A Oneindia Venture
bredcrumb

மில்கி மிஸ்ட் நிறுவனம், ஈரோடு பெருந்துறையில் ரூ.900 கோடி முதலீட்டில் தனது உற்பத்தி திறனை விரிவுபடுத்த உள்ளது..!!

By sidhanathan K
| Published: Thursday, February 6, 2025, 12:03 [IST]

தமிழ்நாட்டின் முன்னணி பால் கூட்டுறவு நிறுவனமான மில்க்கி மிஸ்ட், ஈரோடு பெருந்துறையில் ரூ.900 கோடி முதலீட்டில் தனது உற்பத்தி திறனை விரிவுபடுத்துகிறது. விரிவாக்கத்தில் ஒரு புதிய பால் பதப்படுத்தும் ஆலை, ஒரு சீஸ் ஆலை மற்றும் ஒரு மோர் பதப்படுத்தும் அலகு ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கையானது பிராந்தியத்தில் பால் பொருட்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதையும் நிறுவனத்தின் சந்தைப் பங்கை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Milky Mist
1/6
புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை, பன்னீர், சீஸ், தயீர் மற்றும் பிற பால் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் நெய் பதப்படுத்தும் பிரிவு ஆகியவை இந்த விரிவாக்கத்தில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Milky Mist
2/6
இந்த விரிவாக்கத்தின் மூலம், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பால் பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்கும், இந்தியா முழுவதும் விநியோகம் செய்வதற்கும் இந்நிறுவனத்தின் சந்தை பங்கை அதிகரிப்பதற்கும் உதவும்.
Milky Mist
3/6
இந்த முதலீடு, ஈரோடு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும் இந்த தொழிற்சாலையை மையமாக வைத்தே இந்தியா முழுவதும் தனது சப்ளை செயினை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் அடித்தளம் அமைகிறது.
Milky Mist
4/6
மில்கி மிஸ்ட் சமீபத்தில் ஐபிஓ வெளியிடும் திட்டத்தை முன்வைத்துள்ளது, இதன் மூலம் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு பால் நிறுவனம் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்வதை தாண்டி ஐபிஓ-விலும் இறங்க உள்ளது.
Milky Mist
5/6
மில்கி மிஸ்ட் நிறுவனம் விரைவில் பங்குச் சந்தையில் அடியெடுத்து வைப்பதற்காக முதலீட்டு வங்கிகளை நியமிக்கும் பணியை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜேஎம் ஃபைனான்சியல் மற்றும் ஐ.ஐ.எஃப். கேபிடல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த மாபெரும் ஐபிஓ-வை வெற்றிகரமாகப் பங்குச்சந்தைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Milky Mist
6/6
இந்த நிறுவனம், 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 கோடி ரூபாய் அளவில் ஐபிஓ மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது மூலம் இந்தியா முழுவதும் உள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் ஐபிஓ-வாக மாறியுள்ளது.