இளம் வயதில் ஓடி ஓடி உழைக்கிறோம்.. ஆனால், 60 வயதுக்குப் பிறகு நம் நிலைமை என்ன என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? நிச்சயம் எல்லோராலும், எதிர்காலத்திலும் இப்படியே எந்த பிரச்சனையும் இல்லாமல் காலத்தை ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா? ஆனால் அதற்கு பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்பதுதான்.
ஒவ்வொரு நடுத்தர வர்க்க முதலீட்டாளரின் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய கவலையே இதுதான். வேலை செய்யும் காலத்தில் சொகுசாக வாழ்வதை விட, ஓய்வு காலத்திற்கு பிறகு யாருடைய நிதி தயவும் இன்றி, கை நிறைய பணத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே. ஆனால் உண்மையில் எத்தனை பேர் அதற்கு தயாராக இருக்கிறோம் என்றால் அதுவும் மிகப்பெரிய கேள்விக்குறி தான்.
ஏனெனில் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அசால்ட்டாக இருப்போம். ஆனால் ஒரு கட்டத்தில் அதற்கான வாய்ப்பும் கிடைக்காது. முதலீடு செய்யவும் முடியாது. ஆக இன்றே இப்போதிலிருந்தே, உங்களுடைய முதலீட்டுக்கான திட்டமிடலை செய்ய ஆரம்பியுங்கள். இன்றைய காலத்தில் ஓய்வு காலத்திற்கு என பல திட்டங்கள் உள்ளன. இருப்பினும் பலரும் அறிந்த EPF, NPS மற்றும் PPF இந்த மூன்று திட்டங்களில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போமா?
இவை மூன்றுமே வரிச் சலுகை மற்றும் பாதுகாப்பை வழங்கினாலும், எதில் முதலீடு செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும். எதில் வட்டி அதிகம், எதில் ரிஸ்க் குறைவு என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. உங்கள் ஓய்வு கால கனவை நனவாக்க போகும் அந்த நம்பர் 1 முதலீட்டுத் திட்டம் எது? EPF-ன் கட்டாய சேமிப்பா, NPS-ன் சந்தை சார்ந்த லாபமா அல்லது PPF-ன் அசைக்க முடியாத பாதுகாப்பா?

மேற்கண்ட மூன்று திட்டங்களிலும் ஒரு சாதக, பாதகங்கள் உண்டு. பிபிஎஃப் திட்டத்தை பொறுத்தவரை EEE வரிச் சலுகை உண்டு. அதாவது செய்யும் முதலீடு, அதற்கு கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வு தொகை என அனைத்திற்கும் வரிச் சலுகை உண்டு. இருப்பினும் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்ற வரம்பு உண்டு.
ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?
இதே என்.பி.எஸ் திட்டத்திலும் வரிச் சலுகை உண்டு. ஆனால் அதில் கட்டாயம் வருடாந்திர ஓய்வூதிய திட்டத்தில் பங்களிக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிப்பதில்லை. மாறாக இபிஎஃப் கணக்கின் மூலம் செய்யப்படும் சேமிப்பு பாதுகாப்பானது ஒன்று தான். இதில் நிரந்தர வருமானம் என்றாலும், பணவீக்கத்தை தாண்டி எதிர்காலத்தில் வருமானம் கிடைக்குமா என்பது சந்தேகமாக தான் பார்க்கப்படுகிறது. பிபிஎஃப், இபிஎஃப் என இரண்டுமே அரசின் பாதுகாப்பை கொண்ட திட்டங்கள் தான். அதில் நிலையான வருமானம் கிடைக்கும். ஆனால் பணவீக்கத்தை தாண்டி பெரிய அளவில் வருமானம் கிடைப்பது தான் கடினமே. ஆக அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத. ஓய்வு காலத்தில் பெரிய அளவில் கணிசமான கார்ப்பஸ் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இபிஎஃப் திட்டம் சிறந்த தேர்வு தான். மாறாக எனக்கு ரிஸ்க் எடுப்பதில் துளியும் விருப்பமில்லை என்ற பழமைவாத முதலீட்டாளர்களுக்கு, இதுவே 100% சிறந்த ஆப்ஷனாகவும் இருக்கும். மாத சம்பளம் பெறாத, சிறு வணிகர்கள் அல்லது ஃபீரிலான்சர்களுக்கு பிபிஎஃப் சிறந்த தேர்வு.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
EPF மற்றும் PPF போல நிலையான வட்டியை மட்டும் நம்பியிருக்காமல், உங்கள் பணத்தின் ஒரு பகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இது நீண்ட காலத்தில் பணவீக்கத்தை முறியடித்து, அதிக லாபம் ஈட்ட உதவுகிறது.
ஓய்வுக்கால முதலீடு என்பதில் நிலைத்தன்மை என்பது அவசியம். அடுத்து வளர்ச்சியும் சிறப்பாக இருக்க வேண்டும். இருப்பினும் அதை இளம் வயதிலேயே தொடங்க வேண்டும். நீங்கள் சம்பளதாரர் ஆக இருந்தால் இபிஎஃப் உடன் என்பிஎஸ் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். இதே சொந்த தொழில் செய்பவராக இருந்தால் பிபிஎஃப் உடன் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒருவேளை தாமதமாக முதலீட்டை தொடங்கினால் இபிஎஃப் உடன் பிபிஎஃப் திட்டத்தை செய்யலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications