நம்மில் பலரும் நினைக்கும் ஒரு விஷயம். எந்த நிதி பிரச்சனையும் இல்லாமல், ஒரே ஒரு கோடி ரூபாய் மட்டும் இருந்தால் போதும், நிம்மதியாக வேலையை விட்டுவிட்டு செட்டில் ஆகிவிடலாம். இது தான் நம்மில் பலரது கனவு. ஆனால், 2026-ன் தற்போதைய சூழலில் இந்த ஒரு கோடி ரூபாய் என்பது உண்மையிலேயே ஒரு லட்சாதிபதி வாழ்க்கையைத் தருமா அல்லது எத்தனை ஆண்டுகளுக்கு இது தாங்கும்.
ஏனெனில் ஒருபுறம் விறுவிறுவென ஏறும் பெட்ரோல் விலை, மறுபுறம் விண்ணைத் தொடும் மருத்துவச் செலவுகள். இவற்றிற்கு நடுவில் உங்கள் ஒரு கோடி ரூபாயை வெறும் வங்கி பிக்சட் டெபாசிட்டில் மட்டும் போட்டு வைத்தால், பணவீக்கம் எனும் அமைதியான அரக்கன் அதை மெல்ல மெல்ல விழுங்கி விடும். கோடி ரூபாய் இருந்தும் கையில் காசு இல்லை என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்படாமல் இருக்க வேண்டுமென்றால், உங்கள் முதலீட்டு உத்தி மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

வங்கிகளின் FD, மியூச்சுவல் ஃபண்டுகளின் SWP, அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் வருடாந்திர திட்டங்கள், இதில் எது உங்களை நீண்ட காலம் வாழ வைக்கும்? பணவீக்கத்தை சரி செய்த பிறகு உங்கள் பணம் எத்தனை ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும்? உங்கள் ஓய்வு கால கனவை நிஜமாக்குவதற்கான கணக்கீடுகள் மற்றும் ஒரு கோடி ரூபாயை லாபகரமாக கையாளும் ரகசியங்கள்..
இன்று உங்களிடம் 1 கோடி ரூபாய் ஓய்வுக்கால நிதியானது உள்ளது என வைத்துக் கொள்வோம். தற்போதைய சூழலில் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் செலவாகிறது. அந்த பணமே 80 அல்லது 100 வயது வரை போதுமானதாக இருக்குமா? ஆம்னி சயின்ஸ் அறிக்கையின் படி, 1 கோடி ரூபாய் முதலீடு வெவ்வேறு உத்திகளில் எப்படி செயல்படும் என்பதை பார்ப்போம். உங்கள் ஓய்வுகால நிதியின் வெற்றி என்பது உங்களிடம் இருக்கும் தொகையை மட்டும் பொறுத்தது அல்ல. பணவீக்கம், நீண்ட ஆயுள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களில் அந்த பணம் எவ்வளவு சிறப்பாக சமாளிக்கிறது என்பதில் தான் இருக்கிறது. இந்த ஆய்வில் 1 கோடி ரூபாய் முதலீட்டை 4 வெவ்வேறு முறைகளில் ஆய்வு செய்துள்ளனர்.
ஓய்வுக்கால நிதியை எங்கே முதலீடு செய்வது? SCSS Vs Senior citizen FD ? எது பெஸ்ட்?
1. பிக்சட் டெபாசிட்டில் பாதுகாப்பு என்பது உண்டு. ஆனால் உங்கள் நிதியானது விரைவில் தீர்ந்து விடும். ஆக எஃப்டி-ஐ மட்டுமே நம்பியிருந்தால், உங்கள் 70-களின் நடுப்பகுதியில் பணம் தீர்ந்துவிடும். பணவீக்கத்தால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும் போது, உங்கள் தேவைக்கும் செலவுக்கும் இடையில் பெரிய இடைவெளி உருவாகும். ஆக இது பாதுகாப்பானது என்றாலும், வாங்கும் சக்தியை குறைத்து விடும்.
2. லைஃப் ஆனுவிட்டி (life Annuity) திட்டங்களில் வருடம் முழுவதும் வருமானம் உறுதி. ஆனால் பென்ஷன் தொகை மாறாமல் நிலையாக இருப்பதால், விலைவாசி அதிகரிக்கும் போது வாங்கும் திறன் குறைந்துவிடும். 70 வயதில் உங்கள் தேவையில் 30% பற்றாக்குறையும், 100 வயதில் 80%-க்கும் அதிகமான பற்றாக்குறையும் ஏற்படும். ஆக வருமானம் வந்தாலும், அது போதுமானதாக இருக்காது.
3. சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுக்கும் SWP முறையில், உங்கள் முதலீடு 80-களின் தொடக்கத்திலேயே தீர்ந்து போகும் அபாயம் உள்ளது. குறிப்பாக, 70 வயதை எட்டும் போது உங்கள் பணத்தேவைக்கும், கையில் இருக்கும் தொகைக்கும் இடையே 30%-க்கும் அதிகமான இடைவெளி ஏற்படக்கூடும். SWP முறையில் வளர்ச்சிக்கு வாய்ப்பு இருந்தாலும், முதலீடு செய்த ஆரம்பக் காலக்கட்டத்தில் சந்தை வீழ்ச்சி அடைந்தால் அது முதலீட்டை நிரந்தரமாக சிதைத்துவிடும்.
உச்சத்தை தொடும் தங்கம், வெள்ளி: அடுத்து என்ன நடக்கும்? இனிமேல் தங்கம் வாங்குவது கனவா?
4. பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் அதிக கவனம் செலுத்தும் இந்த ஆக்ரோஷமான முதலீட்டு உத்தியில், பணம் தீர்ந்து போகும் ஆபத்து மிகக் குறைவு. பணவீக்கத்தை தாண்டி, உங்கள் தேவைக்கு தாண்டி வருமானம் கொடுக்கலாம். 70 வயதில் சிறிய அளவில் தொடங்கும் இந்த உபரியானது 100 வயதில் 30% அதிகமாக வளரும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இதிலும் சவால்கள் உண்டு.
புத்திசாலித்தனமான முதலீட்டு உத்தி?
உங்கள் முதலீட்டை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை அவசரத் தேவைக்காக பாதுகாப்பான கடன் சார்ந்த திட்டங்களிலும், மீதமுள்ள பகுதியை அதிக லாபம் தரும் பங்குகளிலும் முதலீடு செய்யலாம். இது பங்குச் சந்தை வீழ்ச்சியில் இருக்கும் போது, நஷ்டத்தில் பங்குகளை விற்காமல், கடன் சார்ந்த திட்டங்களில் உள்ள பணத்தை பயன்படுத்தி உங்கள் செலவுகளை சமாளிக்கலாம். இதன் மூலம் உங்கள் பங்குச் சந்தை முதலீடு நீண்ட காலத்திற்கு வளர வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும் இதிலும் சவால்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆக சரியான ஆலோசனையுடன் உங்கள் முதலீட்டை திட்டமிடுதல் சிறப்பு. நீங்கள் மிகவும் பாதுகாப்பான வழிகளை தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு கூடுதல் பணம் தேவைப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications