இது தான் பெஸ்ட் முதலீடு.. கோல்டு இடிஎஃப்.. மே மாதத்தில் மட்டும் ரூ.815 கோடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நம்மவர்கள் என்னதான் காலங்கள் மாறினாலும் முதலீடு என்றால், அது தங்கத்திலும் கொஞ்சமேனும் இல்லாமல் இல்லை. அதிலும் இன்றைய தலைமுறையினர் பேப்பர் தங்கம் எனப்படும் தங்கம் பத்திரம் மற்றும் கோல்டு இடிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர்.

 

பிசிகல் கோல்டு என்றால் கூட அது பாதுகாப்பதிலும் கஷ்டம். மேலும் அதனை விற்கும் போது செய்கூலி சேதாரம் என பலவும் இருக்கும். ஆனால் கோல்டு இடிஎஃப்க்களில் அது போன்று எந்த செலவினமும் இல்லை. இதனால் அவர்கள் கோல்டு இடிஎஃப்களில் முதலீடு செய்து வருகின்றனர்.

இது தான் பெஸ்ட் முதலீடு.. கோல்டு இடிஎஃப்.. மே மாதத்தில் மட்டும் ரூ.815 கோடி..!

இந்த ஃபண்டில் ஒரு வருடத்திற்கு மேல் முதலீடினை செய்தால் இதற்கு மூலதன ஆதாய வரி 10%. ஆனால் இந்த சலுகையை பெற மூன்று வருடம் காத்திருக்க வேண்டும்.

ஒரு வேளை ஒருவருடத்திற்குள் உங்கள் யூனிட்களை விற்றால் உங்கள் வருமானத்திற்கு ஏற்றவாறு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். இதில் இவ்வளவு தான் நீங்க முதலீடு செய்யனும்கிற லிமிட் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ளலாம். இந்தியாவினை பொறுத்த வரையில் இந்த வகை ஃபண்டுகள் தேசிய பங்கு சந்தைகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஆனால் இதில் முதலீடு செய்ய வேண்டுமெனில் உங்களுக்கு டீமேட் கணக்கு தேவைப்படும். நீண்டகால நோக்கில் முதலீடு செய்யணும் நினைக்கிறவங்க இதில் முதலீடு செய்யலாம்.

அதிலும் தற்போது உலகமெங்கிலும் கொரோனாவின் தாக்கத்தினால், பாதுக்காப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இந்த கோல்டு இடிஎஃப்பில் மே மாதத்தி 815 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்த்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இதற்கு கொரோனா காரணமாக பங்கு சந்தைகளில் பலமான ஏற்றத் தாழ்வுகள் காணப்படுவதால், பாதுகாப்பு புகலிடமான இந்த வகையான தங்க முதலீடுகளில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. இதே கடந்த ஏப்ரல் மாதத்தில் 731 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த ஆகஸ்ட் 2019ல் கோல்ட் இடிஎஃப் திட்டங்களில் ஈர்த்தக் மொத்த முதலீடு 3,299 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. அதன் பிறகு படிப்படியாக கடந்த ஓராண்டாகவே கோல்டு இடிஎஃப் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு சிறப்பான அளவில் பெரியளவில் முதலீடுகள் ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மே மாத இறுதியில் 10,102 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold ETFs attract Rs.815 crore inflows in May amid market volatility

Gold exchange traded funds saw net inflows of Rs.815 crore in may as investors preferred safe heaven options amid stock market volatility.
Story first published: Monday, June 15, 2020, 22:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X