குழந்தையின் பெயரில் முதலீடு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் பெயரில் முதலீடு செய்வதால் வருமானவரி சட்டம் பிரிவு 80 சி-யின் கீழ் ஒருவர் வரி விலக்குகளைப் பெறலாம். ஒருவர் பெண் குழந்தை வைத்திருந்தால், வரி விலக்கைப் பெறவும் அதிக வட்டியைப் பெறவும், சுகன்யா சம்ரித்தி கணக்கில் முதலீடு செய்யலாம்.

 
குழந்தையின் பெயரில் முதலீடு

இந்தத் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 9.2% என்ற வீதத்தில் வட்டி அளிக்கப்படுகிறது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை கட்டலாம். பெண் குழந்தையின் சட்ட ரீதியான அல்லது இயற்கையான பாதுகாப்பாளர் யாரேனும் இந்தக் கணக்கை குழந்தையின் பெயரில் தொடங்கலாம்.

 

இருப்பினும், ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒருவர் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். அதே போல் ஒருவர் அதிகப்படியாக இரு வெவ்வேறு பெண் குழந்தைகளின் சார்பில் இரு கணக்குகளை மட்டுமே திறக்க முடியும்.

குழந்தையின் பெயரில் முதலீடு

குழந்தையின் பிறந்த தேதியில் இருந்து அதற்கு 10 வயது முடிவடைவதற்குள் மட்டுமே இந்தக் கணக்கை திறக்க முடியும். திட்டத்தின் ஆரம்பக் செயல்பாடுகளுக்கு, ஒரு ஆண்டுக் கருணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருணை காலத்தின் படி, டிசம்பர் 2, 2003 மற்றும் டிசம்பர் 1, 2004 இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்த பெண் குழந்தை என்றால் டிசம்பர் 1, 2015-க்குள் கணக்கைத் திறந்து கொள்ள முடியும்.

ஏதாவது ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையான ரூ.1,000-ஐ செலுத்த முடியாமல் போனால், வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தால் அந்தக் கணக்கு செயலிழக்கச் செய்யப்படும்.

ஆனால் அந்த வருடத்தின் வைப்புக்குத் தேவையான குறைந்தபட்ச தொகையான, ரூ.50/- தண்டத்தொகையை (வருடத்திற்கு) கட்டி விட்டு, கணக்கை புதுப்பித்துக் கொள்ளலாம்.

குழந்தையின் பெயரில் முதலீடு

கணக்கின் உடைமையாளருக்கு 18 வயது பூர்த்தியானவுடன், சென்ற வருடத்தின் முடிவில் இருந்த இருப்புத் தொகையில், அதிகபட்சமாக 50%-ஐ பகுதியாகத் திரும்பி எடுத்துக் கொள்ளலாம். குழந்தைக்கு 21 வயது பூர்த்தியானவுடன் இந்தக் கணக்கை மூடிக் கொள்ளலாம்.

முதிர்வு காலத்திற்குப் பின்னர்க் கணக்கை மூடவில்லை என்றால், இந்தத் திட்டத்திற்காகக் காலத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தில் இந்த வைப்புத்தொகை வட்டியைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும்.

இந்தக் கணக்கை முதிர்வு காலத்திற்கு முன்னரே மூட வேண்டும் என்றால் குழந்தைக்கு 18 வயது முடிந்து, திருமணமும் நடந்திருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How investing for parents, children may help you save tax

With over six months into the financial year, most taxpayers are exploring investment options for tax planning purposes. Did you know that by investing in parents' or children's name, not only can you earn higher returns, but also save on taxes?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X