காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்கு போனோமா? இரவு எட்டு, ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தோமா? அடுத்த நாள் வேலைக்கு போனோமா, வீட்டுக்கு வந்தோமா, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறை. அன்றும் சில சமயங்களில் டார்கெட் முடியவில்லை என அலுவலகம் செல்பவர்கள் பலர். இந்த அக்கப்போருக்கு எல்லாம் ஒரு அளவே இல்லையா? நிம்மதியா ஒரு இடத்தில் எப்போது தான் உட்காருவது? இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு இல்லையா என புலம்பும் பலரும், அடுத்த நாள் காலை 9 மணி அலுவலகத்திற்கு 8.50 -க்கெல்லாம் சென்று விடுவார்கள். குழந்தைகளின் கல்வி, மாத தவணை, குடும்ப செலவு என பல குடும்ப சூழல் காரணமாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு காலத்தை தள்ளுவார்கள்.

இப்படித்தான் பலரது நிலைமையும் இன்று. இந்த முடிவில்லாத ஓட்டம்.. நிஜமாவே அலுத்துப் போயிருச்சா? இனிமே ஓடுறதுக்கு என்கிட்ட தெம்பு இல்லைனு உங்க மனசு சொல்லுதா? அப்போ நீங்க பணத்துக்காக உழைக்கிறதை நிறுத்திட்டு, உங்க பணம் உங்களுக்காக உழைக்கிற மாதிரி மாற்ற வேண்டிய நேரம் இதுதான். இளம் வயதில் இப்படி கஷ்டப்படுபவர்கள் குறைந்தபட்சம் ஓய்வு காலத்தில் ஆவது நிம்மதியாக இருக்க வேண்டாமா?
ஏர்லி ரிட்டையர்மென்ட் அப்படிங்கறது வெறும் கனவு மட்டும் கிடையாது. அது நீங்க சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரு புத்திசாலித்தனமான திட்டம். ஓய்வு காலத்திலும் மாதம் 75,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை பென்ஷன் போல் வருமானம் பார்க்கிறது எப்படி? உங்க சுதந்திரத்தை நீங்க எப்படி மீட்டு எடுக்கலாம்? இது சாத்தியமா? அப்படின்னு அப்படின்னு நீங்க யோசிக்கலாம். கண்டிப்பாக சாத்தியம் தான். அதுக்கு நீங்க கோடிக்கணக்கில் சொத்து வச்சிருக்கணும்னு அவசியம் இல்லை, சரியான வயசுல சரியான இடத்தில் முதலீடு செஞ்சாலே போதும்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
இன்றைய காலத்தில் என்னதான் பலரும் நிதி திட்டங்கள் பற்றி தெரிந்திருந்தாலும், ஓய்வு காலம் பற்றி பெரிதாக சிந்திப்பதே இல்லை. 40 வயதிற்கு மேல் தான் சற்றே யோசிக்கிறார்கள். உதாரணத்திற்கு 45 வயதில் இருக்கும் ஒருவர், 55 வயதில் ஓய்வு பெற நினைக்கிறார். அவரின் ஓய்வு காலத்தில் 75,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெற நினைக்கிறார். இந்த இடைப்பட்ட 10 வருடத்திற்குள் எப்படி, ஓய்வு காலத்திற்கு தேவையான கார்ப்பஸ் -ஐ திரட்டுவது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஏனெனில் பெரிய அளவில் இருந்தால் தான் அதை வைத்து ஓய்வு காலத்தில் தேவையான வருமானத்தை மாத மாதம் பெற முடியும்.
ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?
இதற்கு இரண்டு திட்டங்களை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஒன்று சந்தையுடன் தொடர்புடைய யூனிட் லிங்க்டு பென்ஷன் பிளான் (ULPP). இது பங்குச் சந்தை மற்றும் டெப்ட் என இரு அம்சங்களிலும் முதலீடு செய்யப்படும் திட்டமாகும். உங்கள் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியுடன், வரி சலுகையுடன் கிடைக்கும். இதில் நீங்கள் செலுத்தும் பிரீமியம் உங்கள் விருப்பப்படி, ஈக்விட்டி அல்லது டெப்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும். 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக உங்கள் முதலீடு சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப லாபத்தை தரும். தற்போதைய விதிகளின் படி, மொத்தத் தொகையில் 60% வரை வரியின்றி எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள 40% தொகையானது வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து அதன் மூலம் பென்ஷன் பெறலாம்.
இதவே சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு பயப்படுபவராக இருந்தால் Deferred Annuity plan ஒரு பாதுகாப்பான தேர்வாக இருக்கும். இது சந்தை அபாயங்களுக்கு அப்பாற்பட்ட, நிலையான வருமானம் தரும் ஒரு திட்டமாகும். இதிலும் குறிப்பிட்ட காலம் வரையில் பிரீமியம் செலுத்த வேண்டும். உங்கள் ஓய்வூதியம் நீங்கள் தீர்மானிக்கும் தேதியில் தொடங்கும் விதமாக திட்டமிட்டு கொள்ளலாம். ஆக நீங்கள் திட்டமிடும் 55 வயதில் இருந்து மாத மாதம் வருமானம் கிடைப்பது போல் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications