பெண் குழந்தை பிறந்தாலே பல பெற்றோர்களின் மனதில் மகிழ்ச்சியோடு சேர்ந்து, ஒரு மெல்லிய கவலையும் ஒட்டிக்கொள்கிறது. அவள் உயர்கல்விக்கு என்ன செய்வது? திருமண செலவுகளை எப்படி சமாளிப்பது? இந்த கேள்விகள் உங்களை வாட்டுகிறதா? கவலையை விடுங்கள். நீங்கள் தினமும் செலவு செய்யும் ஒரு காபி அல்லது ஸ்நாக்ஸ் விலையில், அதாவது வெறும் 200 ரூபாயில், உங்கள் மகளின் பெயரில் 40 லட்சம் ரூபாய் நிதியத்தை உருவாக்க முடியும் என்றால் நம்புவீர்களா?
மத்திய அரசின் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என கூறப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டமானது, சாமானியர்களுக்கும் எட்டக்கூடிய ஒரு சிறந்த வாய்ப்பு. இதில் வரி சலுகையும் உண்டு. ரிஸ்க்கும் இல்லை. இருப்பது லாபம் மட்டுமே. உங்கள் மகள் வளர்ந்து நிற்கும் போது, பணத்திற்காக யாரிடமும் கையேந்தாமல், அவள் கனவுகளை அவளே நனவாக்க நீங்கள் செய்ய வேண்டிய அந்த முதலீடு என்ன? 40 லட்சத்தை எட்டுவது எப்படி? இதோ விரிவான கணக்கீட்டுடன் தெரிந்து கொள்ளுங்கள்.

நம்மில் பல பெற்றோர்களின் கனவும் நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நம் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்பது தான். குறிப்பாக பெண் குழந்தைகள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அவளுக்கு ஒரு நல்ல கல்வி, திருமணம் என அடுக்கடுக்கான செலவுகள் இருக்கும். அப்படியான கனவுகளை நிறைவேற்ற ஒரு சாமானியனும் எளிதில் அணுகக்கூடிய திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY). இது அஞ்சலக திட்டம் என்பதால் பாதுகாப்பான திட்டமும் கூட. இதில் வரிச் சலுகையும் உண்டு. ஆக இன்றே, ஏன் இப்போதிலிருந்தே முதலீடு செய்யத் தொடங்குங்கள். அதற்கு தினசரி 200 ரூபாய் ஒதுக்கினால் கூட போதுமானது. அதுவே எதிர்காலத்தில் 40 லட்சம் ரூபாய் கார்ப்பஸ்-ஐ உருவாக்க போதுமானது.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
எப்படி ரூ.200 பார்முலா செயல்படும்: ரூ.40 லட்சம் சாத்தியமா:
தினசரி சேமிப்பு - ரூ.200
மாதம் - 200*30= ரூ.6,000
முதலீட்டு காலம் - 21 ஆண்டுகள்
வருமான எதிர்பார்ப்பு - 8.2% வட்டி விகிதம்
21 ஆண்டுகள் கழித்து உங்கள் முதலீடு - ரூ.15,12,000
கிடைக்கும் மொத்த கார்ப்பஸ் - ரூ.40,33,942
ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?
பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், முதல் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் போதும். ஆனால் இந்த சேமிப்பு கணக்கானது 21 ஆண்டுகள் கழித்தே முதிர்வடையும். ஆக மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் உங்கள் முதலீட்டிற்கு வட்டி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். 21 ஆண்டின் இறுதியில் உங்கள் கணக்கு முதிர்வடையும் போது மொத்த தொகையும் கிடைக்கும். இதில் இடையில் பணம் எடுப்பதற்கு சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன.
உங்கள் மகளுக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு அல்லது அவர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, அவரது உயர்கல்வி செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50% வரை பணத்தை எடுத்து கொள்ளலாம் அல்லது மகளுக்கு 18 வயது பூர்த்தியாகி, திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தால், கணக்கை முழுமையாக முடித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இடையில் கணக்கை முடிப்பதற்கும் சில முக்கிய காரணங்களுக்காக அனுமதிக்கப்படுகிறது. எதிர்பாராதவிதமாக குழந்தை இறக்க நேரிட்டால், கணக்கு உடனடியாக மூடப்பட்டு வட்டியுடன் பணம் பெற்றோரிடம் வழங்கப்படும். குழந்தையின் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு, மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படும் நிலையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கை மூடலாம். உங்கள் குழந்தை இந்திய குடியுரிமையை இழந்து வேறு நாட்டுப் பிரஜையாக மாறினால், இந்த கணக்கு உடனடியாக மூடப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications