A Oneindia Venture
bredcrumb

தல அஜித் குமார் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

By Sidhanathan K
| Published: Wednesday, May 1, 2024, 12:30 [IST]

1993ம் ஆண்டு வெளியான அமரவாதி திரைப்படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த அஜித் குமார் இன்று (மே 1) தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்தநிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Actor Ajith
1/6
அமரவாதி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன், 1992ல் வெளியான பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா திரைப்படத்தின் மூலம் நடிகர் அஜித் குமார் அன்புடன் "தல" அஜித் குமார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
Actor Ajith
2/6
இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்கள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளன. இந்த படத்தின் அப்டேட்டுகள் பிறந்தாநாளான இன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Actor Ajith
3/6
சினிமாவில் சிறந்த நடிகரை தாண்டி, அவர் ஒரு சிறந்த பைக் ரேஸரும் ஆவார். உலகளவில் பல எஃப் 1 ரேஸர் (F1 Racer) போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். அதோடு, 2018ம் ஆண்டு மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் பங்கு பெற்றுள்ளார்.
Actor Ajith
4/6
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை அஜித்குமார் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் ஜோடிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
Actor Ajith
5/6
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படத்தில் நடித்ததற்காக 105 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து, குட் பேட் அக்லி படத்திற்காக, 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Actor Ajith
6/6
இந்நிலையில், தல அஜித் குமாருக்கு ஒட்டுமொத்தமாக 400 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.  பல்வேறு வகையான கார்கள் மற்றும் பைக்குகளை ஓட்டும் இவரிடம், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஓட்டும் லைசென்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+