தங்கத்தினை விற்க போறீங்களா.. இது தான் சிறந்த ஆப்சன்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் பழைய தங்கத்தினை விற்பனை செய்யும் போக்கும் அதிகரித்துள்ளதாக நகைக்கடை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு புறம் பழைய நகையை விற்று புதிய நகையாக வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. அதே சமயம் நிலவி வரும் நெருக்கடி காரணமாகவும் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சரி இப்படி தங்கத்தினை விற்கும்போது எப்படி விற்கலாம்? எது சிறந்த வழி? வாருங்கள் பார்க்கலாம்.

டிசம்பர் மாதம் முதல் 24*7 மணி நேரமும் RTGS சேவை.. ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு..!

தங்கம் விற்பனை
 

தங்கம் விற்பனை

தற்போது பல நிறுவனங்கள் தங்கத்தினை வாங்க உள்ளன. ஆட்டிகா (Attica) மற்றும் டி கோல்டு (D Gold) உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன. இது போன்ற நிறுவனங்கள் உங்களது தங்கதிற்கு உடனடியாக தங்கத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் பணத்தினை கொடுக்க தயாராக உள்ளன. அல்லது கடன் கொடுக்க தயாராக உள்ளன. இந்த நிறுவனத்தில் விற்பனை செய்யும் போது பல நன்மைகளும் உள்ளது.

நகையின் துல்லியனமான அளவு

நகையின் துல்லியனமான அளவு

இங்கு செயல்முறையானது விரைவானது. அதோடு தங்கத்தினை சரிபார்க்கும் பொறிமுறையும் மிக துல்லியமானது. ஏனெனில் இந்த நிறுவனங்களில் ஜெர்மன் தங்க சோதனை இயந்திரங்கள் உள்ளன. அவை எடையை துல்லியமாக அளப்பதற்கு உதவும் சிறந்த ஆப்சனாகும். அதோடு உங்கள் நகையில் உள்ள தங்கம் அல்லாத பிற பொருட்களையும் துல்லியமாக அகற்றி எடைபோடும் திறனுடயவை.

மறைமுக கட்டணங்கள் எதுவும் கிடையாது

மறைமுக கட்டணங்கள் எதுவும் கிடையாது

அதோடு தங்கத்தினை தற்போதைய விலைக்கு வாங்கிக் தயாராக உள்ளன. இங்கு மறைமுக கட்டணங்கள் என்று எதுவும் கிடையாது. அதோடு நகைக்கான தொகையை பணமாகவே அல்லது வங்கிக் கணக்கிலோ செலுத்த தயாராக உள்ளன அதோடு உங்கள் நகைகளின் தரத்தினை உங்களின் கண் முன்னே செக் செய்யப்படுகின்றது. இதனால் உங்களது நகையின் தரத்திற்கு ஏற்ப பணத்தினை பெற்று கொள்ள இது சிறந்த ஆப்சனாக இருக்கும்.

பலரிடம் விசாரியுங்கள்
 

பலரிடம் விசாரியுங்கள்

இவ்வாறு உங்கள் தங்கத்தினை நீங்கள் விற்பனை செய்யும் முன்பு, பல நிறுவனங்களுக்கும் கால் செய்து விவரங்களை கேட்டறியலாம். பொதுவாக நகைக் கடைகளில் சேதமடைந்த நகைளை விற்பனை செய்யும் போது விலை உங்களுக்கு சரியான விலை கிடைக்காது. ஆனால் இதுபோன்ற தங்கத்திற்கு என்று தனித்துவமான நிறுவனங்களில் விற்கும் போது உங்களுக்கு அதிக தொகை கிடைக்கும்.

திருப்தி அளிக்கும் நிறுவனங்களில் விற்பனை செய்யலாம்

திருப்தி அளிக்கும் நிறுவனங்களில் விற்பனை செய்யலாம்

உங்களுக்கும் திருப்தி ஏற்படும். சிலர் நகைகடைகளில் நகைகளை குறைந்த விலைக்கு விற்று விட்டு, பின்னர் வருத்தப்படுவதை விட, ஒன்றுக்கு இரு முறை பல வகையிலும் விசாரித்து, எங்கு உங்களுக்கு அதிக தொகை கிடைக்கும் என்பதனை தெரிந்து கொண்டு விற்பனை செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Are you looking to sell your gold for cash? It’s a best option?

There are many companies specialized for buying gold for cash. likes Attica and D gold have become popular companies in last few years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X