By
Sidhanathan K
| Published: Wednesday, September 18, 2024, 17:13 [IST]
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப, என்.ஆர்.இ வங்கி சேமிப்பு கணக்கு மூலம் அனுப்பலாமா அல்லது என்.ஆர்.ஓ சேமிப்பு கணக்கு மூலம் அனுப்பலாமா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1/5
என்.ஆர்.ஐ-கள் பணம் அனுப்ப என்.ஆர்.இ கணக்கு சிறந்ததா அல்லது என்.ஆர்.ஓ கணக்கு சிறந்ததா..? - Goodreturns Tamil
/photos/-gr256.html
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்ப என்.ஆர்.இ சேமிப்புக் கணக்கை தேர்ந்தெடுப்பது தான் மிகச் சிறந்ததாக இருக்கும். அதற்கான காரணங்களை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
2/5
என்.ஆர்.ஐ-கள் பணம் அனுப்ப என்.ஆர்.இ கணக்கு சிறந்ததா அல்லது என்.ஆர்.ஓ கணக்கு சிறந்ததா..? - Goodreturns Tamil
/photos/-gr256.html#photos-1
என்.ஆர்.இ வங்கிக் கணக்கில் சேமித்த பணத்திலிருந்து பெறப்படும் வட்டித் தொகைக்கு வரி செலுத்தத் தேவையில்லை. அதோடு வங்கிகள் அந்த தொகையில் டிடிஎஸ்-ஐ கழிக்காது. ஆனால், என்.ஆர்.ஓ கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு 30 சதவீத நேரடி வரியை வங்கிகளே கழித்துக் கொள்ளும்.
3/5
என்.ஆர்.ஐ-கள் பணம் அனுப்ப என்.ஆர்.இ கணக்கு சிறந்ததா அல்லது என்.ஆர்.ஓ கணக்கு சிறந்ததா..? - Goodreturns Tamil
/photos/-gr256.html#photos-2
மேலும், நீங்கள் வாழும் நாட்டில் உங்களுக்கு திடீரென்று ஒரு பண நெருக்கடி ஏற்படுகிறது என்றால், அப்போது உங்கள் என்.ஆர்.ஓ வங்கிக் கணக்கிலிருந்து உடனடியாக பணத்தை அனுப்ப முடியாது. ஏனெனில் அதற்கு ஏராளமான விதிமுறைகள் உள்ளன.
4/5
என்.ஆர்.ஐ-கள் பணம் அனுப்ப என்.ஆர்.இ கணக்கு சிறந்ததா அல்லது என்.ஆர்.ஓ கணக்கு சிறந்ததா..? - Goodreturns Tamil
/photos/-gr256.html#photos-3
ஆனால், என்.ஆர்.இ கணக்கில் இருக்கும் பணத்தை மிக எளிதாக அனுப்ப முடியும். எனவே வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் போது என்.ஆர்.இ வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அனுப்புவது சிறந்தது.
5/5
என்.ஆர்.ஐ-கள் பணம் அனுப்ப என்.ஆர்.இ கணக்கு சிறந்ததா அல்லது என்.ஆர்.ஓ கணக்கு சிறந்ததா..? - Goodreturns Tamil
/photos/-gr256.html#photos-4
உள்நாட்டில் இருப்பவர்களிடமிருந்து நீங்கள் உங்கள் என்.ஆர்.ஓ கணக்கிற்கு பணத்தை பெறலாம். ஆனால் வெளிநாட்டிலிருந்து பணப் பரிமாற்றம் செய்யும்போது என்.ஆர்.இ வங்கிக் கணக்கின் மூலம் செய்வதே சிறந்ததாக இருக்கும்.