தங்க பத்திரம் என்பது பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ஒரு இறையாண்மை தன்மை கொண்ட முதலீட்டு திட்டமாகும். இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது மிக பாதுகாப்பானதாகவும், நம்பிக்கையான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது நடப்பு நிதியாண்டின் ஒன்பதாம் கட்ட வெளியீடான தங்க பத்திரம் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், தொடர்ந்து பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகின்றதே. இதனை வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பமும் இருந்து வருகின்றது. உண்மையில் தங்கம் விலையானது சரிந்து வரும் நிலையில், இதனை வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
சிறந்த முதலீட்டு திட்டம்
நடப்பு ஆண்டின் முதல் கட்ட தங்க பத்திர விற்பனை கடந்த திங்கட்கிழமையன்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திரங்களின் விலையானது கிராமுக்கு 4786 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் மூலமாக வாங்குபவர்களுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். இந்த திட்டம் ஆரம்பத்தில் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும்பொருட்டு கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாக இருந்தாலும், பின்னர் விரைவிலேயே சிறந்ததொரு முதலீட்டு திட்டமாகவும் மாறியது.
அதிகரிக்கலாம்
கடந்த 2015ல் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த தங்க பத்திரங்கள் மூலம் 32,000 கோடி ரூபாய்க்கும் மேல் திரட்டப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆண்டின் தொடக்கத்தில் சில மாதங்களுக்கு பெரியளவில் மாற்றமின்றி இருக்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாமென்றே நம்புகின்றனர்.
சரிவில் தங்கம் விலை
தற்போது தங்கம் விலையானது இரண்டு மாத சரிவினைத் தொட்டுள்ளது. தற்போது சுமார் 47,300 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது கடந்த ஆண்டில் உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு சுமார் 9,000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை விரைவில் குறைக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அதே போல பத்திரம் வாங்குதலும் திட்டமிட்டதை போலவே அமெரிக்கா படிப்படியாக குறைக்க ஆரம்பித்துள்ளது.
தங்க பத்திரம் பெஸ்ட் ஆப்சன்
தங்கத்தில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய இது சரியான நேரமாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் தங்க பத்திரங்கள் மிகச்சிறந்த ஆப்சனாகவும் பார்க்கப்படுகின்றது. இதில் பிசிகல் தங்கத்தினை போல ஜிஎஸ்டி வரி, சேதாரம், போன்ற செலவினங்கள் எதுவும் இல்லை. இதனால் இந்த பேப்பர் தங்கம் என்பது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பேப்பர் தங்கத்திற்கு வட்டி விகிதம் 2.5% வழங்கப்படுகின்றது. இதனை பிணையமாக வைத்துக் கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தங்க பத்திரங்களுக்கு வரிச்சலுகையும் உண்டு.
தற்போதைக்கு விலகி இருக்கலாம்
எனினும் சில நிபுணர்கள் இது சரியான நேரம் இல்லை என்று கூறிவருகின்றனர். ஏனெனில் தற்போதைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும்போது வெளியீட்டு விலையானது அதிகமாக உள்ளது. மேலும் தற்போதைய நிலையில் இருந்து தங்கம் விலையானது மேலும் குறையலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். ஆக தற்போதைக்கு இந்த தங்க பத்திரங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சியின் தலைவர் அனுஜ் குப்தா கூறியுள்ளார்.
போர்ட்போலியோவில் அவசியம்
போர்ட்போலியோ முதலீடுகளில் தங்கம் அவசியமானதாக இருந்தாலும், தற்போதைக்கு தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ய கூடாது. இது 5 - 10% வரம்பிலேயே இருக்க வேண்டும். இது தங்கம், ஆபரணத் தங்கம் அல்லது தங்க பத்திரங்கள், தங்க பண்டுகள் என எதுவாக இருந்தாலும் பொருந்தும். தங்க பத்திரங்கள் சிறந்த முதலீட்டு ஆப்சன் என்றாலும், இது முதலீட்டுக்கு சரியான நேரம் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுக சிறுக சேர்க்கலாம்
எனினும் மற்றொரு தரப்பினர் தங்க பத்திரங்களை எஸ்ஐபி போல் சிறுக சிறுக சேர்த்துக் கொண்டே போகலாம். இதன் முதிர்வுகாலம் எட்டு ஆண்டுகள் எனும் போது, ஒரு நல்ல வளர்ச்சியினை எதிர்பார்க்கலாம் என கூறுகின்றனர். தங்கத்தினை ஆபரணமாக வாங்கும்போது அது லாபகரமானதாக இருக்கும் என நினைத்தும், பலரும் வாங்குவதில்லை. தங்களது பெண் குழந்தையில் எதிர்கால நலன் கருதி முதலீடு செய்கின்றனர். ஆக அப்படி நினைத்து செய்பவர்கள் வாங்கி வைக்கலாம். ஆனால் முதலீட்டு நோக்கில் செய்பவர்கள் காத்திருந்து வாங்குவதில் தவறேதுமில்லை.
***இது தனிப்பட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆக இது குறித்த இறுதி முடிவினை நீங்கள் தான் எடுக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!



Click it and Unblock the Notifications