A Oneindia Venture
bredcrumb

சென்னை ECR-ல் பிரம்மாண்டம்.. கலைஞர் கருணாநிதி பெயரில் 37.49 ஏக்கர் மெகா திட்டம்..!!

By sidhanathan K
| Published: Friday, April 4, 2025, 15:46 [IST]

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR), முட்டுக்காடு பகுதியில், கலைஞர் சர்வதேச மாநாட்டு மையம் அமைப்பதற்கான பணிகள் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளன.

Kalaignar International Convention Centre
1/5
இந்த பிரம்மாண்டமான திட்டம், 525 கோடி ரூபாய் செலவில், 37.49 ஏக்கர் பரப்பளவில், தட்சிண சித்ரா அருகே அமையவுள்ளது. பொதுப்பணித் துறையின் (PWD) மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு புதிய அடையாளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kalaignar International Convention Centre
2/5
இந்த Convention Centre-ல், 10,000 பேர் அமரக்கூடிய ஒரு பிரம்மாண்டமான எக்ஸிபிஷன் அரங்கம், 5,000 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம், மற்றும் 2,000 பேர் அமரக்கூடிய ஒரு கலையரங்கம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
Kalaignar International Convention Centre
3/5
இந்த மையத்தில், 1,700 வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்ற வசதியான பார்க்கிங் இடம், தடையில்லா மின்சாரம், பல்வேறு உணவகங்கள், ஒரு சிற்றுண்டிச்சாலை, மற்றும் விஐபி ஓய்வறை போன்ற வசதிகள் இடம்பெறும். இந்த வசதிகள், சர்வதேச தரத்தில் மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த உதவும். இந்த திட்டம், 18 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kalaignar International Convention Centre
4/5
இந்த Kalaignar International Convention Centre திட்டத்தின் மூலம், சென்னையில் சர்வதேச மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடத்துவதற்கு ஒரு முக்கிய மையமாக மாறும். இது, சுற்றுலா மற்றும் வணிகத் துறைகளுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.
Kalaignar International Convention Centre
5/5
இந்த சென்டர், சென்னையில் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, அப்பகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.