Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

லோன் வாங்க வேண்டும் என்றால் கையில் அடிப்படை கே.ஓய்.சி ஆவணங்களுடன், கட்டாயம் சம்பள சீட்டையும் தான் வங்கிகள் முதலில் கேட்கின்றன. ஆனால், இன்றைய நவீன வங்கிச் சூழலில் சம்பள ஆவணம் மட்டுமே ஒரே வழிமுறை அல்ல. மாத மாதம் சம்பளம் பெறாதவர்கள், ஒரு ஃப்ரீலான்ஸராகவோ, சிறிய கடை வைத்திருப்பவராகவோ அல்லது ரொக்கமாக சம்பளம் பெறும் ஊழியராகவோ நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு கடன் பெறும் தகுதி இருக்கிறது என்பதை வங்கிகள் தற்போது அங்கீகரிக்கின்றன.

சம்பளச் சீட்டு என்பது உங்கள் வருமானத்தை உறுதிப்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அது உங்களிடம் இல்லாத பட்சத்தில், உங்கள் வருமானத்தை நிரூபிக்க இன்னும் பல அதிகாரப்பூர்வ வழிகள் உள்ளன. ஆக நமக்கெல்லாம் லோன் கிடைக்காது என்று தயங்கி நிற்கும் உழைப்பாளிகளுக்காகவும் பல வழிகள் உள்ளன. சம்பளச் சீட்டு இல்லாமலேயே வங்கிக் கடனை பெறுவதற்கு நீங்கள் காட்ட வேண்டிய மாற்று ஆவணங்கள் என்னென்ன? உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க, நீங்கள் செய்ய வேண்டிய எளிய மாற்றங்கள் எவை? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

Salary Slip இல்லாமல் லோன் கிடைக்குமா? இந்த ஆவணங்கள் இருந்தால் ஈஸியா லோன் வாங்கலாம்!

உங்களிடம் சம்பள சீட்டு இல்லை என்றால். கடந்த 6 முதல் 12 மாத கால வங்கி பரிவர்த்தனைகள் உங்கள் வருமானத்தை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த ஆதாரமாகும். ஆக உங்களிடம் சம்பள ஆதாரம் இல்லாத பட்சத்தில் அடுத்ததாக வங்கிகள் முதலில் ஆய்வு செய்வது உங்களுடைய 6 முதல் 12 மாத வங்கி பரிவர்த்தனையை தான். அதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு எவ்வளவு பணம் வருகிறது, எவ்வளவு செலவாகிறது என்பதை கண்டறிவார்கள். நீங்கள் ஒரு ப்ரீலான்சர் ஆக இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறையோ எவ்வளவு பணம் வருகிறது. அது தொடர்ச்சியாக வருகிறது என்பதை வங்கி பரிசீலனை செய்யும். தொகையில் மாற்றம் இருந்தாலும், அது தொடர்ந்து வரவு வைக்கப்படுகிறதா என்பதை பார்க்கும். உங்கள் வங்கி கணக்கில் சில வரவுகள் மட்டுமே செய்யப்பட்டிருந்தால், அதை வங்கிகள் ரெகுலர் வருமானமாக எடுத்துக் கொள்ளாது. லோனுக்கு ஒப்புதல் கிடைப்பதும் கடினம்.
ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?
இதே நீங்கள் ஒரு தொழில் முனைவோர் எனில், கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளின் வருமான வரி தாக்கல் நகல்கள் கேட்பார்கள். இது சம்பள சீட்டையும் விட மதிப்பான ஒன்று. இதே நீங்கள் ஒரு சிறு வணிகராக இருக்கும் சூழலில், உங்களிடம் ஜிஎஸ்டி, இன்வாய்ஸ்கள், நிதி அறிக்கைகள் கேட்கப்படலாம். இதன் மூலம் உங்கள் வருமானம், அது சீரானதா என்பதையும் வங்கிகள் தெரிந்து கொள்ளும்.

மருத்துவர்கள், கன்சல்டன்ட்கள் அல்லது கட்டிட கலைஞர்கள் போன்றவர்கள், வாடிக்கையாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள், பில்லிங் பதிவுகள் போன்றவை கேட்கப்படலாம்.
வரலாறு திரும்புமா? 300% வரை எகிறிய ஆயில் விலை! ஈரான் புரட்சி முதல் லிபிய போர் வரை: விரிவான அலசல்!
மேற்கண்ட அம்சங்கள் உங்களிடம் எதுவும் இல்லாத பட்சத்தில் வங்கிகள் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை பிணையமாக வைத்து கடன் கொடுக்கின்றன. அதுவும் உங்கள் சொத்து மதிப்பின் அடிப்படையில் இருக்கும். இங்கு உங்களிடம் இருக்கும் ஆவணங்களை விட வங்கிகள் சொத்தின் மதிப்பையே முதலில் கவனிக்கின்றன. இதன் மூலம் ஆவண சிக்கல்கள் குறையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+