தங்கம் என்று குழந்தைகளை கொஞ்சும்போது கூட நம்மவர்கள் கூறுவார்கள். அந்தளவுக்கு நம்மவர்களுக்கு பிடித்தமான விலை உயர்ந்த உலோகம் எனலாம்.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலை நிலவரம் நடப்பு ஆண்டில் எப்படியிருந்தது? விலை அதிகரித்திருந்ததா? தற்போது குறைந்துள்ளதா? நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொடலாம் என கூறியிருந்தனர்.
எனினும் இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் எப்படி இருந்தது. இந்திய கமாடிட்டி சந்தையில் எப்படி உள்ளது. ஆபரண தங்கம் விலை நிலவரம் என்ன? இனியும் நிபுணர்கள் சொல்வதனைப் போல் நீண்டகால நோக்கில் அதிகரிக்கத்தான் செய்யுமா? அதிகபட்ச விலை என்ன? குறைந்தபட்ச விலை எவ்வளவு? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.
பெரியளவில் மாற்றமில்லை
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. முந்தைய ஆண்டில் கொரோனாவின் காரணமாக தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது. நடப்பு ஆண்டில் இந்த உச்சத்தினை உடைக்கலாம் என நிபுணர்கள் கணித்தனர். ஆனால் நடப்பு ஆண்டில் அப்படி ஏதும் இல்லை. மாறாக முதல் கட்ட கொரோனா பரவலை காட்டிலும் இரண்டாம் கட்ட பரவலின்போது அதிக தாக்கம் இருந்தது.
ஜனவரியில் உச்சம்
எனினும் 2020ம் ஆண்டினை காட்டிலும் நடப்பு ஆண்டில் பெரியளவிலான தாக்கம் தங்கத்தில் இல்லை எனலாம். 2020 ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வரலாற்று உச்சத்தினை எட்டியது. எனினும் அதன் பிறகு அந்த உச்சத்தினை மீண்டும் இதுவரையில் உடைக்கவில்லை எனலாம். சொல்லப்போனால் அதன் பிறகு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் 1979.9 டாலர்கள் வரையில் அதிகபட்சமாக தொட்டது.
தங்கம் விலை வீழ்ச்சி
ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் நடப்பு ஆண்டின் முதல் வர்த்தக நாளில் 1934.7 டாலர்களாக தொடங்கிய நிலையிக், ஜனவரி மாதத்திலேயே 1979.9 டாலர்களை தொட்டது. எனினும் தொடர்ந்து மேலாகவே இருந்து வந்த தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1680 டாலர்களை தொட்டது. தற்போதைய நிலவரப்படி 1790 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போதைய நிலவரப்படி பார்க்கும்போது 144 டாலர்களுக்கும் மேல் சரிவில் தான் காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு ஜனவரி மாதத்தில் 50,180 ரூபாய் என்ற லெவலில் தொடங்கியது. இது அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 51,857 ரூபாயாக அதிகபட்சமாக தொட்டது. இதே மார்ச் மாதத்தில் 43,621 ரூபாயாக குறைந்தபட்சம் தொட்டது. எனினும் தற்போதைய நிலவரப்படி 47,980 ரூபாய் என்ற லெவலில் வர்த்தகமாகி வருகின்றது.
ஆபரணத் தங்கம் விலை
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக சவரனுக்கு, 39,080 ரூபாயாக இருந்தது. எனினும் மார்ச் மாதத்தில் சவரனுக்கு 33,440 ரூபாயாக இருந்தது. இதே டிசம்பர் மாதத்தில் இன்று சவரனுக்கு 36,312 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒப்பிட்டு பார்க்கும்போது 2768 ரூபாய் குறைந்துள்ளது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் கொரோனா, பணவீக்கம், பொருளாதார சரிவு, ஒமிக்ரான் அச்சம், வட்டி விகிதம் சரிவு, அமெரிக்கா சீனா பதற்றம், டாலர் மதிப்பு, ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications