உங்கள் குழந்தையின் பெயரில் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்டில் (பி.பி.எஃப்) முதலீடு செய்யும் தொகையும் கூட வருமான வரி விலக்குக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், அதில் குவியும் வட்டி தொகைக்கு வரியும் கிடையாது.

இருப்பினும், இதன் ஒட்டுமொத்த வரம்பு, பெற்றோரின் வரம்பான ரூ.1.5 லட்சத்துடன் (வருடத்திற்கு) சேர்த்துக் கொள்ளப்படும். மேலும், குழந்தையின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள காப்பீட்டிற்குக் கட்டப்பட்டுள்ள ப்ரீமியம் தொகைக்கும் பிரிவு 80சி-யின் கீழ் வரி விளக்கு அளிக்கப்படும்.
வளர்ந்த உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பரிசாகக் கொடுப்பதன் மூலமாகவும் கூட வரிகளை மிச்சப்படுத்தலாம். 18 வயதைக் கடந்த உங்கள் குழந்தைக்கு நீங்கள் பரிசாக அளிக்கும் பணத்திற்கு அன்பளிப்பு வரி கிடையாது.

இந்தத் தொகை வருமானமாகக் கருதப்படும். மேலும், உங்கள் குழந்தைக்கு நீங்கள் வட்டியில்லாமல் கடன் அளித்தால், அதன் மீதும் வரி வசூலிக்கப்பட மாட்டாது. அதே போல், 18 வயதைத் தாண்டாத குழந்தைகள் மீதான அறக்கட்டளை, வருமானத்தை இணைப்பதை நீக்கும். 18 வயதைத் தாண்டாத குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்படும் அறக்கட்டளையால் ஒருவர் வரிகளை மிச்சப்படுத்தலாம் என வரி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications