உழைக்காத நாட்களில் எப்படி வாழப்போகிறோம்- இந்த ஒரு கேள்விதான் பல நடுத்தர வர்க்கத்தினரின் தூக்கத்தை கெடுக்கும் மிகப்பெரிய கவலை. ஆனால் ஓய்வுக்காலம் என்பது கவலைப்படுவதற்கான நேரம் அல்ல. மாறாக அது நீங்கள் இத்தனை ஆண்டுகள் உழைத்த உழைப்பின் பலனை அனுபவிக்கும் ராஜ வாழ்க்கை தொடங்கும் வசந்த காலம். அங்கு உங்களுக்கு நீங்களே ராஜா. உங்கள் ஓய்வுக்காலத்தில் பொருளாதார தடைகள் ஏதுமின்றி, ஒரு கோடீஸ்வரரை போல எந்த நிதி பிரச்சனையும் இன்றி நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கனவு உங்களுக்கு உண்டா?
வெறும் கற்பனையாக தோன்றும் அந்த 4 கோடி ரூபாய் என்ற இலக்கு, உண்மையில் சாத்தியமானது தானா? ஒரு சிறிய திட்டமிடல், கூட்டு வட்டியின் மகத்துவம் மற்றும் மாதம் வெறும் 30,000 ரூபாய் என்ற சீரான முதலீடு - இந்த மூன்றும் இணைந்தால், உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கை ஒரு சொர்க்கமாக மாறும்.

கனவுகளை நனவாக்க காத்திருக்கும் அந்த ரகசிய பாதை என்ன? எப்படி உங்கள் முதலீடு, உங்களுக்காக வேலை செய்து அந்த பிரம்மாண்டமான தொகையை உருவாக்கப் போகிறது? வாருங்கள் பார்க்கலாம்.
நீங்கள் 20களின் நடுவில் தான் உள்ளீர்கள். இப்போது தான் உங்களுடைய கல்வி என்னும் அத்தியாயத்தை முடித்து, வேலை என்னும் அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இது தான் உங்கள் ஓய்வுகால திட்டமிடலுக்கான ஒரு சரியான நேரம். ஓய்வு காலத்திற்கு என பல திட்டங்கள் சந்தையில் இருந்தாலும், எஸ்ஐபி எனும் மேஜிக் நிச்சயம் முக்கியமான ஒன்று. ஏனெனில் இதில் கூட்டு வட்டியின் பலனையும் பெற முடியும். உதாரணத்திற்கு 25 வயதில் உங்களுடைய முதலீட்டை தொடங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இது பணவீக்கத்தை தாண்டி மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்கை அடைய உதவும்.
10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?
ஒருவர் 25 வயதில் முதலீட்டை தொடங்கும் போது, அந்த சமயத்தில் பெரிய தேவைகள் மற்றும் செலவுகள் ஏதும் இருக்காது. ஆக நீண்ட கால இலக்குகளை குறிவைத்து சம்பளத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்ய முடியும். இங்கு உங்களால் முதலீடும் அதிகம் செய்ய முடியும். உங்களுக்கான கால அவகாசமும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் கூட்டுவட்டியின் பலனை அடைய உதவிகரமாக இருக்கும். என்னால் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாது என்றாலும் கூட, குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்ய முடியும். ஆக உங்களால் எவ்வளவு முடியுமோ அதை இளமை காலத்தில் செய்யத் தொடங்குங்கள். அப்போது தான் நிதி ஒழுக்கம் என்பது வளரும்.
பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?
இருப்பினும் 4 கோடி இலக்கு சாத்தியமா? என்பது பலருக்கு வியப்பாக தோன்றலாம். சரியான திட்டமிடல் இருந்தால் இதுவும் சாத்தியம் தான் என கூறும் நிபுணர்கள், 25 வயதான ஒருவர், மாதம் 30,000 ரூபாயை எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். அதை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செய்கிறார். அவருக்கு 12% வருமானம் கிடைப்பதாக கணக்கிட்டால் அவருடைய கார்ப்பஸ் 24.33 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும். அதாவது அவருடைய 30 வயதில் 24.33 லட்சம் ரூபாய் அவரிடம் உள்ளது.
நீங்கள் முதலீடு செய்த தொகையை வெளியே எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு, 12% வருடாந்திர வருவாயுடன் 55 வயது வரை காத்திருந்தால், வெறும் ஒரு முதலீட்டாளர் என்ற நிலையிலிருந்து, நீங்கள் ஒரு கோடீஸ்வரராக மாறுவீர்கள். இந்த மாபெரும் இலக்கை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான், பொறுமை. இடையில் அந்தப் பணத்தை எடுக்காமல், கூட்டு வட்டியின் பலனை முழுமையாக அறுவடை செய்ய வேண்டும்.
10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?
அதுவே உங்களை உங்கள் 55-வது வயதில் ராஜ வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் பாதையாக இருக்கும். இதில் 12% வருமானத்தை மட்டுமே கணக்கீடு செய்து பார்த்திருக்கிறோம். ஒரு வேளை அவருக்கு 13% வருமானம் கிடைத்தால், அவருடைய வருமானம் 5.29 கோடி ரூபாய். 14% வருமானம் கிடைத்தால் 6.76 கோடி ரூபாயும், 15% வருமானம் கிடைத்தால் 8.62 கோடி ரூபாய் கார்ப்பஸ்-ம் கிடைக்கும்.
இதில் 30 வயதில் கிடைத்த கார்ப்பஸ் தொகை வெறும் 10 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால் கூட, 12% வருமானம் கிடைப்பதாக கணக்கிட்டால் 50 வயதில் 1.7 கோடி ரூபாய் கார்ப்பஸ் இருக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய எஸ்ஐபி முதலீட்டை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தாமல், தொடர்ந்து செய்ய வேண்டும். அதையும் சரியான நேரத்துக்கு செய்ய வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications