3000 ஊழியர்களை மொத்தமாக தூக்கிய Wipro.. AI வந்தால் இவ்வளவு பெரிய முடிவா..?

உலகளவில் அனைத்து நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ரீதியாக மிகப்பெரிய வில்லனாக பார்த்தாலும், பல இடத்தில் நண்பனாக இருந்து வருகிறது.

இதேபோல் ஏஐ மூலம் பணிகளை வேகமாக ஆட்டோமேஷன் செய்ய முடியும் என்பதால் ஒவ்வொரு நிறுவனமும் நீண்ட கால அடிப்படையில் ஏஐ தொழில்நுட்பம் செலவு மிகுந்ததாக இருந்தாலும் களத்தில் இறங்குகிறது.

 3000 ஊழியர்களை மொத்தமாக தூக்கிய Wipro.. AI வந்தால் இவ்வளவு பெரிய முடிவா..?

இதேபோல் ஏஐ தொழில்நுட்பம் புதியது என்பதால் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் தனது டெக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் ஐடி சேவை நிறுவனங்களிடம் மொத்தமாக திட்ட மேம்பாடுகளை கொடுத்து வருகிறது.

அந்த வகையில் பிரிட்டன் நாட்டின் எனர்ஜி நிறுவனமான BP தனது நிதியியல் கட்டமைப்பை மொத்தமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதோடு நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்த ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் அதிகரிக்கவும், நிதியியல் பணிகளை சீர்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இதற்காக விப்ரோ நிறுவனத்திடம் முக்கியமான கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் அனைத்து டெக் மேம்பாட்டு பணிகளையும் விப்ரோ தலைமையில் செயல்படுத்துவதால், BP நிறுவனத்தின் நிதியியல் பிரிவில் பணியாற்றி வரும் 3000 ஊழியர்களையும் மொத்தமாக விப்ரோ நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

Also Read

இதன் மூலம் BP நிறுவனத்துடனான நீண்ட கால திட்டமும், 3000 ஊழியர்களும் விப்ரோவுக்கு மொத்தமாக கிடைத்துள்ளது. மேலும் இந்தியா, ஹங்கேரி, மலேசியா நாடுகளில் இருக்கும் BP நிறுவனத்தின் ஊழியர்கள் விப்ரோவின் பெங்களூர் தலைமையகத்தில் இருந்து பணியாற்ற உள்ளனர்.

இப்புதிய திட்ட மேம்பாட்டு பணிகள் 2027ஆம் ஆண்டில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அக்சென்சர் நிறுவனமும் இதேபோல் திட்டத்தை தான் ஆஸ்திரேலிய நாட்டின் குவான்டாஸ் நிறுவனத்திடம் பெற்றது.

புதிய தொழில்நுட்பத்தில் அனுபவம் சார்ந்த பிரச்சனையின் காரணமாக பல ஜிசிசி நிறுவனங்களின் டெக் பணிகளை ஐடி சேவை நிறுவனங்கள் மொத்தமாக கைப்பற்றி வருகிறது.

Recommended For You

குவான்டாஸ் தனது தொழில்நுட்ப தளத்தை மேம்படுத்தவும், ஏவியேஷன் மற்றும் சுற்றுலாத் துறையில் அதிகரித்து வரும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யும் மிக முக்கியமான டிரான்ஸ்பார்மேஷன் திட்டத்தை அவுட்சோர்ஸ் செய்ய முடிவு செய்து இத்திட்டத்தை அக்சென்சர் நிறுவனத்திற்கு கொடுத்தது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக குவான்டாஸ் நிறுவனத்தின் 850 ஊழியர்களும், பணிகளும் அக்சென்சர் கைக்கு மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+