2025 ஆம் ஆண்டு தொடக்கத்தின் போது தங்கம் விலை கிராமுக்கு 10 ஆயிரத்தையும் ஒரு சவரனுக்கு 80 ஆயிரத்தையும் கடக்கும் என நாம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம் ஆனால் அது நடந்திருக்கிறது. தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்வு கணிக்க முடியாத அளவு இருக்கிறது.
தங்கம் விலை: 2025 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்றன. இந்த மூன்று மாதங்களுக்குள் தங்கத்தின் விலை எந்த உச்சத்தை எட்டும் என்பதை கூட நம்மால் கணிக்க முடியாது. தற்போதைக்கு தங்கத்தின் விலை குறையாது என்பது மட்டும் தீர்மானமாக தெரிகிறது. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டதால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்க தொடங்கும்.

தீபாவளி-டூ-தீபாவளி தங்கம் விலை: இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய தீபாவளி பண்டிகை நாளுடன் ஒப்பிடும் போது பங்குசந்தை அதிக லாபம் தந்துள்ளதா அல்லது தங்கம் அதிக லாபம், தந்துள்ளதா என்பதை விளக்கும் வகையிலான ஒரு டேட்டாவை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியையும், தங்கம் மற்றும் எம்சிஎக்ஸ் வர்த்தக தங்கத்தையும் ஒப்பிட்டு இருக்கிறார்கள்.
8 தீபாவளிகளில் என்ன நடந்தது: கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை நாம் மொத்தம் எட்டு தீபாவளியை கண்டிருக்கிறோம். இந்த எட்டு ஆண்டுகளில் ஏழு ஆண்டுகளில் தங்கம் தான் அதிக லாபம் தந்திருக்கிறது. ப்ளூம்பெர்க் தரவுகளின் படி இந்தியாவில் நாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் வளர்ச்சி மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீடு வளர்ச்சியை ஒப்பீடு செய்து பார்க்கலாம்.
தங்கம் vs நிஃப்டி: 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாடினோம். அந்த ஆண்டில் நிஃப்டி குறியீடு 40% வளர்ச்சி பெற்றிருந்தது, தங்கம் 5% சரிவையும் எம்சிஎக்ஸ் தங்கம் 6% சரிவையும் சந்தித்திருந்தது. அதுவே 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் 24ஆம் தேதி நம் தீபாவளி பண்டிகையை கொண்டாடினோம். முந்தைய தீபாவளி உடனான இடைப்பட்ட ஓராண்டில் நிஃப்டி 1 % சரிவை சந்தித்திருந்தது தங்கம் 7 % சரிவையும், எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் 5% உயர்வையும் கண்டிருந்தது.
தங்கம் தான் கிங்: அடுத்ததாக 2022 தீபாவளியிலிருந்து 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இடைப்பட்ட அந்த ஓராண்டு காலத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடு 10 .12% வளர்ச்சி அடைந்திருக்கிறது ஆனால் தங்கம் 17.6 % வளர்ச்சியையும், எம்சிஎக்ஸ் தங்கம் 20.50 % வளர்ச்சியையும் பெற்றுள்ளது. அதேபோல 2023 ஆம் ஆண்டு நவம்பர் 12 தீபாவளி முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரையிலான ஓராண்டு காலத்தில் நிஃப்டி 23% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. ஆனால் தங்கம் 41% வளர்ச்சியையும், எம்சிஎக்ஸ் தங்கம் 31% வளர்ச்சியையும் பதிவு செய்திருக்கிறது .

தங்க முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்: 2024 ஆம் ஆண்டு தீபாவளியிலிருந்து நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை வரையிலான இந்த ஓராண்டு காலத்தில் பார்த்தால் நிஃப்டி வெறும் 4% தான் வளர்ந்திருக்கிறது. தங்கம் 34% வளர்ச்சியும் , எம்சிஎக்ஸ் தங்கம் 41% வளர்ச்சியும் பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் தீபாவளி பண்டிகை நாளில் இருந்து அடுத்த ஆண்டு பண்டிகை நாள் வரையிலான காலகட்டத்துடன் நாம் பங்குச்சந்தை தங்கம் ஆகிய இரண்டையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது தங்கம் தான் முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் வளர்ச்சி தந்து லாபம் தந்த ஒரு முதலீடாக இருக்கிறது.
இந்த ஆண்டும்: நிச்சயமாக இந்த ஆண்டும் இதே பாரம்பரியம் தொடரும் என்றே முதலீட்டாளர்கள் கருதுகின்றனர் . தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பங்குச்சந்தைகளை விட தங்கம் அதிக லாபம் தந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தந்திருப்பதாக கூறும் வெல்த் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவரான அபிஷேக் அடுத்த ஆண்டும் இதையே நாம் எதிர்பார்க்கலாம் என கூறுகிறார்.
தங்கம் விலை உயரும்: அதாவது பங்கு சந்தையை விட தங்கம் நல்ல வளர்ச்சியை தரக்கூடிய ஒரு முதலீடாக இருக்கும் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி வைப்பது, அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைத்தது ஆகிய , உள்நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரிக்கிறது , டாலரின் மதிப்பு குறைந்தது ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது என்கிறார்.
இது தவிர புவிசார் பதட்டங்கள் , வர்த்தக மோதல்கள் ஆகியவற்றுக்கும் இதுவரை எந்த ஒரு முற்றுப்புள்ளியும் வைக்கப்படவில்லை. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் சங்கத்தின் விலை 5,000 டாலர்கள் வரை எட்டலாம் என கூறுகின்றனர். ஜெஃப்ரீஸ் நிறுவனம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6600 டாலர்கள் வரை செல்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறுகிறது.
More From GoodReturns

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications