121 கிலோ தங்கம்.. திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக தந்த தொழிலதிபர்..!! யார் இந்த வர்த்தமான் ஜெயின்?

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தனிநபர் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக தந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என்பது தெரிய வந்துள்ளது.

பொதுவாக திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தங்களால் இயன்றதை காணிக்கையாக வழங்குவது உண்டு. ஆனால் இவர் 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக தந்து அசத்தியுள்ளார். இன்றைய தேதிக்கு 121 கிலோ தங்கத்தின் விலையே 160 கோடி ரூபாய் ஆகும். சென்னையை சேர்ந்த தொழிலதிபரான வர்த்தமான் ஜெயின் தந்த தங்க நகைகள் இன்று திருமலையில் நடைபெற்ற நிகழ்வில், சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி நர புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

121 கிலோ தங்கம்.. திருப்பதி கோயிலுக்கு காணிக்கையாக தந்த தொழிலதிபர்..!! யார் இந்த வர்த்தமான் ஜெயின்?

சாமியின் தலை முதல் கால் வரை அலங்கரிக்கும் வகையில் கிரீடம், தோள் ஆபரணங்கள், கை ஆபரணங்கள், ஒட்டியாணம், திருப்பாதத்திற்கான ஆபரணங்கள் உள்ளிட்டவை அடங்கும். சாமியின் அன்றாட பூஜைகள் மற்றும் விசேஷ நாட்களில் இந்த புதிய ஆபரணங்கள் அணிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானுக்கு இத்தனை பெரிய காணிக்கையை தந்த வர்த்தமான் ஜெயின் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இவர் சென்னையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர் மற்றும் நன்கொடையாளர். Access Healthcare மற்றும் Asia Chennai Engineering ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவராக இருக்கிறார்.

Also Read

வர்த்தமான் ஜெயின் தற்போது காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் மேலாண் அறங்காவலராக பொறுப்பு வைக்கிறார். இந்த மருத்துவமனை குழந்தைகளுக்கு மிக குறைந்த செலவில் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. முன்னதாக இவர் வாரா ஃப்யூச்சர் எல்எல்பி நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் டெல் சர்வீசஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவு மேலாண் இயக்குனராக செயல்பட்டு இருக்கிறார்.

Recommended For You

சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பும் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மேல்நிலை பட்டப்படிப்பையும் இவர் முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய Access Healthcare நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்திருந்தார். இதன் மூலம் இவருக்கு 2 பில்லியன் டாலர்கள் வருமானம் வந்தது.

இவர் 2019-ஆம் ஆண்டு முதலே திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு பல்வேறு காணிக்கைகளையும் வழங்கி வருகிறார். கடந்த மே மாதத்தில் மின்சார பேருந்துகளை வழங்கினார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் , கால்நடை தீவன கலவை ஆலை மேம்பாடு ஆகியவற்றுக்கு நன்கொடையும், உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதையும் வகைப்படுத்துவதையும் எளிதாக்கும் இயந்திரத்தையும் வழங்கியுள்ளார். இவர் 8000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+