By
Sidhanathan K
| Published: Thursday, August 29, 2024, 12:43 [IST]
கார் இன்ஷூரன்ஸ் மதிப்பை பாதிக்கும் காரணிகளை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் நாம் முதலீடு செய்த பணத்திற்கு அதிகபட்ச கவரேஜை பெற முடியும். கார் இன்ஷூரன்ஸ் மதிப்பை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன. அதில் சில காரணிகளை பற்றி தெரிந்துக்கொள்ள விஷயங்களை இங்கே காணலாம்.
1/6
கார் இன்ஷூரன்ஸை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான 5 காரணிகள்..!! - Goodreturns Tamil
/photos/5-most-important-factors-that-affect-car-insurance-gr245.html
வயது மற்றும் பாலினத்தை பொறுத்து கார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வேறுபாடு காட்டுகின்றன. அதாவது, 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் என்றால் கார் இன்ஷூரன்ஸ் பெறுவதற்கு அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு காரணம் ஆய்வுகளின் படி பெண்களை விட இள வயது ஆண்கள் தான் அதிக விபத்துக்குள்ளாகின்றனர். அதேபோல, திருமண தகுதி நிலையை பொருத்தும் மாற்றம் இருக்கும்.
2/6
கார் இன்ஷூரன்ஸை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான 5 காரணிகள்..!! - Goodreturns Tamil
/photos/5-most-important-factors-that-affect-car-insurance-gr245.html#photos-1
கார் இன்ஷூரன்ஸ் மதிப்பானது கார் ஓட்டிய வரலாற்றை பொருத்தும் மாறுபடும். அதிக விபத்துகளை ஏற்படுத்தி இருந்தாலோ, சாலை விதிகளை மீறி இருந்தாலோ அல்லது குடி போதையில் வண்டி ஓட்டியதற்கு சான்றுகள் இருந்தாலோ, இன்ஷூரன்ஸ் நிறுவனம் அதற்கு அதிக ப்ரீமியம் கட்டச் செய்து விடும். பொதுவாக, இன்ஷூரன்ஸ் கொடுப்பதில் இடர்பாடு இருப்பதாலேயே அதிக ப்ரீமியம் வசூலிக்கப்படும்.
3/6
கார் இன்ஷூரன்ஸை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான 5 காரணிகள்..!! - Goodreturns Tamil
/photos/5-most-important-factors-that-affect-car-insurance-gr245.html#photos-2
காரின் உபயோகித்த காலம், தயாரிக்கப்பட்ட ஆண்டு மற்றும் பாதுகாப்பு தரம் ஆகியவைகளும் காப்பீட்டுத் தொகையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காரில் ஏர்-பேக், ஆண்டி-பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கண்ட்ரோல், சீட் பெல்ட் போன்ற முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் இருந்தால், பிரீமியம் அளவு குறையும்.
4/6
கார் இன்ஷூரன்ஸை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான 5 காரணிகள்..!! - Goodreturns Tamil
/photos/5-most-important-factors-that-affect-car-insurance-gr245.html#photos-3
பெரிய காரில் சின்ன காரை விட பாதுக்காப்பு அதிகம் என்று கருதப்படுகிறது. அதே போல் பழைய காரை விட புதிய கார் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. புகழ் பெற்ற கார்களில் முதல் பத்து வகைகளில் உங்கள் கார் இருந்தால் அது திருடு போக அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் அதற்கு ப்ரீமியம் அதிகமாக வசூலிக்கப்படும். இதனை குறைக்க காரில் அலாரம் மற்றும் இதர பாதுகாப்பு சாதனங்களை பொறுத்த வேண்டும்.
5/6
கார் இன்ஷூரன்ஸை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான 5 காரணிகள்..!! - Goodreturns Tamil
/photos/5-most-important-factors-that-affect-car-insurance-gr245.html#photos-4
காரை அதிகமாக பயன்படுத்துவதை பொருத்தும் இன்ஷூரன்ஸ் பணம் மாறுபடும். வண்டியை பொது வாகனமாக பயன்படுத்தினால் அது பிரீமியம் அளவை குறைக்கும். ஆனால், அதற்கு உண்டான ஆவணத்தையும், வண்டியையும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
6/6
கார் இன்ஷூரன்ஸை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான 5 காரணிகள்..!! - Goodreturns Tamil
/photos/5-most-important-factors-that-affect-car-insurance-gr245.html#photos-5
ஒரு வருடத்திருக்கு இன்ஷூரன்ஸ் பணத்தை திரும்பி கோரவில்லை என்றால், கோரப்படாத பணத்திற்கு போனஸ் வழங்கப்படும். மேலும், அந்த இன்ஷூரன்ஸ் பணத்தை வேறு காருக்கு மாற்றவும் செய்யலாம். அதனால் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் இவ்வாறு தள்ளுபடி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதில் பல ஆதாயங்கள் உள்ளன.