்த்தக அமர்வில் டாலரின் மதிப்பானது இரு தசாப்தங்களாக உச்சம் தொட்டிருந்தது. எனினும் உச்சத்தில் இருந்து சற்று டாலரின் மதிப்பானது மெதுவாக பின்னோக்கி தள்ளப்பட்டிருந்தது. எனினும் மேற்கொண்டு டாலரின் மதிப்பானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் அதிகரிக்கலாமோ என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நடபு நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் விலையை 40 - 60 டாலர்கள் வரையில் பேரலுக்கு கட்டுப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்காவின் செயலர் ஜெனட் யெலன் இந்தியாவுக்கு அடுத்த வாரம் வரவிருக்கிறார். இந்த வருகையின் போது ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இந்தியாவிடமும் ஆதரவு கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் வரவிருக்கும் நாட்களில் கச்சா எண்ணெய் விலையில் எதிரொலிக்கலாம்.

அமெரிக்க பணவீக்க தரவு

அமெரிக்க பணவீக்க தரவு

அமெரிக்காவின் பணவீக்க தரவானது இந்த வாரத்தின் வெளியாக உள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். இது இன்று மட்டும் அல்ல இனி வரவிருக்கும் நாட்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தங்கத்தில் புராபிட் புக்கிங் செய்யப்படலாம் என்றும், இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பணவீக்க தரவு மேற்கொண்டு விலையில் பிரதிபலிக்கலாம்.

ஃபெடரல் வங்கியின் கூட்டம்

ஃபெடரல் வங்கியின் கூட்டம்

அமெரிக்காவின் மத்திய வங்கி அதிகாரிகளின் பேச்சு வார்த்தையானது இந்த வாரத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வட்டி விகித அதிகரிப்பு பற்றிய முக்கிய ஆலோசனையும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டமும் தங்கம் விலையில் பிரதிபலிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ரூபாய் Vs டாலர்

ரூபாய் Vs டாலர்

இந்திய ரூபாயின் மதிப்பானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பல நாட்களாகவே வரலாற்று சரிவினைக் கண்டு வருகின்றது. ஆக இதன் சரிவும் தங்கம் விலையும் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.

சர்வதேச சந்தை நிலவரம்?

சர்வதேச சந்தை நிலவரம்?

தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1740.20 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் வெள்ளி விலையானது சற்று குறைந்து, 19.235 டாலராக காணப்படுகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து, 50,773 ரூபாயாக சரிவில் காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 21 ரூபாய் குறைந்து, 57,110 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 4680 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 37,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5105 ரூபாயாகவும், இதே சவரனுக்கு,80 ரூபாய் குறைந்து, 40,840 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,050 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 20 பைசா அதிகரித்து, 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

 

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,800

மும்பை - ரூ.46,950

டெல்லி - ரூ.46,950

பெங்களூர் - 46,980

கோயமுத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,800

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+