டிசம்பர் வரை தங்கம் விலை சரிவிலேயே தான் இருக்குமா? எப்போது தங்கம் வாங்கலாம்?

உலக சந்தையிலும் இந்தியாவிலும் தங்கம் விலை பெருமளவு சரிந்துள்ளது. இந்த விலை சரிவு நீடிக்குமா? இன்னும் தங்கம் விலை குறையுமா? இப்போது தங்கம் வாங்கலாமா? அல்லது காத்திருக்கலாமா? என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வி.

தமிழ்நாட்டில் கிட்டதட்ட 11 மாதங்களுக்கு பின் தங்கம் விலை சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் சென்றுள்ளது. தங்கம் விலை டிசம்பர் மத்தியில் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருந்து பின்னர் ஜனவரி மாதம் 1.34 லட்சம் என வரலாற்று உச்சம் தொட்டது. அதன் பின் தங்கம் விலை குறைய தொடங்கியது. தற்போது வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 34,000 ரூபாய் விலை சரிந்துள்ளது.

டிசம்பர் வரை தங்கம் விலை சரிவிலேயே தான் இருக்குமா? எப்போது தங்கம் வாங்கலாம்?

தங்கம் விலை குறைவதற்கு ,முக்கிய காரணம் அமெரிக்கா தான். அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. இதனால் தான் தங்கம் விலை சரிகிறது. அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் மற்றும் பணவீக்க தரவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதால், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஃபெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் அல்லது தற்போதைய நிலையே தொடரலாம் என்ற கடினமான நிலைப்பாடு எடுக்கப்படும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வட்டி உய்ரவு எதிர்பார்ப்புகளால் அமெரிக்காவின் 10 ஆண்டு மற்றும் 2 ஆண்டு கால அரசு பத்திரங்களின் ஈவுத்தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே இது வட்டி தராத முதலீடான தங்கத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் குறைந்து அவர்கள் பணத்தை பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தேவை குறைந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.

Also Read

சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 டாலருக்கும் கீழே சரிவை சந்தித்துள்ளது. இது தான் நம் நாட்டிலும் தங்கம் விலை குறைய முக்கிய காரணம். டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் நடக்கிறது. இதில் எடுக்கப்ப்டும் முடிவுகள் டிசம்பர் 9ஆம் தேதி தெரிய வரும். இந்த கூட்டத்தில் வட்டி உயர்வு அறிவிக்கப்பட்டாலும், வட்டி நிலைபாட்டில் மாற்றமில்லை என அறிவிக்கப்படாலும் தொடர்ந்து தங்கம் விலை குறையும்.

Recommended For You

இதனால் தான் தங்கம் விலை போக்கை நிர்ணயம் செய்யும் முக்கிய தேதியாக டிசம்பர் 9ஆம் தேதி மாறி இருக்கிறது. தங்கம் விலை தமிழ்நாட்டில் ஒரு சவரன் 1 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ள நிலையில் வட்டி உயர்வு அறிவிப்பு வந்தால் இன்னமும் விலை குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தங்கம் வாங்க காத்திருப்பவர்கள் விலை குறைய குறைய வாங்கலாம் என கூறுகின்றனர்.

தற்போதைக்கு தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றாலும் நீண்டகால நோக்கில் தங்கத்தின் அடிப்படை ஆதரவு வலுவாகவே உள்ளது, எனவே குறுகிய கால சரிவுகளை நீண்டகால முதலீட்டாளர்கள் ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளலாம் என்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+