செல்வமகள் சேமிப்பு திட்டம்: கல்வி செலவுக்காக முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க முடியுமா?

பெண் குழந்தைகளின் எதிர்காலம், கல்வி செலவுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசால் நடத்தப்படும் மிகப்பிரபலமான சிறு சேமிப்பு திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதனை சுகன்யா சம்ரித்தி யோஜனா என அழைக்கின்றனர். செல்வமகள் சேமிப்பு திட்டம் இந்திய பெற்றோரின் நம்பிக்கையை பெற்ற ஒரு திட்டமாக இருக்கிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நம் பெண் குழந்தைகளின் பெயரில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி முதலீடு செய்யும் பெற்றோர் உயர்கல்விக்கு கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம். இதற்கான விதிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்: கல்வி செலவுக்காக முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க முடியுமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் பெண் குழந்தைக்கு 10 வயது நிறைவடைவதற்கு முன்பு கணக்கு தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு நிதி ஆண்டில் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை பணம் கட்ட வேண்டும். அதன் பின் 18 வயது மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்த உடன் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

இதில் நீங்கள் செய்த முதலீட்டை முதிர்வு காலத்திற்கு முன்பே எடுக்க அனுமதி உண்டு. ஆனால் அதற்கும் சில கெடுபிடிகள் உண்டு. பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்த பிறகு அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, இவற்றில் எது முந்துகிறதோ அதன்பின் மட்டுமே கணக்கிலிருந்து பணத்தை எடுக்க அனுமதிக்கப்படும்.

Also Read

இந்த தொகையானது பெண் குழந்தையின் உயர்கல்வி தேவைகளுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்கும் போது கல்வி நிறுவனத்தின் அட்மிஷன் லெட்டர் மற்றும் கல்வி கட்டண விபரங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

பெண் குழந்தை உயர்கல்விக்காக தொகையை பெற விரும்பினால், முந்தைய நிதி ஆண்டின் இறுதியில் கணக்கில் இருக்கும் மொத்த இருப்பில் அதிகபட்சம் 50% வரை மட்டுமே பணத்தை பெற முடியும். இந்த தொகையை ஒரே தவணையாகவோ அல்லது தவணை என்ற முறையில் பெறலாம். இருப்பினும், கேட்கப்படும் தொகையானது உண்மையான கல்வி கட்டண செலவை விட அதிகமாக இருக்க கூடாது.

Recommended For You

பெண் குழந்தை உயர்கல்விக்காக 50% தொகையை எடுத்தாலும், மீதி தொகைக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது: இந்த கணக்கில் எஞ்சியிருக்கும் தொகைக்கு, தொடர்ந்து வட்டி கணக்கிடப்பட்டு சேர்க்கப்படும். முதிர்வு காலம் எட்டும்போது, மீதமுள்ள அசல் மற்றும் அதன் வட்டி தொகை முழுமையாக கணக்கு வைத்திருப்பவரிடம் ஒப்படைக்கப்படும்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தையின் உயர்கல்விக்காக கணக்கில் உள்ள தொகையில் பாதியை 18 வயதுக்கு பிறகு எடுக்கலாம். மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி சேர்ந்து, 21 வயது முடிந்த உடன் முழு தொகையையும் எடுத்து கொள்ளலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+