தற்போது ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவதால் யாருக்கு எப்போது வேலை பறிபோகும் என்பதே தெரியவில்லை. ஐடி, ஹெச்ஆர், பிபிஓ என பல வேலைகளுக்கும் ஆபத்து வந்துவிட்டது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் நம் வேலை பறி போகலாம் என அச்சத்தில் உள்ளனர்.
நடப்பாண்டில் நவம்பர் மாதம் வரை உலகளவில் டெக் துறையில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். இப்படி திடீரென வேலை இழக்கும் நபர்களுக்கு உடனடி தேவையாக இருப்பது மாதாந்திர கடன்கள் மற்றும் அன்றாட செலவுகளை சமாளிக்க வேண்டிய பணம் தான். புது வேலை கிடைத்து சம்பளம் கைக்கு வரும் வரை குடும்பத்தை சமாளிப்பது, கடன்களுக்கான தவணை செலுத்துவது நிதி சுமைகள் உள்ளன. எனவே Job insurance காலத்தின் கட்டாயமாகிவிட்டன.

பைசாபஜார் தகவலின்படி, இந்தியாவில் வேலை இழப்பு காப்பீடு என்பது ஒரு தனி பாலிசியாக இல்லாமல், ஏற்கனவே உள்ள காப்பீட்டு திட்டத்தின் Add-on வசதியாக வழங்கப்படுகிறது. அதாவது வீட்டுக் காப்பீடு , விபத்து காப்பீடு அல்லது தீவிர நோய்களுக்கான காப்பீடு ஆகியவற்றுடன் நீங்கள் வேலை இழப்பு காப்பீட்டையும் பெறலாம். இதன் மூலம் கிடைக்கும் தொகை வீட்டு கடன் தவணைகள் அல்லது பிற நிதி பொறுப்புகளுக்கு உதவும்.
இத்தகைய இன்சூரன்ஸ் பெறுவதற்கு நீங்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியராக இருக்க வேண்டும். சுயதொழில் செய்பவர்கள் , தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த காப்பீடு கிடைக்காது. தற்போது தீவிர நோய் அல்லது விபத்துக்கு பிறகான இயலாமை காரணமாக ஏற்படும் வேலை இழப்பின் போது நிதி சுமையை சமாளிக்க சில காப்பீடு திட்டங்கள் வகை செய்கின்றன.
சில நிறுவனங்கள் Income Protection இன்சூரன்ஸ் என்ற வகை காப்பீடுகளை வழங்குகின்றன. ஆனால் ஏஐ காரணம் கூறி நீங்கள் ப்ணிநீக்கம் செய்யப்பட்டால் இது வேலை செய்யுமா என்பது உறுதியில்லை.ஏனெனில் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் பணிநீக்கம் என வகை செய்யாமல் ஊழியர்களை தாமாகவே வேலையை ராஜினாமா செய்ய வைப்பதால் பணிநீக்கம் என குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமல் இன்சூரன்ஸ் கிடைக்காமல் போகலாம் என சிலர் கூறுகின்றனர்.
தற்போதுள்ள சொற்ப எண்ணிக்கையிலான பாலிசிகளில் , பாலிசி தொடங்கிய பிறகு 30 முதல் 90 நாட்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதாம். அந்த காலத்திற்குள் வேலை போனால் இழப்பீடு கிடைக்காமல் போகலாம். அதே போல தாமாக முன்வந்து ராஜினாமா செய்தல் அல்லது ஓய்வு பெறுதல் மோசமான செயல்பாடு அல்லது மோசடி காரணமாக பணிநீக்கம் செய்யப்படுதல் ஆகியவற்றுக்கு காப்பீடு கிடைக்காது.
உங்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனம் சரியான காரணத்துடன் கூடிய கடிதத்தை தர வேண்டும். அந்த வகையில் அந்த கடிதத்தையும் காப்பீடு ஆவணத்தையும் கொண்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்து, வேலையின்மைக்கான ஆதாரத்தை அனுப்ப வேண்டும்.
உங்களுக்கு பணம் வழங்கலாமா என்பதை முடிவு செய்வதற்கு முன் காப்பீட்டு நிறுவனம் ஆவணங்களை ஆய்வு செய்யும். அதன் பின் மூன்று மாத காலத்திற்கு இந்த காப்பீடு பணம் கிடைக்கும். இது நாம் செலுத்திய பிரீமியம் தொகையை பொறுத்து மாறும் என சொல்லப்படுகிறது. சில செயலிகளில் income protectionதிட்டங்கள் உள்ளன, ஆனால் அவற்றை எடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

