கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பெரும்பாலும் ரிவார்ட் பாயிண்ட்கள், கேஷ்பேக் என பல கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறி தான் சாமானிய மக்களுக்கு கார்டுகளை விற்பனை செய்கின்றன. உண்மையில் இந்த ரிவார்ட் பாயிண்ட்கள் நமக்கு லாபம் தானா? என்பதை விரிவாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டுகள் பொதுவாக முன் கூட்டியே பணத்தை பயன்படுத்தி கொண்டு பின்னால் அந்த பணத்தை நாம் திரும்ப செலுத்த உதவுகின்றன. கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தி லாபம், பார்ப்பவர்களும் உண்டு சரியாக பயன்படுத்த தெரியாமல் நஷ்டத்தை சந்திப்பவர்களும் உண்டு. பலரும் ரிவார்ட் பாயிண்ட் கிடைக்கிறது அது லாபம் தான் என நினைத்து கார்டினை வாங்குகின்றனர். ஆனால் அதில பல மறைமுக விஷயங்கள் இருக்கின்றன.

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர் என்றால் முதலில் கவனிக்க வேண்டியது, நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் எத்தனை பாயிண்ட்கள் கிடைக்கின்றன என்பதை தான். அடுத்ததாக அந்த பாயிண்ட் எப்படி உங்களுக்கு பண மதிப்பை தரும். உதாரணமாக, ஒரு ரிவார்ட் பாயிண்ட் பயணத்திற்காக பயன்படுத்தும்போது 1 ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கலாம், ஆனால் ஷாப்பிங் வவுச்சர்கள் அல்லது ஸ்டேட்மென்ட் கிரெடிட்டிற்கு பயன்படுத்தும்போது வெறும் 25 பைசா மதிப்பு மட்டுமே கொண்டதாக இருக்கலாம். அதாவது ரிவார்ட் பாயிண்டுகள் உங்களுக்கு எப்படி கன்வெர்ட் ஆகிறது உண்மையில் எவ்வளவு ரூபாயாக மாறுகிறது என்பதை கவனிப்பது அவசியம்.
பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் ரிவார்ட் பாய்ண்டுகளை தந்தாலும் அதனை நாம் எந்த வகையில் பயன்படுத்த முடிகிறது என்பதை கவனிப்பது புத்திசாலித்தனம். இரண்டு கார்டுகள் ஒரே மாதிரியான ரிவார்ட் திட்டங்களை விளம்பரப்படுத்தினாலும், எந்த கார்டில் பாயிண்ட்டின் Redemption Value அதிகமாக உள்ளதோ, அந்த கார்டே உங்களுக்கு கணிசமாக மதிப்பை தரும்.
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் செலவு பிரிவுகளுக்கு ஏற்ப வித்தியாசமாக ரிவார்டுகளை வழங்குகின்றன. பயணம், உணவருந்துவது ,ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றில் அதிக பாயிண்ட்கள் கிடைக்கலாம்; அதேநேரம் கட்டணங்கள் அல்லது எரிபொருளுக்கு குறைவான பாயிண்ட்களே கிடைக்கலாம். உங்கள் மாத செலவின் பெரும்பகுதி அதிக ரிவார்ட் தரும் பிரிவுகளுக்கு வெளியே இருந்தால் இந்த கார்டுகளில் கிடைக்கும் பாயிண்டுகளால் உங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பெரும்பாலான நபர்கள் செய்யும் பெரிய தவறு, தவறு, பாயிண்ட்களை சேர்ப்பதற்காகவே அதிகமாக செலவழிப்பதுதான். குறிப்பிட்ட செலவு இலக்கை எட்டுவதற்காகவோ அல்லது கூடுதல் ரிவார்டுகளை பெறுவதற்காகவோ, உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்குவது எந்த வகையிலும் நல்லது அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தாவிட்டால் பல ரிவார்ட் பாயிண்ட்கள் காலாவதியாகிவிடும் , சில பாயிண்ட்களை எல்லா வகையான பர்சேஸ்களுக்கும் பயன்படுத்த முடியாது, சில கார்டுகள் பாயிண்ட்களை பயன்படுத்தும் போது கட்டணம் வசூலிக்கலாம் அல்லது மாற்ற தொடங்குவதற்கு முன் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பாயிண்ட்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கலாம் என இதில் உள்ள மறைமுக சிக்கல்கள் பல உள்ளன.
கிரெடிட் கார்டில் கிடைக்கும் பாயிண்ட்கள், கேஷ்பேக் உள்ளிட்டவற்றின் மதிப்பும் கார்டுக்கான ஆண்டு கட்டணமும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதனை விட கார்டுக்கான ஆண்டு கட்டணம் அதிகமாக உள்ளது என்றால் முதலில் கார்டை சரண்டர் செய்வது தான் நல்லது என அறிவுரை வழங்குகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

