தங்கத்தினை எப்படி எல்லாம் வாங்கலாம்.. விற்றாலும் வரி கட்ட வேண்டுமா? எவ்வளவு வரி? விவரங்கள் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களின் உணர்வுகளோடும், பாரம்பரியத்தோடும் கலந்துள்ள தங்கம், அவர்களின் முதலீட்டு திட்டங்களில் முதல் வரிசையில் உள்ளன.

 

ஏனெனில் அதன் சந்தை மதிப்பு எப்போதுமே வளர்ந்து வருகின்றது. ஆக வருங்காலத்திலும் அதிகரிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு புகலிடமாக உள்ளது.

அதோடு ஆரம்பத்தில் வெறும் நகைகளாக மட்டுமே தங்கத்தினை வாங்கி வந்த நிலையில், தற்போது டிஜிட்டல் வழியாகவும் வாங்கி வருகிறோம். தங்கத்தினை வாங்கும்போது வரி செலுத்துவோம். அது அறிந்த விஷயம் தான். ஆனால் அதனை விற்கும் போதும் வரி கட்டுகிறோம். அது எவ்வளவு? எப்படியெல்லாம் தங்கத்தினை வாங்கலாம்? என்பதை பற்றித் தான் பார்க்க போகிறோம்.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

ஒரு ஆய்வில் 70% இந்தியர்கள் தங்கத்தினை சொந்தமான வைத்திருப்பது தங்களுக்கு பாதுகாப்பான உணர்வை அளிப்பளிப்பதாக கூறியுள்ளனர். ஏனெனில் வருங்காலத்தில் தங்கம் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையினால் தங்களது முதலீடுகளை தங்கத்தில் செய்து வருகின்றனராம். இப்படி ஒரு தங்கத்தினை நாம் பெரும்பாலும் நான்கு வழிகளில் வாங்கி வைக்கலாம்.

தங்கத்தினை எப்படி எல்லாம் வாங்கலாம்

தங்கத்தினை எப்படி எல்லாம் வாங்கலாம்

முதலாவது நகைகள் அல்லது நாணயங்களாக வாங்கும் தங்கம் , இரண்டாவது தங்க பரஸ்பர நிதியில் முதலீடு, மூன்றாவது டிஜிட்டல் தங்கம், அதாவது எம்சிஎக்ஸ் தங்கம், தங்க பங்குகள், நான்காவது தங்க பத்திரங்கள், இது எல்லாவற்றையும் மேலாக அரசே வெளியிட்டு வருகிறது. பாதுகாப்பு, வட்டி விகிதம் என அனைத்து வகையும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக உள்ளது. இது நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஒரு சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கத்தினை விற்கும் போது வரி உண்டு
 

தங்கத்தினை விற்கும் போது வரி உண்டு

தங்கத்தினை வாங்கியாயிற்று, அதனை வாங்கும்போது வரி செலுத்துகிறோம் சரி? விற்கும் போது வரி விதிக்கப்படுகிறதா என்றால்? நிச்சயம் ஆமாம். நீங்கள் தங்கத்தை விற்கும்போது உங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது மற்றும் வரி விகிதம், நீங்கள் அதை எந்த வகைகளில் வாங்கியுள்ளீர்கள் என்பதை பொறுத்தது.

நகையை விற்கும் போது வரி

நகையை விற்கும் போது வரி

நகைகள் மற்றும் நாணய வடிவில் வாங்கும் போது, அதிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்படும். பெரும்பாலானவர்கள் தங்கத்தை நகைகளாக அல்லது நாணயங்களாகத்தான் வாங்குகிறார்கள். இந்த வடிவில் உள்ள தங்கத்தை விற்கும் போது அதற்கான வரிவிதிப்பு அதை நீங்கள் எவ்வளவு காலம் வைத்திருந்தீர்கள் என்பதைப் பொறுத்தது.

குறுகிய கால மூலதன வரி & நீண்டகால மூலதன வரி

குறுகிய கால மூலதன வரி & நீண்டகால மூலதன வரி

தங்கம் வாங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விற்கப்பட்டால், அது குறுகிய கால மூலதனமாக கருதப்படுகிறது. குறுகிய கால மூலதனத்தில் கிடைத்த வருமானமாக கணக்கிடப்பட்டு உங்களுக்கு பொருந்தக்கூடிய வருமான வரி அளவின் அடிப்படையில், வரி விதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விற்கப்படும் தங்கம் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் என்ற வகையில் 20% வரி விதிக்கப்படும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் வரி எவ்வளவு?

மியூச்சுவல் ஃபண்டுகளில் வரி எவ்வளவு?

இதுவே தங்க ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், தங்க ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் இலாபங்களுக்கான வரி விதிக்கப்படும். தங்க ஃபண்டு முதலீட்டில் கிடைக்கும் இலாபங்களும், நகைகள் மற்றும் நாணயத்தில் கிடைக்கும் இலாபத்தை போலவே கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படுகின்றன.

டிஜிட்டல் தங்கத்தின் மீதான வரி

டிஜிட்டல் தங்கத்தின் மீதான வரி

டிஜிட்டல் தங்கம் தங்கத்தை வாங்கவும் முதலீடு செய்யவும் ஒரு சிறந்த வழி. பிசிகல் தங்கமாக இருக்கும்போது அதனை விற்பனை செய்யும் போது ஏராளமான விஷயங்கள் கவனிக்க வேண்டி உள்ளன. அதோடு கட்டி பாதுகாக்க வேண்டும் என்ற கவலையும் உண்டு. ஆனால் டிஜிட்டல் தங்கங்களில் அப்படி ஏதும் இல்லை. திருட்டு போக வாய்ப்பு இல்லை. இதனாலேயே இதனை அதிக அளவில் வாங்க விரும்புகின்றனர்.

தங்கம் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி உண்டு

தங்கம் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி உண்டு

அதோடு தற்போது பல வங்கிகள், மொபைல் வாலெட்டுகள் மற்றும் தரகு நிறுவனங்கள் தங்கள் ஆப்கள் மூலம் தங்கத்தை விற்று வருகின்றன. குறிப்பாக தங்கத்தை விற்கும் முன்னணி நிறுவனங்களான MMTC-PAMP, SafeGold போன்றவற்றுடன் இணைந்துள்ளன. இவ்வாறு வாங்கி விற்கும் டிஜிட்டல் தங்கத்தின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது.

தங்க பத்திரங்கள்

தங்க பத்திரங்கள்

ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் தங்கத் பத்திரங்கள், தங்கத்தை கிராம் அளவில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்க பத்திரங்கள். அவை தங்கத்தை நகையாக அல்லது நாணயமாக வைத்திருப்பதற்கு மாற்றாக இருக்கின்றன. இந்த பத்திரங்கள் இந்திய அரசாங்கத்தின் சார்பாக ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகின்றது. ஐந்தாம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் உங்களுக்கு ஏற்ற வகையில் முதிர்வு காலத்தை தேர்தெடுக்கலாம்.

தங்க பத்திரம் மூலம் கிடைக்கும் லாபத்திற்கான வரி

தங்க பத்திரம் மூலம் கிடைக்கும் லாபத்திற்கான வரி

தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் போடப்பட மாட்டாது. எட்டு வருடம் வரை நீடிக்க முடிய வில்லை என்றால்- நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பது கவனிக்கதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

four ways to buy gold? Details of income tax levied on the income gained by selling gold?

four ways to buy gold? Details of income tax levied on the income gained by selling gold?
Story first published: Sunday, October 25, 2020, 11:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X