சொத்து யாருக்கு சேர வேண்டும் என்பதில் பல குடும்பங்களில் மகாபாரத போரே நடப்பதை கண்டிருப்போம். வழக்கமாக வழக்கறிஞர் அலுவலகம் சென்று, ஸ்டாம்ப் பேப்பரில் தட்டச்சு செய்து, முறைப்படி பதிவு செய்தால் தான் ஒரு உயில் சட்டப்படி செல்லும் என்று நம்மில் பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அவசர காலத்தில் அல்லது ஒரு இக்கட்டான சூழலில், நீங்கள் ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் உங்கள் கைப்பட எழுதும் ஒரு உயிலுக்கு மிகப்பெரிய சட்ட பலம் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் படி, கைப்பட எழுதிய உயில் செல்லுபடியாகுமா? அதில் சாட்சிகள் கையெழுத்து அவசியமா? ஒருவேளை அந்த உயில் பதிவு செய்யப்படவில்லை என்றால் நீதிமன்றம் அதை ஏற்குமா? உங்கள் சொத்துக்களை பாதுகாக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த முக்கியமான சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.

உங்களுடைய தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவர் ஒரு வெள்ளைத் தாளில் தனது விருப்பங்களை எழுதி, அதற்கு உயில் என்று தலைப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார். ஆனால் பெற்றோர் இருவரும் இறந்து விட்ட நிலையில், அந்த பதிவு செய்யப்படாத உயில் செல்லுமா?
இந்திய வாரிசுரிமை சட்டம் 1932-ன் படி, ஒரு உயிலை ஸ்டாம்ப் பேப்பரில் தான் எழுத வேண்டும் என்றோ அல்லது முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்றோ எந்த கட்டாயமும் இல்லை. உயிலுக்கு என்று எந்த பிரத்யேக படிவமும் கிடையாது. ஆக ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட உயிலும் செல்லும்.
ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?
இந்திய வாரிசுரிமை சட்டம் 1925 பிரிவு 63-ன் படி, ஒரு உயில் செல்லுபடியாக வேண்டுமென்றால் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒன்று அதில் உயில் எழுதுபவர் கையெழுத்திட்டு இருக்க வேண்டும். இரண்டாவது குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் ஆவது கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.
ஒரு வேளை உயில் எழுதுபவர் கையெழுத்திட்டு இருந்தாலும், அதில் சாட்சி கையெழுத்து இல்லாமல் இருந்தால் அது செல்லாது. அது ஒரு சட்டப்பூர்வ உயில் ஆகாது. ஆக உங்கள் தாய் அல்லது தந்தை வேறு எந்த உயிலையும் விட்டு செல்லவில்லை என்றால், அவர் உயில் எழுதாமல் காலமானவராகவே கருதப்படுவார். அத்தகைய சூழலில் அவருடைய சொத்துக்கள் வாரிசுரிமை சட்டப்படி அனைத்து வாரிசுகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
உதாரணத்திற்கு ராஜா என்பவர் தன்னுடைய ஒரு நோட்டு புத்தகத்தில், என் வங்கிக் கணக்கில் உள்ள பணம் என் மகளுக்கு சேர வேண்டும் என்று எழுதி கையெழுத்திடுகிறார். அப்போது அங்கிருந்த பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் ஒரு உறவினர் என இருவர் சாட்சிகளாக கையெழுத்திடுகின்றனர். இது சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை என்றாலும், சாட்சிகள் இருப்பதால் இது செல்லுபடியாகும். மாறாக அதே ராஜா அந்த நோட்டை யாரிடமும் காட்டாமல், சாட்சி கையெழுத்தும் இல்லாமல் இருந்தால், அது சட்டப்படி செல்லாத உயிலாகவே பார்க்கப்படும்.
ஒருவர் உயில் எதுவும் எழுதாமல் மறைந்தால், அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தால் அந்த சொத்து மூவருக்கும் சமமாக பிரிக்கப்படும். ஒரு பிள்ளை மட்டும் அப்பா என்னிடம் வாய்மொழியாக சொன்னார் என்றோ அல்லது சாட்சிகள் இல்லாத துண்டு சீட்டை காட்டினாலோ சட்டம் அதை ஏற்காது.


Click it and Unblock the Notifications