ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறி வருகிறது. குறிப்பாக ஐடி துறைகளில் வேலை செய்பவர்கள் ஏஐ பயன்பாட்டை நாளுக்கு நாள் அதிகப்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய ஏஐ பயன்பாடு குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு கவனம் பெற்றுள்ளது.
Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஏஐ தொழில்நுட்பம் தன்னை இன்னும் அதிகமாகவும் கடினமாகவும் உழைக்க தூண்டுகிறது என கூறியுள்ளார். அதாவது தான் இல்லாத நேரத்தில் பின்னணியில் ஏதேனும் ஒரு வேலையை செய்ய ஏஐ-ஐ பயன்படுத்தவில்லை என்றால், சிறிய ஓய்வு எடுப்பது கூட நேரத்தை வீணடிப்பது போன்ற உணர்வை தருவதாக அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, ஏஐ-க்கு ஒரு வேலையை கொடுக்காமல் என்னுடைய தனிப்பட்ட வேலைகளுக்காக செல்வது இப்போது கடினமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நடைப்பயிற்சி செல்வதற்கோ, யோகா செய்வதற்கோ அல்லது மதிய உணவு அருந்துவதற்கோ செல்வதற்கு முன்பு, ஏஐ-க்கு ஒரு நீண்ட நேர டாஸ்கை கொடுத்துவிட்டு செல்வதை உறுதி செய்கிறேன். அப்படி செய்யவில்லை என்றால் அந்த நேரத்தை நான் சரியாக பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. பலரும் கவனித்திருப்பது போல, ஏஐ நம்மை இன்னும் கடினமாக உழைக்க வைக்கிறது என கூறியுள்ளார்.
பொதுவாக ஏஐ நேரத்தை சேமிக்கவும் வேலையை எளிதாக்கவும் உருவாக்கப்பட்டாலும், மக்கள் எப்போதும் ஏதேனும் ஒரு பயனுள்ள வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வை தருகிறதோ என்ற கேள்வி இவரது பதிவின் மூலம் எழுந்துள்ளது. அதாவது ஓய்வு எடுக்கும்போது கூட, ஏஐ மூலம் என்ன அடுத்த வேலையை செய்ய வைக்கலாம் என்ற சிந்தனையிலேயே சிலர் சென்றுவிடுகின்றனர். இது புரொடெக்டவிட்டியை மேம்படுத்துகிறது என்பது சிலரது வாதம்.
ஸ்ரீதர் வேம்பு ஏஐ சார்ந்து அண்மை காலமாக பல தகவல்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கணினி சார்ந்த வேலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் தற்போது 10 பேர் செய்யும் வேலையை, ஏஐ பயன்படுத்தும் ஒரு நபரே செய்து முடிக்கும் நிலை உருவாகலாம் என ஸ்ரீதர் வேம்பு ஏற்கனவே எச்சரித்துள்ளார். கணினி சார்ந்த வேலைகளுக்கு பாதுகாப்பு இல்லை அதாவது அந்த வேலையை ஏஐ பறித்து கொள்ளும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
மனிதர்கள் திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக செய்ய கூடிய வேலைகளை ஏஐ கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகிறது. இதனால் தான் எந்த துறையாக இருந்தாலும் அதில் ஏஐ சார்ந்த திறன்க்ளை பெற வேண்டும் என நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

