தங்க நகைகளுக்கு உலகிலேயே இரண்டாவது பெரிய நுகர்வோர் சந்தையைக் கொண்டு உள்ள நாடாக இந்தியா இருக்கும் வேளையில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாகத் தங்க நகை விருப்பத்திலும் தேவையிலும் பெரிய மாற்றம் உருவாகியுள்ளது.
இந்த மக்கள் மத்தியில் நடுத்தர மக்கள் மற்றும் பணக்காரர்கள் எண்ணிக்கையும், சூழலும் பெரிய அளவில் மாறியிருக்கும் வேளையில் இந்தியாவில் இலகுரக அதாவது லைட் வெயிட் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் நகை விருப்பம், நுகர்வுகளிலும் வேகமான மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்று வோல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்க ஏற்றுமதி
இந்தியாவின் தங்க ஏற்றுமதி சந்தை 2015ல் 7.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2019ல் 12.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த தங்க ஏற்றுமதியில் 90 சதவீதம் ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய 5 நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளது.
திருமண நகைகள்
இந்தியாவின் மொத்த தங்க நகை விற்பனையில் திருமணத்திற்கான நகைகள் தான் அதிகளவில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த தங்க நகை விற்பனையில் 50-55 சதவீதம் திருமணத்திற்கான நகைகள் தான்.
பிளையின் தங்க நகைகள்
இதேபோல் 80-85 சதவீத தங்க நகைகள் விற்பனை எவ்விதமான கற்கள் பதிக்கப்படாத பிளையின் தங்க நகைகள் தான், இதில் பெரும்பாலான தங்கநகைகள் 22 கேரட் தான், ஆனால் இந்தியாவில் 18 கேரட் தங்க நகைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
வட இந்தியா
இதேபோல் இந்தியாவில் தங்க விற்பனை வட இந்தியாவைக் காட்டிலும், தென்னிந்தியாவில் தான் அதிகம். தென் இந்தியாவில் இருக்கும் 5 மாநிலத்தில் மட்டும் சுமார் 40 சதவீத தங்க நுகர்வு சந்தையைக் கொண்டு உள்ளது. இதேபோல் வெள்ளி விற்பனையும் சிறப்பாக உள்ளது.
611 டன் தங்க நகைகள்
2021 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய மக்கள் சுமார் 611 டன் தங்க நகைகளை வாங்கி உலகின் 2வது பெரிய தங்க நுகர்வு சந்தையாக உள்ளது. இதேவேளையில் சீனா மக்கள் 673 டன் தங்க நகைகளை வாங்கி முதல் இடத்தில் உள்ளனர்.
வலுவான தூண்
சர்வதேச தங்க சந்தைகளுக்கு இந்தியா ஒரு வலுவான தூணாக உள்ளது. திருமணங்கள் மற்றும் திருவிழாக்களின் போது மக்கள் மத்தியில் உருவாகும் தங்க நகைகளுக்கான தேவையின் இந்தியாவில் தேவையை உருவாக்கும் முக்கிய இயக்கியாக உள்ளது.
தங்கமும், இந்தியாவும்
இந்தியாவில் தங்கம் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று அந்தஸ்து எனப் பல காரணங்களுக்காக அனைத்துத் தரப்பு மக்களும் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் வேளையில் இந்த மார்டன் உலகிலும் தங்கத்தை மக்கள் பல மாறுப்பட்ட காரணத்திற்காகவும் வாங்கி வருகின்றனர்.
வோல்டு கோல்டு கவுன்சில்
மேலும் இந்தியாவில் பெரு நகரங்களைக் காட்டிலும் கிராமப்புற இந்தியாவில் தான் தங்க நகைகளின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக உள்ளது என்று வோல்டு கோல்டு கவுன்சில் அமைப்பின் இந்திய பிராந்திய தலைவரான பி.ஆர்.சோமசுந்தரம் கூறினார்.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications